Mushrooms Benefits: மழைக்காலத்தில் காளான் இவ்வளவு நன்மைகளை தருமா..? அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி! - Tamil News | Mushrooms provide many health benefits during monsoons; health tips in tamil | TV9 Tamil

Mushrooms Benefits: மழைக்காலத்தில் காளான் இவ்வளவு நன்மைகளை தருமா..? அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி!

Updated On: 

13 Oct 2024 20:02 PM

Mushroom: காளான்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் இன்சுலின் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளன. இதில் குறைந்த கலோரிகள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். இது தவிர, காளானில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள், சர்க்கரை நோய் தொடர்பான பிரச்சனைகளையும் குறைக்கிறது.

1 / 6காளான்

காளான் ஒவ்வொரு சீசனிலும் கிடைக்கிறது என்றாலும், மழை மற்றும் குளிர்காலத்தில் இதை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். காளானில் பொட்டாசியம், தாமிரம், இரும்பு, நார்ச்சத்து போன்ற பல சத்துக்கள் உள்ளது. இதை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அந்தவகையில், மழைக்காலத்தில் காளான்களை சாப்பிடுவது ஏன் முக்கியம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

2 / 6

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க காளான்கள் பெரிதும் உதவியாக இருக்கும். நோய்களை எதிர்த்து போராடும் திறனை நம் உடலுக்கு வழங்கும் பல கலவைகள் காளானில் உள்ளன. எனவே, காளான்களை உட்கொள்வது வெளிப்புற நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும்.

3 / 6

காளானில் உள்ள பொட்டாசியம், நியாசின் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் இதயத்தின் சரியான செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. காளானில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதய நோய் பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.

4 / 6

வைட்டமின் ஏ நிறைந்த காளான்களை சாப்பிடுவதால் உங்களது கண்பார்வை மேம்படும். இதில் உள்ள பீட்டா கரோட்டின், பார்வை குறைபாடுகளிலிருந்து கண்களை பாதுகாக்கிறது. இது தவிரம் காளானில் உள்ள வைட்டமின் பி2 சருமத்தை ஆரோக்கியமான வைத்திருக்க உதவி செய்யும்.

5 / 6

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காளான்கள் புற்றுநோயின் அபாயத்தை குறைக்க உதவுகின்றன. இதில் எர்கோதியோனைன் உடலில் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. தினசரி உணவில் காளான்களை உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை குறைக்கலாம் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

6 / 6

காளான்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் இன்சுலின் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளன. இதில் குறைந்த கலோரிகள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். இது தவிர, காளானில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள், சர்க்கரை நோய் தொடர்பான பிரச்சனைகளையும் குறைக்கிறது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?