Optical Illusion: எந்த விமானத்தில் இறக்கைகள் இல்லை? 7 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா? - Tamil News | Spot the airplane without wings in this image within 7 seconds in tamil | TV9 Tamil

Optical Illusion: எந்த விமானத்தில் இறக்கைகள் இல்லை? 7 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா?

Published: 

25 Jul 2024 23:16 PM

சமீப காலமாகவே மூளைக்கு வேலை தரும் வகையில் விஷூவல் அல்லது ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில், தற்போது ஒரு புதிர் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. அதாவது, கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஏராளமான விமானங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விமானங்களில் இறக்கைகள் இல்லாத விமானத்தை 7 நொடிக்குள் கண்டுபிடிக்க வேண்டும். உங்களால் முடிகிறதா? என்று முயற்சி செய்து பாருங்கள்.

Optical Illusion: எந்த விமானத்தில் இறக்கைகள் இல்லை? 7 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா?

மாதிரி புகைப்படம்

Follow Us On

விஷூவல் அல்லது ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் சிந்திக்கும் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை சோதிப்பதால், மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. இதை ஒரு பொழுதுபோக்காவே பலரும் விளையாடி வருகிறார்கள். ஒவ்வொரு முறை சவாலிலும், பல விதமான படங்களை கொடுத்து, அதில் மறைக்கப்பட்ட பொருள் மற்றும் பிழைகளை கண்டுபிடிப்பதே முக்கிய நோக்கம். ஒரு சில புதிர்கள் கண் பார்வைக்கு முக்கியத்தும் தரும் நோக்கில் வடிவமைக்கப்படுகின்றன. 

Also Read: Shocking News : திடீர் மாரடைப்பு.. குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு உயிரிழந்த ஓட்டுநர்.. சோக சம்பவம்!

இந்த மாதிரியான புதிர் விளையாட்டுகள் மூளைக்கு வேலை கொடுக்கவும், சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும், புத்திசாலித்தனத்தை அதிகரிக்கவும், கவனத்தை மேம்படுத்தவும் சிறந்த வழியாக பார்க்கப்படுகின்றன. அதன்படி, தற்போது ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் தான் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக வருகிறது. 

பகிரப்பட்ட படத்தில் ஏராளமான விமானங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அனைத்து விமானங்களும் சிவப்பு மற்றும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இந்த விமானங்களில் இறக்கைகள் இல்லாத விமானம் மட்டும் உள்ளது. அதை தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 7 நொடிகளுக்குள். உங்களுக்கு உண்மையிலேயே கண் பார்வை கூர்மையாக இருக்கிறது என்றால் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

முதலில் படத்தை நன்றாக உற்று கவனியுங்கள். இப்போது நீங்கள் எங்கிருந்து எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்திருப்பீர்கள் அல்லவா? ஆனால், கண் பார்வை கூர்மை உள்ளவர்கள் உண்மையில் வித்தியாசமாக சிந்தித்து இருப்பீர்கள். அந்த இறக்கை இல்லாத விமானத்தை 7 நொடிகளுக்குள் கண்டும் பிடித்திருப்பீர்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்! இல்லை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்று மண்டையை போட்டு குழப்பிக் கொண்டிருக்கீர்களா? இதோ விடையை பார்க்கலாம் வாங்க.

Also Read:  ஆரோக்கியமான வாழ்வுக்காக காலையில் எழுந்ததும் செய்யக்கூடியவை

ரொம்பவே ஈஸி தான்… முதலில் பகிரப்பட்ட படத்தில் உள்ள நன்றாக உற்றுக் கவனியுங்கள். விடை எப்பவும் எளிதில் கண்டுபிடிக்கும் விதத்தில் அமைந்திருக்காது. அதனால், சின்ன விஷயத்தையும் தவறவிடாமல் உற்று கவனிக்க வேண்டும். மேலிருந்து கீழாக ஒவ்வொரு நெடுவரிசையையும் தேடுங்கள். தற்போது, இரண்டாவது நெடுவரிசையில் கீழே இறக்கை இல்லாத அந்த விமானத்தை காணலாம். என்ன விடையை கண்டுபிடுத்து விட்டீர்களா? இந்தப் படப் புதிர், உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் பகிர்ந்து அவர்களையும் கண்டுபிடிக்க சொல்லுங்கள்.

கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
Exit mobile version