5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைய இதுதான் காரணமா..? தெரிஞ்சும் இந்த தப்பு செய்யாதீங்க!

Low Sperm Count: ஆண் மலட்டுத்தன்மை என்பது ஆணின் விந்துவில் விந்தணு இல்லாததுதான். இதன்மூலமே, தங்களது பெண் பார்ட்னர் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. குறைந்த விந்தணு எண்ணிக்கை என்பது, உடலுறவின்போது நீங்கள் வெளியேற்றும் திரவத்தில் (விந்து) இயல்பை விட குறைவான அளவிலான விந்தணுக்களை வெளியிடுவதாகும். ஆண்களுக்கு ஏற்படும் குறைந்த விந்தணு எண்ணிக்கை ஒலிகோஸ்பெர்மியா என்றும், விந்தணுக்கள் முழுமையாக இல்லாதது அஸோஸ்பெர்மியா என்றும் அழைக்கப்படுகிறது.

Health Tips: ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைய இதுதான் காரணமா..? தெரிஞ்சும் இந்த தப்பு செய்யாதீங்க!
விந்தணு எண்ணிக்கை குறைதல் (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 21 Nov 2024 11:22 AM

விந்தணு எண்ணிக்கை: மனித வாழ்வில் உடலுறவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். உடலுறவின் மூலமே குழந்தை பிறக்கிறது, உடலுறவின் மூலமே அடுத்த தலைமுறைகள் உருவாகிறது. அந்தவகையில், உடலுறவின்போது ஆண்களின் விந்தணுவில் இருக்கும் விந்தணு மிகவும் முக்கியமானது. இந்த விந்தணுக்கள்தான் பெண்ணின் கருமுட்டையில் இணைந்து குழந்தை பிறக்க உதவி புரிகிறது. ஆண் மலட்டுத்தன்மை என்பது ஆணின் விந்துவில் விந்தணு இல்லாததுதான். இதன்மூலமே, தங்களது பெண் பார்ட்னர் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. குறைந்த விந்தணு எண்ணிக்கை என்பது, உடலுறவின்போது நீங்கள் வெளியேற்றும் திரவத்தில் (விந்து) இயல்பை விட குறைவான அளவிலான விந்தணுக்களை வெளியிடுவதாகும். ஆண்களுக்கு ஏற்படும் குறைந்த விந்தணு எண்ணிக்கை ஒலிகோஸ்பெர்மியா என்றும், விந்தணுக்கள் முழுமையாக இல்லாதது அஸோஸ்பெர்மியா என்றும் அழைக்கப்படுகிறது. இந்தநிலையில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு இதுவும் காரணமாக இருக்கலாம்…‌ கவனமாக இருங்கள்!

உடல் பருமன்:

உடலில் அதிக கொழுப்பு சேர்வதன் காரணமாக குறைந்த விந்தணு எண்ணிக்கை ஏற்படுகிறது என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உடல் பருமன் அதிகரிக்கும்போது ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைக்கிறது. எனவே, அதிக எடை கொண்டவர்கள் உடல் எடையை குறைப்பதன் மூலம், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இது உங்கள் பார்ட்னர் கர்ப்பம் அடையவும் உதவும்.

பாக்கெட் ஜட்டி இறுக்கமாக அணிதல்:

பல வருட சர்ச்சைகள் மற்றும் முரண்பட்ட ஆய்வுகளுக்கு பிறகு, ஒரு புதிய ஆய்வில் பாக்கெட் ஜட்டி போன்ற இறுக்கமான ஜட்டிகளை அணிவதால் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. பாக்கெட் ஜட்டி அணிபவர்களுக்கு நுண்ணறை-தூண்டுதல் ஹார்மோன் குறையும். இது உங்கள் விந்தணுவை குறைக்கலாம். எனவே, பாக்கெட் அணிபவர்கள், கவனமாக பயன்படுத்துவது நல்லது. அந்த காலத்தில் இதற்காகதான் நம்முடைய தாத்தாக்கள் பட்டாபட்டி, கோவணம் போன்றவற்றை பயன்படுத்தினர். (சிரிப்பதற்காக அல்ல) இதுவும் ஒரு காரணம், அவர்கள் 7 முதல் 8 குழந்தைகள் பெற்றதற்கு.

புகைப்பிடித்தல்:

சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கு கருவுறுதலை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல் விந்தணுவின் அளவு, விந்தணு எண்ணிக்கை, விந்தணு இயக்கம் மற்றும் விந்தணுவின் அடர்த்தி உள்ளிட்டவற்றை பாதிக்க செய்கிறது. எனவே ஆண்கள் புகைபிடிப்பதை விடுவது நல்லது.

மது:

புகைப்பிடித்தலை போன்று மது அருந்துவதும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. இது நாளடைவில் ஆண்மைக்குறைவுக்கும் வழிவகுக்கிறது. மேலும், மது அருந்துவது விந்தணுக்களின் தரத்தை பாதிக்க செய்கிறது.

சமீபத்தில் டென்மார்க்கில் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மது அருந்துபவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை 33 சதவீதம் குறைவதாக கண்டறிந்தனர்.

சூடான குளியல்:

ஒரு மனிதனின் விந்தணுக்கள் விந்தணுக்களை உற்பத்தி செய்வதற்கு, உடலின் மற்ற பகுதிகளை விட விந்துப்பை குளிர்ச்சியாக இருக்க வேண்டும். நீங்கள், தினந்தோறும் சூடான குளியலில் ஈடுபடும்போது விந்தணு எண்ணிக்கை குறைகிறது. சில வாரங்கள் சூடான தண்ணீரில் குளிப்பதை நிறுத்தினாலே போது, அவர்களின் விந்தணு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும்.

ALSO READ: Health Tips: உள்ளாடை இல்லாமல் இரவில் தூங்கி பாருங்க.. உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்!

மேலும் சர்க்கரை நோய், போதை மருந்துகள், உடல்நல குறைவால் அதிக மாத்திரை எடுத்துக்கொள்ளும் ஆண்களுக்கும் விந்தணு எண்ணிக்கை குறைக்கிறது.

குறிப்பு:

இந்த பொதுவான காரணங்களால் ஆண்களில் விந்தணு எண்ணிக்கை குறையலாம். மேலே குறிப்பிட்ட பழக்கங்கள் இருந்தால் தவிர்ப்பது நல்லது. மேலும், உங்களுக்கு இது தவிர வேறு ஏதேனும் வகையில் விந்தணு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது.

Latest News