Year Ender 2024: எங்கே டூர் போகலாம்? – இந்தியர்கள் அதிகம் தேடிய டாப் 5 இடங்கள்!

2024 ஆம் ஆண்டு இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட இடங்களை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் இணையத்தில் அதிகம் தேடியே இந்திய இடங்களின் பட்டியலில் எந்தெந்த இடங்கள் டாப்பில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Year Ender 2024: எங்கே டூர் போகலாம்? - இந்தியர்கள் அதிகம் தேடிய டாப் 5 இடங்கள்!

கோப்புப் படம் (Photo Credit: Pinterest)

Published: 

14 Dec 2024 12:22 PM

மணாலி: இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் குலு மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த மணாலி. மலைகளால் சூழப்பட்டு பனிப்பொழியும் இந்த அழகுமிக்க இடம்தான் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட இந்திய இடங்களில் முதல் இடத்தில் உள்ளது. இந்த இடத்தை அதிக அளவில் இமாச்சலப் பிரதேச மாநில மக்கள் தான் இணையத்தில் அதிக அளவில் தேடியுள்ளனர்.

பனி நிறைந்த மலைகள், சோலாங் பள்ளத்தாக்கு, ஜோக்னி நீர்வீழ்ச்சி, ஹிமாலயன் நைன்மபா புத்த மடாலயம், மனு கோயில், ஹடிம்பா தேவி கோயில், கிரேட் ஹிமாலயன் தேசிய பூங்கா, இமாச்சல் கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புற கலை அருங்காட்சியகம், வான் விகார் தேசிய பூங்கா, நாகர் கோட்டை, ரோஹ்தாங் லா, பிருகு ஏரி‌ என ஏராளமான மனதை மயக்கும் சுற்றுலா தளங்கள் இங்கு உள்ளது.

ஜெய்பூர்:

இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகராக விளங்கக்கூடிய ஜெய்ப்பூர் இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்ட இந்திய இடங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் மாநில மக்கள் இந்த நகரம் பற்றி அதிக அளவில் இந்த ஆண்டில் இணையத்தில் தேடியுள்ளனர்.ஜெய்பூர் இளஞ்சிவப்பு நகரம் என்று அழைக்கப்படுவது உண்டு. இங்கு ஆம்பர் கோட்டை, நாகர்கர் கோட்டை, ஜெய்கர் கோட்டை, ஜெய்பூர் நகர அரண்மனை, அவ மஹால், சல் மஹால், ஜந்தர் மந்தர், சாந்த் பௌரி, சாங்கிலி திகம்பர சமண கோயில் ஆகிய சுற்றுலா தளங்களை கண்டு மகிழலாம். இந்த நகரம் இந்தியாவின் பாரிஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

அயோத்தி:

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்ட இந்திய இடங்களில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அயோத்தி பற்றி டெல்லி மாநில மக்கள் அதிக அளவில் இந்த ஆண்டு இணையத்தில் தேடி உள்ளனர். 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 110 மில்லியன் மக்கள் இங்கு சென்று உள்ளனர்.‌ நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய இடமாக இருந்த பாபர் மசூதி, ராமர் கோயில் இடம் இங்கு உள்ளது.

Also Read: இந்தியர்களால் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வெளிநாடுகளின் பட்டியல்.. லிஸ்ட் இதோ!

இங்கு ஹனுமன் கர்ஹி கோட்டை, ராம் கோட், நாகேஸ்வர்நாத் கோயில், கனக் பவன் கோயில், சரயு நதி, விஜயராகவ மந்திர் ஆகிய இடங்களை இங்கு காணலாம்.

காஷ்மீர்:

இந்தியாவின் அழகு மிகுந்த இயற்கை வளம் கொண்ட காஷ்மீர் இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்ட இந்திய இடங்களில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த இடத்தைப் பற்றி அதிகம் ஜம்மு & காஷ்மீர் மக்கள் அதிகளவில் இணையத்தில் தேடியுள்ளனர்.‌

ஸ்ரீநகர், குல்மார்க், தால் ஏரி, பீடாப் பள்ளத்தாக்கு, சுரேஷ் பள்ளத்தாக்கு ஆகியவை இங்கு பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்கள் ஆகும். ஆண்டுக்கு ஆண்டு இங்கு சுற்றுலா செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது.  கடந்த ஆண்டு மட்டும் 21 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இங்கு சென்று உள்ளனர்.

Also Read: Top 10 தமிழ் Hit Song: மனசிலாயோ பாடலுக்கு எந்த இடம்?

தெற்கு கோவா:

கோவா மாநிலத்தில் இருக்கும் இரண்டு மாநிலங்களில் ஒரு மாநிலம் தெற்கு கோவா. இந்த இடம்தான் இந்திய மக்களால் அதிகம் இணையத்தில் தேடப்பட்ட இந்திய இடங்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பல இளைஞர்கள் கோவாவிற்கு ஒரு முறையாவது சென்று விட வேண்டும் என்பது பல நாள் கனவாக இருக்கும். அதிலும் குறிப்பாக தெற்கு கோவா அனைவரது விருப்பமாகவும் இருக்கிறது. அமைதியான சூழல், சொகுசான தங்குமிடம், ஓய்வு ஆகியவற்றை விரும்புபவருக்கு தெற்கு கோவா ஒரு சரியான தேர்வாக இருக்கும்.

பாலோலம் கடற்கரை, அகோண்டா கடற்கரை, கோலா கடற்கரை, பட்டர்ஃபிளை கடற்கரை, கபோ டி ராமா கோட்டை, நேத்ராவலி வனவிலங்கு பூங்கா, சால் ஆறு போன்றவற்றை இங்கு கண்டு கழிக்கலாம்.ஆண்டுதோறும் சுமார் 7 மில்லியன் உள்நாட்டுப் பயணிகளும் 1,70,000 வெளிநாட்டு பயணிகளும் இங்கு சுற்றுலா வருகின்றனர்.

ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும் - உங்களுக்கு தெரியுமா?
பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் சில முக்கிய பழக்கங்கள்!
கிறிஸ்துமஸ் கொண்டாட சிறந்த இடங்கள்!
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தர வேண்டிய அறிவுரைகள்!