National Epilepsy Day 2024: இன்று தேசிய வலிப்பு நோய் விழிப்புணர்வு தினம்! வலிப்பு நோய் என்றால் என்ன?
What is Epilepsy: வலிப்பு நோய் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளவும், மனப்பான்மையை அகற்றவும், வலிப்பு நோயாளிகளுக்கு தைரியத்தை வழங்கவும், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17ம் தேதி இந்தியாவில் தேசிய வலிப்பு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.
கை- கால் வலிப்பு என்பது மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு வகையான நரம்பியல் கோளாறு ஆகும். உலக் சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகில் சுமார் 50 மில்லியன் மக்கள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதேநேரத்தில், வலிப்பு நோயுடன் வாழும் சுமார் 70% மக்கள் வலிப்பு எதிர்ப்பு மருந்துகளை (ASMs) உட்கொள்வதன் மூலம் தங்கள் வலிப்புத்தாக்கங்களை கட்டுப்படுத்தி வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. முன்னொரு காலத்தில் இந்த நோயை ஒரு சாபமாகவும், பேய் பிடித்ததாகவும் கருதினர். பின்னர், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு, இது நோய் என மக்கள் அறிந்து கொண்டனர்.
இந்தநிலையில், வலிப்பு நோய் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளவும், மனப்பான்மையை அகற்றவும், வலிப்பு நோயாளிகளுக்கு தைரியத்தை வழங்கவும், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17ம் தேதி இந்தியாவில் தேசிய வலிப்பு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று வலிப்பு நோய் என்றால் என்ன..? இந்த நோய்க்கான காரணங்கள் என்ன என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Ginger Benefits: 14 நாட்கள் தொடர்ந்து இஞ்சி சாப்பிட்டால் என்ன நடக்கும்? இவ்வளவு பலன்களா..?
வலிப்பு நோய் என்றால் என்ன..?
கை- வலிப்பு என்பது ஒரு நாள்பட்ட மூளை கோளாறு பிரச்சனை ஆகும். நியூரான்கள் அல்லது மூளை செல்கலில் ஏற்படும் திடீர் மற்றங்களால் கை – கால்களில் வலிப்பு ஏற்படும். அதாவது, ஒரு நபர் மூளையில் உள்ள நியூரான்களால் மீண்டும் மீண்டும் மின் தூண்டுதலின் விளைவாக மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாக வலிப்புத்தாக்கங்களை எதிர்கொள்கிறார். இதையே வலிப்பு, காக்கா வலிப்பு என்று அழைக்கிறோம். இந்த வலிப்புத்தாக்கங்கள் மீண்டும் மீண்டும் நிகழும்போது, ஃபிட்ஸையும் ஏற்படுத்துகிறது.
வலிப்பு நோய் ஏற்படுவதற்காக காரணங்கள்:
மூளை பாதிப்பு உட்பட பல்வேறு காரணங்களால் வலிப்பு ஏற்படலாம். ஆனால், கை-காலி வலிப்புக்கான குறிப்பிட்ட காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை. மரபணு கோளாறுகளாலும் கூட வலிப்பு ஏற்படலாம். அதுமட்டுமின்றி, தலையில் காயம், பக்கவாதம், மூளைக் கட்டி, மூளையில் ரத்தக் கசிவு, மூளையில் உள்ள ரத்தக் குழாய்களின் சிதைவு, பிறப்பு காயம் மற்றும் தொற்று நோய்களால் வலிப்பு ஏற்படலாம்.
முதலில் வலிப்பு என்பது ஒரு மூளை பிரச்சனை என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது முக்கியம். இது மனநோயும் அல்ல, தொற்று நோயும் அல்ல. பொதுவாக, இது நிகழுவதற்கு வயது வித்தியாசம் எதுவும் இல்லை. எல்லா வயதினருக்கும் ஏற்படலாம். மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் வலிப்பு நோய்க்கான முதன்மைக் காரணம். அதேநேரத்தில், சில நேரங்களில் உடலில் நீர்ச்சத்து குறையும் போதும் ஏற்படலாம்.
தேசிய வலிப்பு விழிப்புணர்வு தினத்தின் வரலாறு:
கடந்த 2009ம் ஆண்டு மும்பையில் டாக்டர். நிர்மல் சூரி என்பவர் “எபிலெப்சி ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா” என்ற இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனம் இந்தியாவில் கை-கால் வலிப்பு பிரச்சனையை குறைக்கவும், நோய் மற்றும் அதன் சிகிச்சையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தேசிய கை – கால் வலிப்பு தினத்தைத் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17ஆம் தேதி தேசிய வலிப்பு நோய் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.
ALSO READ: Kidney Disease: டயாலிசிஸ் என்றால் என்ன..? சிறுநீரகங்களை பாதுகாப்பது எப்படி..?
வலிப்பு வராமல் தடுப்பதற்கான குறிப்புகள்:
- முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் தொடர்ந்து மருந்துகள் எடுத்துகொள்வதன் மூலம் கை-கால் வலிப்பு பிரச்சனையை முற்றிலும் கட்டுப்படுத்தலாம்.
- வலிப்பு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- கை-கால் வலிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் மூளையில் மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
- போதிய தூக்கம், காஃபின் போன்ற உணவுகளை தவிர்ப்பது, எனர்ஜி டிரிங்ஸ், நிறைய தண்ணீர் குடிப்பது போன்றவற்றின் மூலம் வலிப்பு வராமல் தடுக்கலாம்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)