Night Jasmine Benefits: வீட்டில் இந்த செடி இருக்கிறதா..? சர்க்கரை நோய், மூட்டு வலிக்கு சிறந்த மருந்து!

Parijatham: பாரிஜாத செடியின் கிளையை சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்தி பொடியாக அரைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்து கொள்ளவும். இதை தினமும் அரை தேக்கரண்டி இந்த பொடியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் மலேரியா மற்றும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Night Jasmine Benefits: வீட்டில் இந்த செடி இருக்கிறதா..? சர்க்கரை நோய், மூட்டு வலிக்கு சிறந்த மருந்து!

பாரிஜாதம் (Image: Freepik)

Published: 

26 Nov 2024 13:23 PM

ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த பாரிஜாதம் பூ, ஆன்மிகத்தில் மட்டுமல்லாமல் மருத்துவ குணங்கள் நிறைந்த பண்புகளை கொண்டவை. பாரிஜாதம் பூ தெய்வ வழிபாட்டில் தனி இடத்தை பெற்றுள்ளது. பாரிஜாதம் பூவை சிலர் இரவு மல்லிகை என்றும் அழைக்கப்படுகிறது. கிராமங்களில் மட்டுமல்ல, சமீபத்திய ஆண்டுகளில் நகர்ப்புறவாசிகள் கூட வீட்டில் ஒரு சிறிய தோட்டத்தை வைத்திருப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்தவகையில், பாரிஜாதம் போன்ற பூக்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் ஒன்று. அந்தவகையில், பாரிஜாதம் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

பாரிஜாதத்தில் வலி நிவாரணி, ஆண்டிபிரைடிக், வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, ஹைபோடென்சிவ், அழற்ஜி எதிர்ப்பு, ஆண்டிஸ்பாஸ்மோடிக் போன்ற பண்புகளை கொண்டுள்ளது.

ALSO READ: Health Tips: உடல் ஆரோக்கியம்.. வைட்டமின் பி மூலம் கிடைக்கும் நன்மைகள்!

மருத்துவ குணங்கள்:

மத முக்கியத்துவம் வாய்ந்த பாரிஜாதம் பூ அதன் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது. ஆயுர்வேதத்தில் இது மூட்டு வலி, காய்ச்சல் மற்றும் எலும்பு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இதன் இலைகள் மற்றும் பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் சளி, இருமல், மூட்டு வலி மற்றும் தோல் நோய்களுக்கான சிகிச்சையில் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

சர்க்கரை நோய்:

பாரிஜாத செடியின் பூக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். டைப் 2 சர்க்கரை நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பூக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். அதன்படி, இரவில் பாரிஜாத பூக்களை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீரை வடிகட்டி மறுநாள் மதியம் மற்றும் மாலையில் குடிக்கலாம். இப்படி குடிப்பதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்க உதவி செய்யும்.

மூட்டு வலி:

பாரிஜாத செடியின் கிளையை சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்தி பொடியாக அரைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்து கொள்ளவும். இதை தினமும் அரை தேக்கரண்டி இந்த பொடியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் மலேரியா மற்றும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

சளி தொடர்பான பிரச்சனைகள்:

மழை மற்றும் குளிர்காலத்தில் பெரும்பாலான மக்கள் சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், சிலர் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனர். இதுபோன்ற மூச்சுத் திணறல் பிரச்சனை உள்ளவர்கள், பாரொஜாத இலைகள் மற்றும் பூக்களில் இருந்து தேநீர் தயாரித்து தேனுடன் தினமும் குடித்து வந்தால் நன்மை கிடைக்கும். பாரிஜாத பூவில் உள்ள ஆரோக்கிய பண்புகள் நுரையீரலில் பேரும் சளியை குறைக்கிறது. மேலும், இது சளி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி:

பாரிஜாத இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை டீ ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த டீ நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

காய்ச்சல்:

பாரிஜாத இலைகள் மற்றும் பட்டைகளை பயன்படுத்துவதன் மூலம் பல வகையான காய்ச்சல்கள் குணமாகும். மேலும், இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்கள் காரணமாக டெங்கு, சிக்கன்குனியா மற்றும் மலேரியா போன்ற காய்ச்சலில் இருந்து விரைவாக நிவாரணம் அளிக்கும்.

ALSO READ: Health Tips: மிஞ்சிய சாதத்தை ஃபிரிட்ஜில் வைக்கலாமா..? இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

வறட்டு இருமல்:

பாரிஜாத பூக்கள் மற்றும் இலைகளில் காணப்படும் எத்தனால், மூச்சுக்குழாய் அழற்ஜியை தடுக்கும். இது வறட்டு இருமலை போக்க உதவுகிறது. மேலும், தொண்டை எரிச்சல் இருந்து நிவாரணம் அளிக்கும்.

கீல்வாதம்:

மூட்டுவலி மற்றும் சியாட்டிகா வலிகள் மக்களால் தாங்க முடியாதவை. இதை போக்க பல வகையான சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இதற்கு, பாரிஜாத பூக்கள் மற்றும் இலைகலின் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதன் எண்ணெயில் அத்தியாவசிய கூறுகள் வீக்கத்தை குறைக்கவும், வலியிலிருந்து விரைவான நிவாரணம் அளிக்கவும் உதவும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்
உருளைக்கிழங்கு இப்படி இருந்தால் சாப்பிட வேண்டாம்..!