Know Yourself: Y-ல் தொடங்கும் பெயர் கொண்டவரா நீங்கள்..? சிறந்த ஆளுமைக்கு எடுத்துக்காட்டு! - Tamil News | Name Personality Test: Check Yourself Y letter started name person personality traits in Tamil | TV9 Tamil

Know Yourself: Y-ல் தொடங்கும் பெயர் கொண்டவரா நீங்கள்..? சிறந்த ஆளுமைக்கு எடுத்துக்காட்டு!

Published: 

13 Sep 2024 15:29 PM

Y Letter: Y என்ற எழுத்தில் தொடங்கும் நபர்களுக்கு நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் சிறப்பாக இருக்கும். தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பொது வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். கடின உழைப்புக்கு பெயர் போனவர்களாகவும், எவ்வளவு தடை வந்தாலும் உடைதெறிந்துவிடுவார்கள். தாங்கள் பெற்ற அனுபவங்கள் மற்றும் நேர்மை ஆகியவற்றின் மூலம் வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்கி கொள்வார்கள்.

Know Yourself: Y-ல் தொடங்கும் பெயர் கொண்டவரா நீங்கள்..? சிறந்த ஆளுமைக்கு எடுத்துக்காட்டு!

Y எழுத்து (Image: freepik)

Follow Us On

எழுத்துராசி: ஒருவருக்கு வைக்கப்படும் எழுத்தானது அவருக்கு அடையாளத்தை மட்டுமல்ல, அவர் எப்படி பட்டவர் என்பதை சொல்லும். ஒரு குறிப்பிட்ட நபரின் முதல் எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவர்களின் இயல்பு, ஆளுமை உள்ளிட்டவற்றை எளிதான சொல்ல முடியும். அப்படிதான் இதுவரை நாம் A முதல் W வரை முதல் எழுத்தில் தொடங்கும் பெயர்கள் கொண்ட நபர்கள் எப்படிபட்டவர்கள், அவர்களது தொழில், காதல் எப்படிப்பட்டது போன்றவற்றை பார்த்து இருப்போம். அந்த வரிசையில் இன்று நாம் Y என்ற எழுத்தில் நபர்களின் தொழில், காதல் வாழ்க்கை, திருமணம், நிதி போன்றவற்றை பற்றி நிறைய சொல்ல போகிறோம். கல்தேய எண் கணிதத்தின்படி, Y என்ற எழுத்து எண் 1 ஐக் குறிக்கிறது, இது தலைமை மற்றும் அதிகாரத்தின் கிரகமான சூரியனைக் குறிக்கிறது. இது Y என்ற எழுத்தில் தொடங்கும் நபர்களுக்கு இயற்கையான தலைமைத்துவ திறன்களை தருகிறது. இவர்கள் தொடர்ந்து முன்னேறவும், ஊக்குவிக்கவும் செய்யும்.

ALSO READ: Know Yourself: பெயர் X என்ற எழுத்தில் ஆரம்பிக்கிறதா..? இதுவே உங்களின் தனித்துவம்!

Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் நபர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு சரியான திசையை காட்ட எப்போதும் தயாராக இருப்பார்கள். சிக்கலில் உள்ளவர்களுக்கு அவை மிகவும் உதவியாக இருக்கும். எந்த வகையான ஆலோசனைகளுக்கும் இவர்களை தொடர்பு கொள்ளலாம். இவர்களுக்கு அதிக உணவுகளை ருசி பார்ப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே, உணவுக்காக தங்கள் பணத்தை அதிகம் செலவிடுவார்கள். Y என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்கள் சிறந்த ஆளுமையை கொண்டு இருப்பார்கள். இதன் காரணமாக, இக்கட்டான நேரத்தில் எந்தவொரு பிரச்சனையை எதிர்கொண்டு, அதை செய்து முடிப்பார்கள்.

திருமண வாழ்க்கை:

Y என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை உடையவர்கள் தங்கள் பார்ட்னர் மிக குறைந்த நேரத்தையே செலவிடுவார்கள். இதுவே, உங்களுக்கு தவறான புரிதலை உண்டாக்கும். உங்கள் துணையுடன் முடிந்தவரை அதிக மற்றும் தரமான நேரத்தை செலவிட முயற்சி செய்யவும். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் குடும்ப மோதல்கள் ஏற்படலாம். இந்த ஆண்டு, திருமணமான தம்பதிகள் தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள்.

தொழில் வாழ்க்கை:

Y என்ற எழுத்தில் தொடங்கும் நபர்களுக்கு நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் சிறப்பாக இருக்கும். தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் பொது வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். கடின உழைப்புக்கு பெயர் போனவர்களாகவும், எவ்வளவு தடை வந்தாலும் உடைதெறிந்துவிடுவார்கள். தாங்கள் பெற்ற அனுபவங்கள் மற்றும் நேர்மை ஆகியவற்றின் மூலம் வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்கி கொள்வார்கள். இவர்கள் கடின உழைப்பு காரணமாக சிறந்த தலைவர்களாக திகழ்வார்கள்.

ALSO READ: Know Yourself: Wல் தொடங்கும் பெயரைக் கொண்டவர்களா நீங்கள்..? பிடிவாதமே உங்கள் குணம்!

Y என்ற எழுத்தில் தொடங்கும் நபர்களில் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் அல்லது ஆராய்ச்சியாளர்களாக பணிபுரிபவர்கள் கடின உழைப்பால் அங்கீகாரம் பெறுவார்கள். சில நேரங்களில் உங்களுக்கு வரும் சக ஊழியர்கள் அல்லது முதலாளியுடன் உங்களுக்கு சில தவறான புரிதல்கள் இருக்கலாம். வேலையின்போது சில நேரங்களில் விட்டுகொடுத்து செல்வது. Y என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களைக் கொண்ட தனிநபர்கள் பொறுப்பானவர்களாகவும் ஒழுக்கமானவர்களாகவும், அமைப்பு மற்றும் அமைப்பின் வலுவான உணர்வைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இயல்பு:

Y என்ற எழுத்தில் தொடங்கும் நபர்கள் இயல்பிலேயே மிகவும் எளிமையானவர்களாக இருப்பார்கள். இவர்கள் வார்த்தைகளில் நேர்மை இருக்கும். இவர்களுக்கு ஏமாற்றுவது பிடிக்காது, ஏமாற்றுவதும் பிடிக்காது. தங்களை ஒருமுறை யாராவது ஏமாற்றி விட்டால் அவர்களிடம் எந்த தொடர்பையும் வைத்து கொள்ள மாட்டார்கள். இவர்கள் தப்பு செய்தால் உடனே அதை ஏற்று மீண்டும் அதே தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள முயற்சி செய்வார்கள். பிறரிடம் அனுதாபம் கொள்வது, பிறருக்கு உதவுவது, பிறரின் மகிழ்ச்சியில் மகிழ்ச்சி காண்பது போன்றவை இவர்களின் சிறந்த குணங்களில் ஒன்றாக இருக்கும். இவர்களின் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த நபர்கள் தமக்கு முன்னால் உள்ள நபரின் உடல் மொழி புரிந்துகொண்டு, அவர்களுக்கு தேவையான உதவியை செய்வார்கள்.

பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
Exit mobile version