5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips : மோசமான தூக்கம்.. பசியின்மை.. மெக்னீசியம் குறைபாட்டால் ஏற்படும் சிக்கல்கள்!

தூக்கம் : சமீபத்திய ஆய்வு ஒன்று நடத்தப்பட்ட சோதனையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரவில் ஆந்தையைப் போல உறங்காமல் இருப்பவர்களுக்கு மனநல பிரச்சினைகள் ஆரம்பித்து உடல் உபாதைகள் நிறைய ஏற்பட்டுள்ளது. 20% முதல் 40 சதவீதம் வரை உள்ள மக்களுக்கு இதை கண்டறிந்துள்ளனர்.

Health Tips : மோசமான தூக்கம்.. பசியின்மை.. மெக்னீசியம் குறைபாட்டால் ஏற்படும் சிக்கல்கள்!
தூக்கம்
Follow Us
c-murugadoss
CMDoss | Updated On: 04 Jul 2024 15:06 PM

மெக்னீசியம் : மோசமான தூக்கம் மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் நம் உடலில் மெக்னீசியம் குறைபாடு இருக்கலாம் என்று சில ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இதற்கு நல்ல சத்துள்ள உணவை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். இப்போது உடலில் மெக்னீசியத்தை அதிகரிக்க என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம். நம் உடல் கட்டுக்கோப்பாக இருக்க, உடலில் மெக்னீசியம் அதிகமாக இருக்க வேண்டும். கார்போ ஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்களிலிருந்து ஆற்றலைப் பெறுவதற்கு மெக்னீசியம் முக்கியமாகப் பயன்படுகிறது. இது நல்ல ஆற்றலையும் நல்ல தூக்கத்தையும் தருகிறது. இரத்த சர்க்கரை மற்றும் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகிறது. போதுமான அளவு மெக்னீசியம் இல்லாதது, உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

Also Read :  அடிக்கடி முடி கொட்டுதா? அப்போ இதை ஃபாலோ பன்னுங்க..!

மெக்னீசியம்

மனித உடலில் மெக்னீசியம் குறைபாடு இருந்தால், பசி இருக்காது. குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படலாம். அவையும் மந்தமானவை. இதயத் துடிப்பில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. மங்கலான பார்வை மற்றும் தசை வலி ஆகியவற்றுடன், மன அழுத்தம் அதிகரிக்கிறது. தூக்கம் சரியில்லை, உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. ஆஸ்துமா நோயாளிகள் மெக்னீசியம் குறைபாடு மற்றும் இந்த பிரச்சனை மிகவும் கடுமையானதாகிறது.

உடலில் மெக்னீசியத்தை அதிகரிக்க பச்சைக் காய்கறிகள், அவகேடோ, வாழைப்பழம், ராஸ்பெர்ரி, அத்திப்பழம் போன்ற பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இவை தவிர, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், பச்சை பட்டாணி மற்றும் முளைகளிலும் மக்னீசியம் உள்ளது. மக்னீசியம் பழுப்பு அரிசி, ஓட்ஸ், கடல் உணவுகளில் காணப்படுகிறது.

மெக்னீசியம் உடலில் உடனடியாக உற்பத்தியாக வேண்டும் என்றால் ஒரு கப் காபி குடிப்பது அல்லது டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் என்கின்றனர் நிபுணர்கள். மெக்னீசியம் குறைபாட்டை உடனடியாக கவனிக்காவிட்டால் நோய் வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சப்ஜா நட்ஸ், புரதம், கால்சியம், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுப் பொருட்களை அதிகம் உட்கொண்டால் உடலில் மெக்னீசியம் குறையாது என்கின்றனர் நிபுணர்கள்.

Also Read : சரும பொலிவு முதல் வைரஸ் காய்ச்சல் வரை … அனைத்திற்கும் ஒரே தீர்வு

தூக்கம் முக்கியம்

தினமும் இரவு ஒரு மணிக்கு மேல் உறங்குபவர்களுக்கு சமீபத்தில் ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் போன்று வெளியாகி உள்ளது. இரவு ஒரு மணிக்கு மேல் தினமும் உறங்குவதினால் வனச் சோர்வு அதிகமாகி மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் கூறியுள்ளனர். சமீபத்திய ஆய்வு ஒன்று நடத்தப்பட்ட சோதனையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஒவ்வொருவருக்கும் பலவிதமான பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரவில் ஆந்தையைப் போல உறங்காமல் இருப்பவர்களுக்கு மனநல பிரச்சினைகள் ஆரம்பித்து உடல் உபாதைகள் நிறைய ஏற்பட்டுள்ளது. 20% முதல் 40 சதவீதம் வரை உள்ள மக்களுக்கு இதை கண்டறிந்துள்ளனர்.

இரவில் நேரம் சென்று உறங்குபவர்கள் காலை குறித்த நேரத்தில் எழுவது இல்லை. ஆதலால், அவர்களுடைய மூளை சுறுசுறுப்பாக இயங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 7 முதல் 9 மணி நேரம் உறங்குவது மனித உடலுக்கு அவசியமானதாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றன. இரவில் நேரம் சென்ற பின்னர் தூங்குவது உடல் நலத்திற்கும் மனநலத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது

Latest News