5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஓமப்பொடிய கடையில வாங்கிக்கொடுக்காம , இப்படி வீட்டுலையே செஞ்சு கொடுங்க!

Omapodi : சுவையான ஓமப்பொடி செய்முறை! காரம் அதிகமாக இல்லாமல் லைட்டாக எடுத்துக்கொள்வார்கள். அவர்களுக்கான அசத்தலான ஓமப்பொடி ரெசிபி இதோ.

ஓமப்பொடிய கடையில வாங்கிக்கொடுக்காம , இப்படி வீட்டுலையே செஞ்சு கொடுங்க!
ஓமப்பொடி
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 16 May 2024 22:33 PM

இனிப்பு சாப்பிடுவதற்கு எப்பிடி ஸ்வீட் பிரியர்கள் இருப்பார்களோ அதேபோல காரம் சாப்பிடுவதற்கு என்றே சில காரப் பிரியர்கள் இருப்பார்கள். ஆனால் காரமும் அதிகமாக இல்லாமல் லைட்டாக எடுத்துக்கொள்வார்கள். அவர்களுக்கான அசத்தலான ஓமப்பொடி ரெசிபி இதோ.

ஓமப்பொடி

தேவையான பொருட்கள்

கடலைமாவு – 4 கப்
அரிசி மாவு – 1/2 கப்
ஓமம் – 3 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
மிளகு – 1/4 ஸ்பூன்
அரிசி – 1 ஸ்பூன்
கடலை எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

ஒரு மிக்ஸர் ஜாரில் ஓமம், மிளகு மற்றும் ஒரு ஸ்பூன் அரிசி ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

அரைத்தக் கலவையை கலந்துவைத்திருக்கும் மாவுடன் சேர்த்து பிசையவும். நல்ல சூடான எண்ணெய் சிறிதுவிட்டு பிசைந்து கொள்ளவைம். இது ஓமப்பொடி மொறுமொறுப்பாக இருக்க உதவும்.

Also read: செம்ம ருசியான வாழைப்பழ அல்வா ரெசிபி!

மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்ததும், இடியாப்ப அச்சில் வைத்து, கடாயில் சூடாக்கப்பட்ட எண்ணெயில் பிழிந்துவிடவும்.

இருபுறமும் பொன்னிறமாக வந்தவுடன், வடிகட்டி எடுத்து தனியே ஒரு தட்டில் ஆறவிடவும். இதோடு ஒரு கொத்து கறிவேப்பிலையை பொறித்துப் போடவும்.

நன்கு ஆறியதும் அதை பொடித்துவிட்டு, பல் முளைத்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் சாப்பிட கொடுக்கலாம்.

பயன்கள்:

ஓமம் நல்ல செறிமான சக்தியை அளிக்கும். நல்ல பசியைத் தூண்டும். குழந்தைகளுக்கு இது மிகவும் ஆரோக்கியமான நொறுக்குத் தீனி.

Latest News