5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Lung Health: நுரையீரலை பாதுகாக்க வேண்டுமா..? இந்த உணவுகளை எடுத்து கொள்வது மிக முக்கியம்!

Health Tips: நுரையீரல் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். சுவாச மண்டலத்தை மேம்படுத்துவதற்கு நுரையீரல் உடலின் முக்கிய பகுதியாகும். அதே நேரத்தில், இரத்த நாளங்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்க நுரையீரலின் செயல்பாடு மிக முக்கியம். எனவே நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். நுரையீரலை பாதுகாக்க உணவு முக்கிய பங்கு வகிக்கிறது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். அந்த வகையில், நுரையீரலைப் பாதுகாக்கும் உணவுகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Lung Health: நுரையீரலை பாதுகாக்க வேண்டுமா..? இந்த உணவுகளை எடுத்து கொள்வது மிக முக்கியம்!
நுரையீரல் ஆரோக்கியம்
mukesh-kannan
Mukesh Kannan | Published: 28 Aug 2024 11:51 AM

நுரையீரல் ஆரோக்கியம்: இன்றைய காலக்கட்டத்தில் பல உடல்நல பிரச்சனைகள் உங்களை ஆட்கொண்டு பல தொந்தரவுகளை தரும். அதனால், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது மிக மிக முக்கியம். நுரையீரல் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். சுவாச மண்டலத்தை மேம்படுத்துவதற்கு நுரையீரல் உடலின் முக்கிய பகுதியாகும். அதே நேரத்தில், இரத்த நாளங்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்க நுரையீரலின் செயல்பாடு மிக முக்கியம். தூசி, புகை மற்றும் மாசு காரணமாக பல நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் காற்றின் தரக் குறியீடு குறைந்த அளவை காட்டுகிறது. மோசமான காற்றின் காரணமாக மக்கள் சுவாசிப்பதில் சிரமப்படுகின்றனர். இது நுரையீரல் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி நுரையீரலில் சளி, நிமோனியா, காசநோய், ஆஸ்துமா, புற்றுநோய், மூச்சுத் திணறல், நுரையீரல் தொற்று போன்ற பிரச்சனைகளை தருகிறது.

ALSO READ: Health Tips: மலச்சிக்கலுக்கு மகத்தான மருந்து வெற்றிலை தண்ணீர்! எளிதாக தயாரிப்பது எப்படி..?

எனவே நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். நுரையீரலை பாதுகாக்க உணவு முக்கிய பங்கு வகிக்கிறது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். அந்த வகையில், நுரையீரலைப் பாதுகாக்கும் உணவுகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

  • தினமும் கேட்டசின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்ட கிரீன் டீ குடிப்பதால் நுரையீரல் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி ஆரோக்கியமும் மேம்படும்.
  • சால்மன் மீன் மற்றும் அக்ரூட் பருப்புகள் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. இது உடலின் வீக்கத்தைக் குறைக்கவும், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீரைகளை அதிகளவில் எடுத்துகொள்வது நல்லது.  கீரைகளில் உள்ள அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நுரையீரல் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.
  • ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நுரையீரல் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது.
  • பீட்ரூட், தக்காளி, பீன்ஸ் மற்றும் ஆளி விதைகளும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
  • ஆப்பிளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள், பீட்டா கரோட்டின், வைட்டமின்கள் சி மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. இவை நுரையீரல் செயல்பாடு குறைவதைக் குறைத்து, சிஓபிடியின் அபாயத்தைக் குறைக்கின்றன.
  • மஞ்சளில் உள்ள இம்யூனோஸ்டிமுலண்ட் தன்மை சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே, தினசரி உணவில் மஞ்சளை எடுத்துக்கொள்வது நல்லது.

மேலும் சில..

வைட்டமின் சி மற்றும் ஈ:

உடலில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ குறைபாடு காரணமாகவே, சுவாச நோய் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. வைட்டமின் ஈ உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனைகளை சரி செய்யலாம். வைட்டமின் ஈ- இல் உள்ள ஆண்டி – ஆக்ஸிடண்ட்கள் நுரையீரலை வலுப்படுத்தவதோடு, வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.

வைட்டனின் சி நிறைந்த உணவுகளான சிட்ரஸ் பழங்கள், கொய்யா, பாதாம் போன்றவை நுரையீரலுக்கு ஆரோக்கியத்தை தரும்.

ALSO READ: Benefits Of Bananas: தினமும் 2 வாழைப்பழம் போதும்.. மூளை முதல் வயிறு வரை அனைத்தையும் பாதுகாக்கும்!

வைட்டமின் டி:

சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் வைட்டமின் டி, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளிலிருந்து உடலை பாதுகாக்கிறது. மேலும், இது நுரையீரல் திசுக்களை சேதப்படுத்தும் உடலில் உள்ள சேர்மங்களையும் வைட்டமின் டி அழிக்கிறது. வைட்டமின் டி நிறைந்த உணவுகளை பயன்படுத்துவதால், சிஓபிடி நோயாளிகளுக்கு நுரையீரல் தாக்குதலில் அபாயத்தை 45 சதவீதம் குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். வைட்டமின் டி உங்களுக்கு தேவை என்றால் காளான்கள், ஓட்ஸ், தானியங்கள், மீன், பால் மற்றும் தயிர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

Latest News