Monsoon Prevention: மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க வேண்டுமா..? இதை பின்பற்றினால் போதுமானது!
Monsoon Health Tips: சமையலறையில் இருக்கும் பொருட்கள் இயற்கையாகவே பல மருத்துவ பண்புகளை கொண்டதாக இருக்கிறது. ஆனால், இந்த மருத்துவ பண்புகளை பற்றி நாம் முழுவதுமாக தெரிந்து கொள்வது கிடையாது. இந்த மசாலா பொருட்கள் குளிர் மற்றும் மழைக்காலத்தில் சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் தரும்.
தற்போது வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழையின் தாக்கம் அதிகரிக்க தொடங்குகிறது. இந்த காலக்கட்டத்தில் பெரும்பாலும் வீடுகளுக்குள் ஈரப்பதத்துடனும், குளிர்ச்சியாகவும் காட்சி அளிக்கும். மழைக்காலத்தில் அடர்த்தி அதிகம் நிறைந்த ஆடைகளை மட்டுமே அணிவதன் மூலமும், உள்ளிருந்து சூடு தரும் உணவை உட்கொள்வதன் மூலமும் உடல் சூட்டைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்சனைகள் சளி, தலைவலி, காய்ச்சல், தொண்டை புண் மற்றும் இருமல் போன்றவை ஏற்படும். இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற வீட்டிலேயே என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Conjunctivitis: மழைக்காலத்தில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ..! கண்களை பாதிக்காமல் தடுப்பது எப்படி?
சமையலறை பொருட்கள்:
சமையலறையில் இருக்கும் பொருட்கள் இயற்கையாகவே பல மருத்துவ பண்புகளை கொண்டதாக இருக்கிறது. ஆனால், இந்த மருத்துவ பண்புகளை பற்றி நாம் முழுவதுமாக தெரிந்து கொள்வது கிடையாது. இந்த மசாலா பொருட்கள் குளிர் மற்றும் மழைக்காலத்தில் சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் தரும். உதாரணத்திற்கு, வெண்பொங்கலில் அதிகப்படியான மிளகு இருக்கும். இது சளிக்கு நிவாரணம் அளிக்கும் அருமருந்து. ஆனால், வெண்பொங்கலில் இருக்கும் மிளகை மட்டும் தேடி எடுத்து தனியாக ஒதுக்கி விடுகிறோம்.
கிராம்பு:
நீண்ட நாட்களாக தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் கிராம்புகளை வாயில் சிறிது நேரம் வைத்திருக்கலாம். இது தொண்டை வலிக்கு நிவாரணத்தை தருவது மட்டுமின்றி, இருமலையும் போக்கும். அதேபோல், தினசரி காலையில் வெறும் வயிற்றில் துளசி மற்றும் கிராம்பு எடுத்து கொள்வதன்மூலம், சளி மற்றும் இருமல் போன்ற நோய்களை சரி செய்யும்.
மஞ்சள் பால்:
மழைக்காலத்தில் பாலுடன் மஞ்சள் சேர்த்து குடிக்கலாம். இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் மற்றும் தொற்றுநோய் பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவும். மேலும், மஞ்சள் கலந்த பால் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சளி மற்றும் இருமலையும் தடுக்கிறது. அது மட்டுமின்றி, மஞ்சள் தூளை கொதிக்கும் நீரில் கலந்து வெதுவெதுவென்று குடித்தால் சளி தொல்லை நீங்கும்.
மிளகு:
சளிக்கு முதல் எதிரியே மிளகுதான். வீட்டில் இருக்கும் கருப்பு மிளகு சளி மற்றும் இருமலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினசரி பாலில் மிளகு கலந்து குடிப்பது சளி தொல்லையை நீக்கும். மேலும், குழந்தைகளுக்கு அடிக்கடி குளிர்ச்சி காரணமாக சளி பிடிக்கும். இவர்களுக்கு நேரடியாக மிளகு கொடுக்காமல், மிளகுத் தூளில் சிறிது தேன் கலந்து கொடுக்கலாம். இது சிறந்த தீர்வை கொடுக்கும்.
வீட்டிலேயே செய்ய வேண்டிய விஷயங்கள்:
சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க தடுக்க உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களை மாற்றுவது அவசியம். பிரிட்ஜில் வைக்கப்படும் குளிர்ந்த உணவுகள் மழைக்காலத்தில் தீங்கு விளைவிக்கும். எனவே, உங்கள் உடலை குளிர்ச்சியிலிருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். சூடான உணவுகளை சாப்பிடுவதும் மிக முக்கியம்.
அதன்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் சூடாக இருக்கவும் இஞ்சி, பூண்டு, கருப்பு மிளகு, முட்டை, பால் மற்றும் நெய் ஆகியவற்றை சூடான உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ALSO READ: Monsoon Prevention: மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் பயந்து ஓடணுமா? இந்த கஷாயத்தை ட்ரை பண்ணுங்க!
சில குறிப்புகள்:
- காலையில் எழுந்ததும் படுக்கையை விட்டு உடனடியாக எழுந்து வெளியே செல்லாதீர்கள். குளிர் மற்றும் ஈரப்பதம் உங்களை நேரடியாக தாக்கும். எனவே, அடர்த்தி அதிகம் இருக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே செல்லுங்கள். இது குளிர்ச்சித்தன்மையில் இருந்து பாதுகாக்கும்.
- வீட்டுக்குள்ளே உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். வெளிப்புறம் குளிர்ச்சியாக இருப்பதால், உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே, காலையில் எழுந்ததும் சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து வாக்கிங், புஷ் அப், புல் அப் போன்ற உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.
- எவ்வளவு குளிராக இருந்தாலும் கண்டிப்பாக நடைபயிற்சி செய்ய வேண்டும். உடலை வெப்பமாக்குவதுடன், நடைப்பயிற்சியின் மிகப்பெரிய நன்மை சுழற்சி ஆகும். வழக்கமான நடைப்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. குளிர்ச்சியைத் தவிர்க்க இதுவே சிறந்த வழி. வெளியில் செல்ல முடியாவிட்டால், 40 நிமிடங்கள் வீட்டிற்குள் நடக்கலாம்.
- காலை எழுந்ததும் அரை மணி நேரம் கழித்து காலை உணவை எடுத்துக்கொள்ளுங்கள். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவில் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு தேவையான ஆற்றலை தரும். சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.