Exercise: ஜிம்மிற்கு செல்லாமல் தொப்பையை குறைக்க வேண்டுமா..? இந்த உடற்பயிற்சியை வீட்டிலேயே செய்யுங்கள்! - Tamil News | Lose weight by doing these exercises at home without going to the gym | TV9 Tamil

Exercise: ஜிம்மிற்கு செல்லாமல் தொப்பையை குறைக்க வேண்டுமா..? இந்த உடற்பயிற்சியை வீட்டிலேயே செய்யுங்கள்!

Published: 

18 Oct 2024 19:58 PM

Exercise Benefits: பிளாங்க் உடற்பயிற்சி உங்கள் எடையை குறைக்க பெரிதும் உதவி செய்யும். பிளாங்க் என்பது வேறு எதுவும் கிடையாது, உங்கள் முழங்கை முதல் விரல்களை வரை தரையில் ஊன்றி, உடல்களை உயர்த்தி மேற்கொள்ளப்பட்டு பயிற்சியாகும். இந்த பயிற்சி உங்கள் தசையை வலிமையாக்குவது மட்டுமின்றி, தொப்பை கொழுப்பை குறைக்கவும் உதவும்.

1 / 6தினசரி

தினசரி ஜிம்மிற்கு சென்றும் உடல் எடையும் குறையவில்லை, தொப்பையும் குறையவில்லை என்று பலரும் கவலைபடுகின்றனர். ஆனால், சில உடற்பயிற்சிகளை மேற்கொண்டு நீங்கள் வீட்டிலேயே உடல் எடையை குறைக்கலாம். அந்தவகையில் உடல் எடையை குறைக்கும் 5 உடற்பயிற்சியை இங்கே பார்ப்போம்.

2 / 6

பிளாங்க் உடற்பயிற்சி உங்கள் எடையை குறைக்க பெரிதும் உதவி செய்யும். பிளாங்க் என்பது வேறு எதுவும் கிடையாது, உங்கள் முழங்கை முதல் விரல்களை வரை தரையில் ஊன்றி, உடல்களை உயர்த்தி மேற்கொள்ளப்பட்டு பயிற்சியாகும். இந்த பயிற்சி உங்கள் தசையை வலிமையாக்குவது மட்டுமின்றி, தொப்பை கொழுப்பை குறைக்கவும் உதவும்.

3 / 6

ஸ்குவாட்ஸ் பயிற்சி உங்கள் தொப்பையை குறைப்பது மட்டுமல்லாமல், தொடைகள், இடுப்பு மற்றும் கால்களின் தசைகளுக்கு வலிமையை கொடுக்கும். எனவே, தினசரி நீங்கள் பயிற்சியை மேற்கொள்ளும்போது ஸ்குவாட்ஸ் பயிற்சியை தவறாமல் செய்வது நல்லது. ஆரம்பத்தில் பத்து பத்து செட்டாக மூன்று செட் செய்யுங்கள். அதன்பின், படிப்படியாக உயர்த்தி 15 ஆகவும் பின்னர் 20 ஆகவும் அதிகரிக்கவும்.

4 / 6

உடல் எடையை குறைக்க ஜம்பிங் ஜாக்ஸ் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். இது உங்கள் முழு உடலுக்கும் சிறந்த பலனை தரும். தினசரி ஜம்பிங் ஜாக்ஸ் செய்வதன்மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயத்திற்கு நன்மை தரும்.

5 / 6

சிறுவயதில் ஸ்கிப்பிங் ஒரு விளையாட்டாக விளையாடப்பட்டாலும், அதுவும் ஒரு சிறந்த பயிற்சியாகும். ஸ்கிப்பிங் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவி செய்யும். இது உங்களுக்கு விரைவாக தொப்பையை குறைத்து, இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பையும் கரைக்கும். மேலும், இடுப்பு மற்றும் கால் தசைகளை பலப்படுத்தும்.

6 / 6

ஜாக்கிங் செய்ய பலரும் விரும்புவது கிடையாது. ஆனால், உடல் எடையை குறைக்க உங்கள் அன்றாட ஓடுவது நல்லது. உங்களால் குறிப்பிட்ட நேரம் ஓட முடியவில்லை என்றால், வேகமாக நடக்கலாம். இவை எடையை குறைப்பது மட்டுமின்றி, இதயத்தை ஆரோக்கியமாகவும், நுரையீரலை வலுப்படுத்தவும் உதவி செய்யும்.

தினசரி சாப்பிடும் காபி, டீயில் சர்க்கரை சேர்க்கவில்லை என்றால் என்ன ஆகும்?
பப்பாளி பழத்துடன் இந்த உணவு வகைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது!
அசத்தலான புதிய அம்சங்களை அறிமுகம் செய்த யூடியூப்!
பப்பாளியை அதிகமாக எடுத்துக்கொள்வதை ஏன் தவிர்க்க வேண்டும் தெரியுமா?