Noodles : நூடுல்ஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா? ஷாக் கொடுக்கும் தகவல்கள்! - Tamil News | Noodles: Is eating noodles such a problem? Shocking information! | TV9 Tamil

Noodles : நூடுல்ஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா? ஷாக் கொடுக்கும் தகவல்கள்!

Updated On: 

09 Jun 2024 21:33 PM

Noodles : நூடுல்ஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா? ஷாக் கொடுக்கும் தகவல்கள்!

நூடுல்ஸ்

Follow Us On

உடனடியாக சமைக்க உண்ணப்படும் நூல்கள் நார்ச்சத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட முக்கிய கூறுகள் என எதுவுமே இல்லாமல் உள்ளது. இப்படி அடிப்படை சத்துக்கள் எதுவுமே இல்லாத நூடுல்ஸ் நாம் குழந்தைகளுக்கும் கொடுத்து வருகிறோம் என்பதுதான் மிகவும் வருத்தமாக உள்ளது. நூடுல்ஸை பிரதான உணவுப் பொருளாக கருதி காலை உணவாக கொள்வது முதல் இரவு உணவாக உட்கொள்வது வரை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.  இவை நமது உடலை மேலும் பலவீனமாக்கி மோசமான ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.  நூடுல்ஸ் அதிகப்படியான நிறமிகள் கலக்கப்பட்டுள்ளதால் நன்றாக காட்சி அளிக்கிறது. சுவையூட்டும் இரவைகளும் கலக்கப்படுவதால் சோடியம் அதிகமாக உள்ளது. இவ்வாறு சுவையூட்டிகள் நிறமிகள் கலக்கப்படும் பொழுது ரத்த அழுத்தம் இதய நோய் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளும் ஏற்படுகிறது. நூடுல்ஸ் கலோரிகள் நிறைந்து காணப்பட்டாலும் அவை அதிகப்படியான கார்போஹைட்ரேட்டை உள்ளடக்கியதாக உள்ளது. நூடுல்ஸ் தினமும் உட்கொள்ளும் பொழுது எடை அதிகரித்து உடல் பருமன் அதிகமாகிறது.

Also Read: ’வலுவான எதிர்கட்சி ஜனநாயகத்திற்கு நல்லது’ – நடிகர் ரஜினிகாந்த்!

பெரும்பாலான நூடுல்ஸ்கள் சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது இது செயலாகத்தின் போது ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துகளை அகற்றுகிறது சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிக அளவில் உட்கொள்வதால் ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்துகிறது. மேலும் இது டைப் 2 நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கிறது. வளர்ச்சிதை மாற்றம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளையும் உடலுக்கு ஏற்படுத்துவதில் நூடுல்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. நூடுல்ஸ்களில் மோனோ சோடியம் குளுட்டமேட் ஒரு பொதுவான சேர்க்கப்படுவதால் எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கிறது. தலைவலி குமட்டல் மற்றும் உயர் ரத்த அழுத்தத்துடன் இவைகள் தொடர்பு படுத்துகின்றன.

Also Read: உங்களுக்கு நான் என்றைக்கும் நன்றியுள்ளவன் சார்… அஜித் குறித்து மனம் திறந்த ஆதிக் ரவிச்சந்திரன்

பெரும்பாலும் நூடுல்ஸ்கள் மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படுவதால் மைதா உடலுக்கு நிறைய பிரச்சனைகளை தருவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. பெருமாளான மறுத்தவர்கள் பரோட்டா போன்ற மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்குமாறும் கூறுகின்றனர். மைதா மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவாக உள்ளதால் அபாயத்தை ஏற்படுத்துகிறது. நூடுல்ஸ்கள் பொதுவாக சுத்திகரிக்கப்படாத எண்ணெய்களில் வறுக்கப்படுவதாலும் உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. கொழுப்புகள் மற்றும் டிரான்ஸ்போர்ட் அதிக அளவில் ஏற்பட்டு பல்வேறு பிரச்சனைகளையும் கொழுப்பின் அளவையும் உயர்த்துகிறது.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version