5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Mathi Fish: நினைவாற்றலை அதிகரிக்கும் மத்தி மீன்.. எத்தனை நாளைக்கு ஒருமுறை சாப்பிடலாம்?

மீன் வகைகளிலேயே மத்தி மீனில் தான் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் பல ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன. இதன் ஸ்பெஷாலிட்டியே இதில் பாதரசம் அதிகமாக இருக்காது. அதனால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறைக்கூட சாப்பிடலாம். தற்போது மத்தி சாப்பிடுவதால் உடலுக்கும் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

Mathi Fish: நினைவாற்றலை அதிகரிக்கும் மத்தி மீன்.. எத்தனை நாளைக்கு ஒருமுறை சாப்பிடலாம்?
மத்தி மீன்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 17 Jul 2024 15:10 PM

மீன்களில் பலவகை இருக்கின்றன, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகின்றன. ஆனால், மீன் வகைகளில் சில வகை மீன்களை மட்டுமே மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதனால், மற்ற மீன்களின் ஊட்டச்சத்து பற்றி தெரியாமலே போய்விடுகிறது. அப்படி, பலருக்கும் தெரியான மீன்களில் ஒன்று தான் மத்தி. இந்த மீனில் மற்ற மீன்களுடன் ஒப்பிடும்போது உடலுக்கு நன்மை செய்யும் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இந்த மீனை சாப்பிட்டு வருவதால், உடலுக்கு அத்துனை நன்மைகள் கிடைக்கின்றன.

Also Read: IQ Test : எந்த ஷூவுக்கு ஜோடி இல்லை.. 6 நொடிக்குள் கண்டிபிடிக்க முடியுமா?

மினுமினுப்பான சருமத்துக்கு

சருமத்தின் மினுமினுப்புக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தேவையான ஒரு சத்தாகும். அந்த சத்து இந்த மத்தி மீனில் அதிகமாகவே இருக்கிறது. இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் தோல் சம்பந்தமான நோய்கள் வராது. தோல் சுருக்கங்கள், கோடுகள் நீக்கி, இளமையான சருமத்தை கொடுக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு

மத்தியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ளது. எனவே, சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த மத்தி மீனை வாரத்தில் 2 முறையாவது சாப்பிட்டு வந்தால், உடலில் இன்சுலின் எதிர்ப்பை குறைத்து நீரிழிவை கட்டுக்குள் வைக்கலாம். மேலும், சர்க்கரை நோய் வராக்கூடாது என்று நினைப்பவர்களும் இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டு வாங்கள். 

Also Read: Dry Dates Benefits: ஊற வைத்த பேரீட்சை பழம் சத்துகள்.. காலையில் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா?

கூர்மையான பார்வைக்கு

மத்தி மீனில் கண்பார்வைக்கு முக்கியமான ஊட்டச்சத்தான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களை அதிகளவில் இருக்கிறது. குறிப்பாக, லேப்டாப்பில் அதிகமாக வேலை செய்பவர்கள் இந்த மத்தி மீனை கண்டிப்பாக சாப்பிடுங்கள். இது, கண் வறட்சி, கண் எரிச்சல், கண் அரிப்பு போன்ற கண் சார்ந்த பிரச்சனைகளை போக்கும். மேலும், வயதானவர்களுக்கு ஏற்படும் மாகுலர் சிதைவு உள்ளிட்ட கண் நோய்களுக்கான அபாயத்தைக் குறைக்கும்.

இதய நோய்கள் வராது

உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகளை கரைக்கக்கூடிய ஒமேகா-3 கொழுப்புகள் மத்தி மீனில் அதிகமாக இருக்கிறது. இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த ஓட்டம் அதிகரித்து, இதயம் ஆரோக்கியமாக செயல்பட தேவையான இரத்தம் கிடைக்கும். அதோடு, இரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். இதனால், மாரடைப்பு, பக்கவாதம், தமனி அடைப்பு போன்ற இதய நோய்கள் வராது.

நினைவாற்றல் அதிகரிக்க

மனச் சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றை குறைக்கும் தன்மை ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களுக்கு உண்டு. இந்த ஊட்டச்சத்து நிறைந்த மத்தி மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மூளையில் டோபமைன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால், மூளை ஆரோக்கியமாக செயல்படும். வயதானவர்கள் இந்த மீனை அதிகமாக சாப்பிட்டு வருவது நல்லது. 

Latest News