5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தண்ணீர் குடிக்கும்போது செய்யக்கூடாத விஷயங்கள் என்ன தெரியுமா?

Effects of Drinking Water: நமது உடம்பிற்கு தேவையான முக்கியமான விசயங்களில் ஒன்று தண்ணீர். நாம் எடுத்துக் கொள்ள கூடிய உணவுகளில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புகள் போன்ற சத்துக்கள் நன்றாக செரிமானம் ஆகுவதற்கு தண்ணீர் அவசியமான ஒன்றாகும். தண்ணீர் நமது உடம்பிற்கு தேவை என்பதற்காக அதை நினைத்த நேரமெல்லாம் அருந்தக்கூடாது. அதற்கென்று சில வழிமுறைகள் உள்ளது.

தண்ணீர் குடிக்கும்போது செய்யக்கூடாத விஷயங்கள் என்ன தெரியுமா?
தண்ணீர் (Image : Getty)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 19 Sep 2024 21:23 PM

நமது உடம்பிற்கு தேவையான முக்கியமான விசயங்களில் ஒன்று தண்ணீர். நாம் எடுத்துக் கொள்ள கூடிய உணவுகளில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புகள் போன்ற சத்துக்கள் நன்றாக செரிமானம் ஆகுவதற்கு தண்ணீர் அவசியமான ஒன்றாகும். தண்ணீர் நமது உடம்பிற்கு தேவை என்பதற்காக அதை நினைத்த நேரமெல்லாம் அருந்தக்கூடாது. அதற்கென்று சில வழிமுறைகள் உள்ளது. தண்ணீர் அருந்துவதில் நாம் செய்யும் தவறுகள் பற்றி பார்க்கலாம்.

செய்யக்கூடாதவை:

பொதுவாக உணவு அருந்துவதற்கு முன்பு அல்லது உணவு அருந்திய பின்பு தண்ணீர் குடிப்பது வழக்கம். அசைவ உணவுகள் உண்ட பிறகு அல்லது வயிறு நிறைய உணவுகளை உண்ட பிறகு தண்ணீர் தாகம் எடுப்பது இயல்பு. ஆனால் இது தண்ணீர் குடிப்பதற்கு சரியான முறை அல்ல. நாம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கும் பொழுது நம் உடம்பில் இருக்கக்கூடிய செரிமான அமிலங்கள் தண்ணீருடன் கரைந்து விடுகிறது. இதனால் செரிமானம் சார்ந்த பிரச்சினைகள் வருகிறது.

வயிற்றில் காற்று உருவாகுதல், வயிறு உப்பிசம், அசிடிட்டி போன்றவை ஏற்படுகிறது. மேலும் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கும் பொழுது, உண்ட உணவில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புகள் இவை எதுவும் சரியாக செரிமானம் ஆகாது. இதனால் உடம்பிற்குத் தேவையான சத்துகள் கிடைக்காது.

சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்றினால் தண்ணீரால் வாயை கொப்பளித்தால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் சற்று குறையும். சாப்பிட்ட பிறகே சுமார் 40 நிமிடங்கள் கழித்து தண்ணீர் அருந்த வேண்டும்.

வெயிலில் சுற்றி விட்டு வந்தாலோ அல்லது உடற்பயிற்சி செய்துவிட்டு வந்தாலும் தண்ணீரை மடமடவென்று அருந்துவோம். உடற்பயிற்சி செய்தாலோ வெயிலில் அலைந்தாலோ நம் உடலில் இருந்து அதிகமான வியர்வை வெளியில் வரும். வேர்வையில் அதிகம் சோடியம் மற்றும் தண்ணீர் இருக்கும். அதனால் உடனடியாக தண்ணீரை அருந்தும் போது செல்களில் இருக்கக்கூடிய சோடியம் அதிகமான தண்ணீரை ஈர்க்கும்.

அதனால் செல்கள் வீக்கம் அடையும். இது நமது உடம்பிற்கு நல்லது இல்லை என்பதால் இந்த நேரங்களில் தண்ணீரை மடமடவென குடிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும்.

Also Read: வெறும் வயிற்றில் காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

குளிரூட்டப்பட்ட தண்ணீரை குடிப்பதும் நமது உடம்பிற்கு ஆரோக்கியம் இல்லை. குளிர்சாதன பெட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து குடிக்கும் பொழுது உணவுக் குழாய்களில் இருக்கக்கூடிய ரத்தநாளங்கள் சுருக்கி விடுகிறது. இதனால் செரிமானம் பாதிக்கப்படுகிறது. மேலும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டுவிட்டு குளிர்ந்த நீரை அருந்தினால் உண்ட உணவுகள் கட்டிகளாக மாறுகிறது. இதனால் உணவு குழாய்களில் இருக்கக்கூடிய அமிலங்கள் இந்த கட்டியான கொழுப்பை செரிமானம் செய்வதற்கு சிரமப்படுகிறது.

இது போன்று தண்ணீர் குடிப்பதால் எளிதாக முட்டி வலி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகிறது. குளிர்ந்த நீரை குடிப்பதால் இதயத்துடிப்பை கட்டுப்படுத்தக்கூடிய வேகஸ் என்னும் நரம்பு தூண்டப்பட்டு இதயத்துடிப்பை குறைக்கிறது. எனவே எப்பொழுதும் அறை‌வெப்ப நிலையில் இருக்கும் தண்ணீரை அருந்துவதே சிறந்ததாகும்.

அடுத்தது அதிகமாக தண்ணீர் குடிப்பது. ரொம்ப அதிகமாக தண்ணீர் குடிப்பதும் உடலுக்கு ஆபத்தானது. 60 லிருந்து 90 மிலி தண்ணீரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பது நல்லது என்று குடலியல் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் இது போல் தினமும் தண்ணீர் அருந்த வேண்டும்.

தாகம் எடுக்கும் வரை காத்திருந்தால் நமது உடம்பு நீரிழப்பை சந்திக்கும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது, உதடுகள் காய்ந்து போவது, சருமங்கள் காய்ந்து போவது, உடலில் சக்தி இல்லாதது போல் உணர்வது, மூச்சு அதிகமாக வாங்குதல் போன்றவைகள் நீரிழப்பின் அறிகுறிகள் ஆகும்.

எனவே ஒரே நேரத்தில் மடமடவென அதிகமான தண்ணீரை குடிக்காமல் தினமும் ஒரு மணி நேர இடைவெளியில் துளித்துளியாக தண்ணீர் குடிப்பது உடம்பிற்கு நல்லது.

தண்ணீரை நின்று கொண்டோ நடந்துகொண்டோ ஓடிக்கொண்டோ குடிப்பது மிகவும் தவறு. எப்பொழுதும் தண்ணீர் குடிக்கும் பொழுது அமர்ந்து தான் குடிக்க வேண்டும். நின்று கொண்டு நடந்து கொண்டு தண்ணீர் குடிக்கும் பொழுது நமது தசைகள் மற்றும் நரம்பு மண்டலம் அழுத்தத்தை சந்திக்கும்.

எனவே அமர்ந்து கொண்டு தண்ணீர் குடித்தால் நமது தசைகள் மற்றும் நரம்பு மண்டலங்கள் நிதானமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

Also Read: இந்த உணவெல்லாம் சாப்பிட்டால் உங்கள் பற்களின் நிறம் மாறும்! கவனமாக இருங்கள்…

Latest News