5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Year Ender 2024: உலகின் டாப் 5 பணக்காரர்கள்! – அம்பானிக்கு எத்தனாவது இடம் தெரியுமா?

Top 5 Richest Family: 2024 ஆம் ஆண்டுக்கான உலக பணக்கார குடும்பத்தின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பணக்கார குடும்பம் என்றால் அம்பானி குடும்பம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உலக அளவில் பணக்கார குடும்ப பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குடும்பம் எது? அந்த பட்டியலில் அம்பானி குடும்பத்தின் இடம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

Year Ender 2024: உலகின் டாப் 5 பணக்காரர்கள்! – அம்பானிக்கு எத்தனாவது இடம் தெரியுமா?
அம்பானி குடும்பம் மற்றும் வால்டன் குடும்பம் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 17 Dec 2024 05:00 AM

2024 ஆம் ஆண்டு உலக பணக்கார குடும்பத்தின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற வால்மார்ட்டின் உரிமையாளர்களான வால்டர் குடும்பம் 2024 ஆம் ஆண்டு உலக பணக்காரப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு 432.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலோன் மாஸ்க் மற்றும் மத்திய கிழக்கு அரசு குடும்பங்களை விடவும் அதிகமானது. இந்த உலக பணக்கார குடும்ப பட்டியலில் இரண்டு இந்திய குடும்பங்களும் குறிப்பிடத்தக்க இடங்களை பிடித்துள்ளனர். உலக அளவில் டாப் இடங்களை பிடித்துள்ள பணக்கார குடும்பங்களின் பட்டியலையும் அம்பானி குடும்பத்தின் இடத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

வால்டன் குடும்பம்:

இந்த ஆண்டு வால்மார்ட் பங்குகள் 80 சதவீதம் அதிகரித்தது. இதன் காரணமாக வால்டன் குடும்பம் உலக பணக்கார குடும்ப பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. அதன்படி அவர்களின் சொத்து மதிப்பில் 172.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளது. அவர்களின் நிதிநிலை ஒரு நாளுக்கு தோராயமாக 473.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்தது. உலக அளவில் 10,600 ஸ்டோர்களை இவர்கள் இயக்கி வருகிறார்கள்.

அல் நஹ்யான் குடும்பம்:

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் அல் நஹ்யான் குடும்பம் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தை சார்ந்த இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு 323.9 பில்லியன் டாலராக உள்ளது. எண்ணெய் வளங்கள் நிறைந்த ஐக்கிய அமீரகத்தை ஆட்சி செய்யும் இந்த குடும்பம் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேலும் அபுதாபியில் சில வணிகங்கள் செய்து வருகின்றனர்.

Also Read: World Year Ender 2024: நிபா முதல் ஜிகா வரை.. உலகை உலுக்கிய டாப் 5 கொடிய நோய்கள்!

அல் தானி குடும்பம்:

கத்தார் அரசு குடும்பமான அல் தானி குடும்பம் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இவர்களுக்கான வருவாய் கடல் எரிவாயு மற்றும் எண்ணெய் வளத்திலிருந்து வருகிறது. இந்த அரசு குடும்பம் எட்டு தலைமுறைகளை கொண்டுள்ளது. மேலும் ஓட்டமான்கள் மற்றும் ஆங்கிலேயே சாம்ராஜ்யங்களை எதிர்கொண்டது.

ஹெர்மிஸ் குடும்பம்:

பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த நிறுவனமான ஹெர்மேஸின் உரிமையாளர்கள் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளனர். இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு 170.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்த நிறுவனத்தை ஆறு தலைமுறையினர் நிர்வாகித்து வருகின்றனர். இந்த நிறுவனம் உயர்தரமான ஃபேஷன் மற்றும் ஆபரணங்களுக்கு பெயர் பெற்றது.

கோச் குடும்பம்:

அமெரிக்காவைச் சார்ந்த கோச் குடும்பம் இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளனர். இவர்களின் குடும்ப சொத்து மதிப்பு 148.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். எண்ணெய் வணிகம் மற்றும் பல்வேறு தொழில்கள் மூலம் இவர்களுக்கு வருவாய் கிடைக்கிறது.

அம்பானி குடும்பம்:

இந்த பட்டியலில் இந்தியாவின் அம்பானி குடும்பம் எட்டாவது இடத்தில் உள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு 99.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்தியாவில் வணிகத் துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த குடும்பத்தின் முதன்மை நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகும்.

Also  Read: Year Ender 2024: 2024ல் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட உணவுகள் எது தெரியுமா?

மிஸ்திரி குடும்பம்:

இந்திய குடும்பமான ஷபூர்ஜி‌ பல்லோன்ஜி குழுமத்தின் உரிமையாளர்களான மிஸ்திரி குடும்பம் இந்த பட்டியலில் 23 வது இடத்தில் உள்ளது. இவர்களின் குடும்பச் சொத்து மதிப்பு 41.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

Latest News