மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள் இதுதான்! நோட் பண்ணுங்க! - Tamil News | | TV9 Tamil

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள் இதுதான்! நோட் பண்ணுங்க!

Updated On: 

13 May 2024 16:37 PM

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

1 / 6பெண்கள்

பெண்கள் தங்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கை மாதவிடாய் சுழற்சியோடு கடந்த செல்கின்றனர். அதேநேரத்தில் பிறப்புறுப்பு சுகாதாரம் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியம். குறிப்பாக, மாதவிடாய் நாட்களில் அவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

2 / 6

பெரும்பாலான பெண்கள் செய்யும் தவறு ஒரு நாள் முழுக்க ஒரு சானிட்டரி நாப்பின்களை வைத்து இருப்பது தான். காலையில் ஒரு நாப்கின் வைத்தால் இரவு வரை மாற்றாமல் இருப்பது மிகவும் மோசனை பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, குறைந்தபட்சம் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்பின்களை மாற்ற வேண்டும்

3 / 6

பிறப்புறுப்பை சுத்தம் செய்வதற்கு நறுமன லிக்விடுகள் மற்றும் சோப்புகைளை பயன்படுத்துகிறார்கள். அது மிகவும் தவறானது. பிறப்புறுப்பு பகுதியை வெறும் தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். வேறு எந்த ஒரு நறுமன பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

4 / 6

மாதவிடாய் நாட்களில் ஒவ்வொரு முறை நாப்கின்களை மாற்றியபிறகும் கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். நாப்கின்களை மாற்றுவதற்கு முன்பும், பின்பும் என இரண்டு முறையும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

5 / 6

பொதுவாக ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை மாதவிடாய் நாட்களிலும் பெண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

6 / 6

சிலர் சானிட்டரி நாப்கின்களுக்கு பதிலாக மென்சுரல் கப்களை பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தும்போது, அவற்றை சுடுதண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கு அதனை சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

Follow Us On
இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version