5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Food Recipes: காலை ஸ்நாக்ஸாக சாப்பிட சூப்பர் டிஸ்.. பனீர் சீஸ் கட்லெட் ஈஸியா இப்படி செய்து கொடுங்க!

Paneer Cheese Cutlet: காலை உணவு மற்றும் ஸ்நாக்ஸாக நல்ல ஆரோக்கியமான ஏதாவது ஒன்றை உண்ண வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், தாராளமாக பனீர் சீஸ் கட்லெட்டுகளை செய்து அசத்தலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடைகளில் அதிகம் விரும்பி வாங்கப்படும் பனீர் சீஸ் கட்லெட்டை வீட்டிலேயே சுவையாகவும், ஆரோக்கியமாகவும் சாப்பிடலாம் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.

Food Recipes: காலை ஸ்நாக்ஸாக சாப்பிட சூப்பர் டிஸ்.. பனீர் சீஸ் கட்லெட் ஈஸியா இப்படி செய்து கொடுங்க!
பனீர் சீஸ் கட்லெட் (Image: Freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 03 Oct 2024 10:54 AM

இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் கடைகளில் தயாரிக்கப்படும் உணவுகளையே அதிகம் விரும்புகிறார்கள். கடைகளில் நாம் வாங்கும் சில உணவுகள் தரமற்றவையாக இருக்கலாம். ஒரு சில கடைகளில் அதே எண்ணெயை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் உணவுகள் பொறிக்கப்படுகிறது. இது உங்களுக்கு ஆரோக்கியமற்ற சூழ்நிலையை தரலாம். காலை உணவு மற்றும் ஸ்நாக்ஸாக நல்ல ஆரோக்கியமான ஏதாவது ஒன்றை உண்ண வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், தாராளமாக பனீர் சீஸ் கட்லெட்டுகளை செய்து அசத்தலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடைகளில் அதிகம் விரும்பி வாங்கப்படும் பனீர் சீஸ் கட்லெட்டை வீட்டிலேயே சுவையாகவும், ஆரோக்கியமாகவும் சாப்பிடலாம் என்று இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Food Recipes: 5 நிமிடத்தில் செய்யக்கூடிய 2 சூப்பர் ரெசிபி.. சூடான சோறுடன் சாப்பிட ஜோராக இருக்கும்!

பனீர் சீஸ் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:

பனீர் – 200 கிராம்
உருளைக்கிழங்கு – 2
பெரிய வெங்காயம் – 2
குடை மிளகாய் – 1
கொத்தமல்லி – சிறிதளவு
மிளகு தூள் – ஒரு டீஸ்பூன்
கற்பூரவள்ளி இலை தூள் – அரை டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் – அரை டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் பவுடர் – 4 ஸ்பூன்
அரிசி மாவு – 2 ஸ்பூன்
தக்காளி கெட்ச்அப் – 1 ஸ்பூன்
சில்லி சாஸ் – 1 ஸ்பூன்
பிரெட் க்ராம்ஸ்
எண்ணெய் – சிறிதளவு

ALSO READ: Food Recipes: தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி செய்வது எப்படி..? சூப்பர் ரெசிபி இதோ!

பனீர் சீஸ் கட்லெட் செய்முறை:

  • முதலில் 2 உருளைக்கிழங்கை எடுத்து தண்ணீரில் ஊற்றி வேகவைத்து கொள்ளவும்.
  • 200 கிராம் பனீரை எடுத்து லேசாக மசித்து கொள்ளவும். அதனுடன், வேகவைத்த உருளைகிழங்கை மசித்து பனீருடன் நன்றாக கலக்கி கொள்ளவும்.
  • தொடர்ந்து, அதில் பொடி பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பொடி பொடியாக நறுக்கி வைத்த குடை மிளகாயை கலந்து கொள்ளவும்.
  • இப்போது இந்த உருளைக்கிழங்கு – பனீர் கலவையில் 1 டீஸ்பூன் ஆர்கனோ (கற்பூரவள்ளி இலை தூள் – இவை பீட்சா, பர்கர் போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படும்), அரை டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • இப்போது தயாரிக்கப்பட்ட மசாலா கலவைகளில் இருந்து நன்றாக உங்களுக்கு தேவையான அளவுகளில் உருண்டையை பிடித்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு இதனுடன் சீஸ் சேர்க்க விருப்பமில்லை என்றால், சேர்க்க வேண்டாம். சீஸ் சேர்க்க வேண்டும் என்றால் நடுவில் வட்ட வடிவில் செய்து மூடி வைத்து வடிவம் கொடுக்கவும். இப்படி அனைத்து கட்லெட்களையும் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 4 ஸ்பூன் கார்ன்ஃப்ளார் பவுடர், 2 ஸ்பூன் மாவு மற்றும் அரை ஸ்பூன் கருப்பு மிளகு தூள், சிறிதளவு உப்பு சேர்க்கவும். தொடர்ந்து அதில், 1 ஸ்பூன் தக்காளி கெட்ச்அப் மற்றும் சில்லி சாஸ் கலந்து மாவு செய்து கொள்ளுங்கள். மாவு மிகவும் லேசாக இருக்கக்கூடாது. கெட்டியாக இருக்கும் போதுதான் உருண்டையுடன் நன்றாக ஒட்டி கொள்ளும்.
  • தொடர்ந்து பிரெட் க்ராம்ஸ் மற்றும் தயாரிக்கப்பட்ட கட்லெட்டுகளை இந்த மாவில் போட்டு நன்றாக ஒட்டும்படி எடுத்து கொள்ளவும்.
  • அப்போதுதான் நீங்கள் எண்ணெயில் வறுக்கும்போது ஒட்டாமல் இருக்கும். நீங்கள் சீஸ் இல்லாமல் கட்லெட் செய்கிறீர்கள் என்றால் பிரெட் க்ராம்ஸ் மீது ஒரு கோட்டிங் செய்தால் போதுமானது. சீஸ் சேர்ப்பதாக இருந்தால் இரண்டு முறை நன்றாக கோட்டிங் கொடுங்கள்.
  • கேஸை ஆன் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் அதில் சீஸ் கட்லெட்டுகளை போடவும். சீஸ் கட்லெட்டுகள் பழுப்பு நிறமாக மாறும் வரை நன்றாக வறுக்கவும். மேல் அடுக்கு நன்றாக பொறிந்தவுடன் ட்லெட்டுகளை வெளியே எடுக்கவும் இப்படியே அனைத்து கட்லெட்டுகளையும் வறுத்து எடுக்கவும்.
  • இப்போது நீங்கள் செய்ய நினைத்த பனீர் சீஸ் கட்லெட்டுகள் தயாராக உள்ளன. இதனுடன், நீங்கள் சாஸூ அல்லது சட்னி சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பனீர் சாப்பிடுவதால் கிடைக்கும் சில நன்மைகள்:

  • பனீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • பனீரில் உள்ள பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • பனீரில் இருக்கும் புரோபயாடிக் பாக்டீரியா செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும்.
  • பனீரில் உள்ள லினோலிக் அமிலம் உடலில் கொழுப்பு எரியும் செயல்முறையை துரிதப்படுத்த உதவுகிறது.
  • பனீரில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

Latest News