5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bike Washing Tips: பைக்கை கழுவும் போது இந்த தவறை செய்யாதீர்கள்.. அதிக செலவை இழுத்து விடும்!

Bike Tips: நீங்கள் பைக்கை வீட்டிலேயே கழுவினால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் பைக்கைக் கழுவும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் உங்கள் பைக்கிற்கு அதிக செலவை வைக்கலாம். எனவே, வீட்டில் நீங்கள் பைக்கை கழுவும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை செய்வது முக்கியம். இதையடுத்து, பைக் கழுவ என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Bike Washing Tips: பைக்கை கழுவும் போது இந்த தவறை செய்யாதீர்கள்.. அதிக செலவை இழுத்து விடும்!
பைக் சுத்தம் (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 12 Sep 2024 18:14 PM

பைக் சுத்தம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை: தங்கள் காதலியை விட இந்த உலகில் பைக்குகளை விரும்புவோர் ஏராளமாக உள்ளனர். இன்று ஒவ்வொரு வீட்டிலும் எது இருக்கிறதோ இல்லையோ ஒரு பைக் உள்ளது. நகரமாக இருந்தாலும் சரி கிராமமாக இருந்தாலும் சரி அனைவருக்கும் போக்குவரத்துக்கு பைக் ஒரு முக்கியமாக வழி காட்டியாக உள்ளது. இது மழைக்காலம் என்பதால் பைக்குகளை சேறுக்குள் மாட்டி, சிக்கி தவிக்கும். இதன் காரணமாக நீங்கள் பைக்குகளை சுத்தம் செய்ய செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். கடைகளில் வாரத்திற்கு ஒருமுறை கழுவி சுத்தம் செய்தால், செலவு எல்லையை மீறி செல்லும். இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் பைக்கை வீட்டிலேயே கழுவினால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் பைக்கைக் கழுவும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் உங்கள் பைக்கிற்கு அதிக செலவை வைக்கலாம். எனவே, வீட்டில் நீங்கள் பைக்கை கழுவும்போது நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை செய்வது முக்கியம். இதையடுத்து, பைக் கழுவ என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Kitchen Tips: சமையலறை கத்தியில் துருவா..? கவலை வேண்டாம்! இப்படி க்ளீன் பண்ணுங்க!

சைலன்சரில் தண்ணீர் செல்லக்கூடாது..?

பலர் பைக் வழியாக திடீரென வாகனத்தின் மீது தண்ணீரை நேரடியாக அடிக்கிறார்கள். இதன் காரணமாக எக்ஸாஸ்ட் பைப் மற்றும் சைலன்சர் போன்ற வண்டியின் முக்கிய பகுதிகளுக்குள் தண்ணீர் சென்று விடுகிறது. இதன் காரணமாக நீங்கள் சுத்தம் செய்தபிறகு உங்கள் பைக் ஸ்டார்ட் ஆகாமல் பிரச்சனையை ஏற்படுத்தும். இதற்காக நீங்கள் உங்கள் முழு முயற்சியையும் பயன்படுத்தி கிக்கரை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, நீங்கள் இதற்காக மெக்கானிக் கடைகளில் செலவு செய்ய வேண்டியது இருக்கும். அப்படி இல்லையென்றால், சிறிது நேரம் பைக்கை நிறுத்திவிட்டு, சைலன்சருக்குள் நிரப்பப்பட்ட தண்ணீர் தானாகவே காய்ந்ததும், மோட்டார் சைக்கிள் இயக்க முடியும்.

ஹார்ன் மற்றும் பிரேக்குகளில் கவனம் வேண்டும்:

பைக்கை கழுவும்போது பிரேக் மற்றும் ஹாரனில் தண்ணீர் படாமல் பார்த்து கொள்ள வேண்டியது மிக முக்கியம். பிரேக்கில் தண்ணீர் வந்தால், அதன் கிரீஸ் வடிந்து சென்று விடலாம். இதன் காரணமாக, நீங்கள் அவசர காலத்தில் பிரேக் பிடிக்காமல் போகும் வாய்ப்புகள் குறைவு, ஆபத்துகளும் அதிகம். எனவே, பிரேக் மீது அதிக கவனம் தேவை. தண்ணீர் ஹார்னுக்குள் நுழைந்தால், அது விசித்திரமான ஒலிகளை உருவாக்கலாம் அல்லது ஹார்ன் முற்றிலும் சேதமடையலாம். எனவே, இந்த இரண்டு பாகங்களையும் பாதுகாத்த பின்னரே பைக்கை கழுவ வேண்டும். ஒவ்வொரு முறை கழுவிய பிறகும் எண்ணெய் மற்றும் கிரீஸ் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

சாவி பூட்டுக்குள் கவனம் தேவை:

நீங்கள் பைக்கைக் கழுவும் போதெல்லாம், சாவி பூட்டுக்குள் தண்ணீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், சில சமயங்களில் தண்ணீர் உள்புகுந்து கொள்வதால் உள்ளே துருப்பிடித்து, பூட்டை திறப்பதிலும் மூடுவதிலும் மிகுந்த சிரமம் ஏற்படும்.

ALSO READ: Lemon Peels: எலுமிச்சம்பழத் தோலை தூக்கி எறியாதீங்க.. இவ்வளவு விஷயத்திற்கு பயன்படும்!

சுத்தம்:

பைக்கை கழுவியபின் மிருதுவான துணியால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். மிருதுவாக இல்லாத துணியையோ அல்லது வேறு ஏதேனும் பொருளையோ கொண்டு சுத்தம் செய்தால், அது பைக்கின் உடலில் கீறல்களை ஏற்படுத்தலாம். மேலும், பெயிண்ட் உரியவும் வாய்ப்பும் அதிகம். இதன் விளைவாக, பைக் அதன் பளபளப்பை இழந்து, முன்பை விட சற்று அசிங்கமாகவும் பழையதாகவும் தோற்றமளிக்கும்.

பைக்கைக் கழுவும்போது எப்போதும் பைக் என்று விற்கப்படும் பைக் ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள். இதனால் பைக்கின் பளபளப்பு ஒருபோதும் அழிந்து போவது கிடையாது. உங்கள் பைக்கை சர்ஃப் அல்லது வேறு ஏதேனும் கடினமான சோப்பு கொண்டு கழுவினால், அது உங்கள் மோட்டார் சைக்கிளின் பெயிண்ட் மீது பாதகமான விளைவை ஏற்படுத்தும்.

இந்த விஷயங்களைப் புறக்கணித்து நீங்கள் தவறு செய்தால், நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றி மட்டுமே பைக்கைக் கழுவ முயற்சி செய்யுங்கள்.

Latest News