5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Know Yourself: U என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா? உங்களுக்கு பாசம் அதிகம்!

U letter: பொதுவாக பெயரின் முதல் எழுத்தானது ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி நிறைய சொல்லும். அவரது கடந்த காலம், நிகழ்காலம் உள்ளிட்ட பலவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும். கடந்த சில நாட்களாக நாம் ஆங்கில எழுத்தின் அடிப்படையில் A முதல் T வரையிலான பெயர்களை கொண்டவர்கள் எப்படிபட்டவர்கள் என்று தெரிந்து கொண்டோம். அந்தவகையில், இன்று ஆங்கில எழுத்தான U என்ற எழுத்தில் தொடங்கும் நபர்களின் ஆளுமை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

Know Yourself: U என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா? உங்களுக்கு பாசம் அதிகம்!
U எழுத்து (Image: freepik)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 05 Sep 2024 18:13 PM

எழுத்துராசி: ஜோதிடத்தில், எந்த இரு நபரின் இயல்பு, ஆளுமை, குணங்கள் மற்றும் தீமைகள் பற்றி அவரது பெயரின் முதல் எழுத்து மூலம் அறிந்து கொள்ள முடியும். பொதுவாக பெயரின் முதல் எழுத்தானது ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி நிறைய சொல்லும். அவரது கடந்த காலம், நிகழ்காலம் உள்ளிட்ட பலவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும். கடந்த சில நாட்களாக நாம் ஆங்கில எழுத்தின் அடிப்படையில் A முதல் T வரையிலான பெயர்களை கொண்டவர்கள் எப்படிபட்டவர்கள் என்று தெரிந்து கொண்டோம். அந்தவகையில், இன்று ஆங்கில எழுத்தான U என்ற எழுத்தில் தொடங்கும் நபர்களின் ஆளுமை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Know Yourself: ’T’ ல் தொடங்கும் பெயர் உள்ளவர்களின் இயல்பு.. கொஞ்சம் பிடிவாதம், கொஞ்சும் காதல்!

U என்ற எழுத்தில் தொடங்கும் நபர்கள் தாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு வேலையையும் முழு ஆர்வத்துடன் செய்து முடிப்பார்கள். இவர்கள் பொதுவாகவே அமைதியான சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். U இல் தொடங்கும் பெயர்களைக் கொண்டவர்களின் சிறப்பு என்னவென்றால், இவர்கள் எதையும் புதிதாக கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வமாய் இருப்பார்கள். தங்களது திறமையால், மக்களை எளிதாக கவரும் திறனை பெற்று இருப்பார்கள்.

U இல் தொடங்கும் பெயர்களைக் கொண்டவர்கள் கஷ்டம் என்று யாராவது வந்தால், இல்லை என்று சொல்லாமல் உதவும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் மிகவும் புத்திசாலிகளாகவும், வெற்றியை எளிதில் தட்டி பறிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

தொழில் வாழ்க்கை:

U என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் நபர்கள் தொழில் ரீதியாக விரைவில் வெற்றியை அடைவார்கள். இவர்கள் புத்திசாலியாக இருப்பதால், தங்கள் செயல்களின் மூலம் வெற்றியின் படிக்கட்டுகளில் ஒவ்வொன்றாக ஏறுவார்கள். இவர்கள் எந்த கஷ்டத்தையும் எளிதாக கடக்கும் திறன் கொண்டு இருப்பதால், தங்கள் வாழ்க்கையில் எந்தவிதமான நிதி நெருக்கடியையும் சந்திக்க மாட்டார்கள். பணியை எளிதாக முடிக்கும் இவர்களது ஆர்வம், தொழில் வாழ்க்கையில் வெற்றியை பெற்று தரும். அரசு மற்றும் நிர்வாக வேலைகள் மட்டுமின்றி, பெரிய பன்னாட்டு நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பை உருவாக்கி கொள்வார்கள்.

திருமண வாழ்க்கை:

U என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் நபர்களின் திருமண வாழ்க்கை எப்போதும் சிறப்பாகவே இருக்கும். எந்த ஒரு வேலையை செய்தாலும் வாழ்க்கை துணையின் முழு ஆதரவை பெற்று களமிறங்குவார்கள். உங்கள் வாழ்க்கை துணையின் அனைத்து வகையான தேவைகளையும் கவனித்து கொள்ளுங்கள். நிதி வளம் காரணமாக, தங்கள் கணவன்/ மனைவிக்கு எல்லை வகையான மகிழ்ச்சியையும் கொடுப்பார்கள்.

ALSO READ: Know Yourself: ‘S’ல் தொடங்கும் பெயரைக் கொண்டவரா நீங்கள்..? கோபமும், பாசமும் உங்கள் குணம்!

இயல்பு:

U இல் தொடங்கும் பெயரைக் கொண்டவர்கள் வெளியில் இருந்து மிகவும் முரட்டு தனமானவர்களாக இருந்தாலும், உள்ளே மென்மையான இதயம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களால் யாருக்கு எந்த உதவி செய்ய முடிந்தாலும் செய்து கொடுப்பார்கள். அதை வெளியில் சொல்லி பெருமை கொள்ள மாட்டார்கள். இருப்பினும், இயல்பில் கொஞ்சம் பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அன்பாக ஏதாவது விளக்கிச் சொன்னால், அதை மிக விரைவாக புரிந்து கொள்வார்கள். இதன் காரணமாக, இவர்களிடம் அன்பாக பேசி எதையும் சாதிக்கலாம். அதேபோல், இந்த பெயர் கொண்டவர்களுக்கு குழந்தை என்றால், அதிக பிரியம் இருக்கும்.

Latest News