5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Neem Water Bath: சருமத்திற்கு பல நன்மைகளை தரும் வேப்ப இலை குளியல்.. இப்படி குளிச்சு பாருங்க!

Health Tips: உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வேப்பங்கொட்டையில் உள்ளன. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் இது உதவும். வேம்பு ஒரு நல்ல பாக்டீரியா எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதனால்தான் வேப்பம்பூ நீரில் குளித்தால் சரும தொற்றுகள் குறையும். எனவே, வேப்ப இலையை பயன்படுத்தி உங்களது உடலை எப்படி ஆரோக்கியமாக பராமரிக்கலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Neem Water Bath: சருமத்திற்கு பல நன்மைகளை தரும் வேப்ப இலை குளியல்.. இப்படி குளிச்சு பாருங்க!
வேப்ப இலை குளியல்
mukesh-kannan
Mukesh Kannan | Published: 11 Aug 2024 12:43 PM

வேப்ப இலை குளியல்: நாம் எங்கும் காணக்கூடிய வேப்ப மரங்கள் பல மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்ற ஒன்றாகும். வேப்ப இலை, பட்டை, பூ, பழம் என இதில் உள்ள ஒவ்வொன்றும் அதிக நற்பண்புகளை கொண்டுள்ளது. இந்த வேப்ப மர பொருட்கள் பல வகையான மருத்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வேப்பங்கொட்டையில் உள்ளன. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் இது உதவும். வேம்பு ஒரு நல்ல பாக்டீரியா எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதனால்தான் வேப்பம்பூ நீரில் குளித்தால் சரும தொற்றுகள் குறையும். எனவே, வேப்ப இலையை பயன்படுத்தி உங்களது உடலை எப்படி ஆரோக்கியமாக பராமரிக்கலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ALSO READ: Kidney health: சிறுநீரக பாதிப்பை தடுக்க வேண்டுமா..? அப்போ! ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் தண்ணீர் குடிங்க!

வேப்பம்பூ நீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

முகப்பரு:

வேப்ப இலை நீரில் குளித்தால் முகப்பரு பிரச்சனை நீங்கி முகத்தில் பொலிவை உண்டாக்கும். இது முகப்பருவால் உண்டான புள்ளிகள் மற்றும் தழும்புகளை நீக்க பெரியளவில் உதவும். உங்கள் முகத்தை வேப்ப இலை நீரில் கழுவுவதால் முகத்தில் இயற்கையான பளபளப்பை தருவதுடன், பராமரிக்கவும் செய்கிறது.

மேலும், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேப்ப இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேப்ப இலைகளை பேஸ்ட் செய்து அதில் 2 டீஸ்பூன் தயிர் கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

கண்களுக்கு நன்மை:

கண்ணில் ஏதேனும் தொற்று ஏற்பட்டாலோ அல்லது எரிச்சல் அடைந்தாலோ வேப்ப இலை நீரை கொண்டு இந்த பிரச்சனைகளை சரி செய்யலாம். வேப்ப இலை நீரில் குளித்து கண்களை கழுவினால் தொற்று, கண் சிவத்தல், கண் வீக்கம் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

பொடுகு மற்றும் பேன் தொல்லை:

பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வேம்பு பயனுள்ளதாக இருக்கும். வேப்பம்பூ நீரில் தலைக்கு குளித்தால் பொடுகு பிரச்சனையை நீக்குவதுடன், தலைமுடியையும் ஆரோக்கியமாக மாற்றும். வாரத்திற்கு ஒருமுறை வேப்பம்பூ அல்லது வேப்ப இலையை கொண்டு தயாரிக்கப்படும் தண்ணீரை வைத்து தலைக்கு குளித்தால் பேன் மற்றும் பொடுகு தொல்லை நீங்கும். வேப்ப இலை தண்ணீரை பயன்படுத்தும்போது ஷாம்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

வியர்வை:

கோடை காலத்தில் அதிகளவில் வியர்த்து வியர்வை நாற்றம் அடிக்கும். இதற்குக் காரணம் உடலில் பாக்டீரியாக்கள் உற்பத்தியாவதுதான். அத்தகைய சூழ்நிலையில், வேப்ப இலைகளைக் கொண்டு குளிப்பது நன்மை பயக்கும். இப்படி செய்வதால் வியர்வையின் துர்நாற்றம் போய், சருமத்தை பாதுகாக்கும்.

புண்களை சரிசெய்யும்:

உடலில் கொப்புளங்கள் மற்றும் புண்களால் அவதிப்படுபவர்களுக்கு வேப்ப இலை நீரில் குளிப்பது சர்வ நிவர்த்தியாகும். வேம்பு இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டுள்ளது. இது, உடலில் ஏற்படும் கொப்புளங்கள் மற்றும் சொறி பிரச்சனையிலிருந்து விடுபட உதவும்.

ALSO READ: Heart Attack Symptoms: திடீரென முகத்தின் நிறம் மாறுகிறதா..? மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்!

மேலும் சில..

  • வேப்பம்பூ மற்றும் வேப்ப இலை கிடைக்காதவர்கள் மார்க்கெட்டில் கிடைக்கும் வேப்ப எண்ணெயை பயன்படுத்தலாம்.
  • வறண்ட சருமத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேம்பு நல்ல மருந்து. வேப்பம்பூ நீரில் குளித்தால் சரும வறட்சி குறையும். குளிர்காலத்தில் வறண்ட சருமத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வேப்ப இலை குளியலுக்கான நீரை எப்படி தயாரிப்பது..?

முதலில், பச்சை வேப்ப இலைகளை எடுத்து, இலைகளின் நிறம் போய், தண்ணீர் பச்சையாகத் தோன்றும் வரை கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, அதை ஒரு பருத்தி துணியால் நன்கு வடிகட்டி, குளியல் தண்ணீரில் கலக்கவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது குளித்தால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

Latest News