Parambikulam Tour: பரம்பிக்குளம் மிஸ் பண்ணாதீங்க.. குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர சூப்பர் இடம்..!
Tourist Place: பொள்ளாச்சியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும் ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது பரம்பிக்குளம். இது கேரள மாநிலத்தைச் சேர்ந்தது என்றாலும், தமிழகத்தின் பொள்ளாச்சி வழியாக சென்று பார்வையிட முடியும். இந்த இடம் இயற்கை அழகுடன், பிரமிக்க வைக்கும் அடர்ந்த காடுகளுடன் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். வாழ்க்கையில் ஒருமுறையாவது அனைவரும் சென்று பார்வையிட சிறந்த இடம் என்றே இதை சொல்லலாம்.
பரம்பிக்குளம்: பரம்பிக்குளம் பாலக்காட்டில் இருந்து 89 கிலோமீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும் ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. பரம்பிக்குளம் கேரள மாநிலத்தைச் சேர்ந்தது என்றாலும், தமிழகத்தின் பொள்ளாச்சி வழியாகத்தான் சென்று பார்வையிட முடியும். இந்த இடம் இயற்கை அழகுடன், பிரமிக்க வைக்கும் அடர்ந்த காடுகளுடன் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். வாழ்க்கையில் ஒருமுறையாவது அனைவரும் சென்று பார்வையிட சிறந்த இடம் என்றே இதை சொல்லலாம். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் நேரடியாக கேரளாவிற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொள்ளாச்சி வழியாக பரம்பிகுளத்திற்கு செல்லலாம். இந்த இடங்களை சுற்றி பார்க்க கார் உள்ளிட்ட சொந்த வாகனம் இருப்பது நல்லது. இப்படி அழகு நிறைந்த இடத்தை பற்றி முழுவதும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
ALSO READ: Waterfalls: சென்னையை சுற்றி இத்தனை அருவிகளா..? ஒருநாளில் சென்று வர சூப்பர் இடங்கள்..!
பரம்பிக்குளத்திற்கு எப்படி செல்வது..?
பொள்ளாச்சியில் இருந்து பரம்பிகுளம் போகும் வழியில் சேத்துமடை சென்ற செக் போஸ்ட் உள்ளது. இது சரியாக பொள்ளாச்சியில் இருந்து 25 கிமீ தூரத்தில் உள்ளது. இங்கு ஒரு நபருக்கு ரூ. 50 என்ற கணக்கில் வனத்துறையிடம் கட்டணம் செலுத்தி காலை 7 மணி முதல் மாலை 4 மணிக்குள் அனுமதி பெற்று கொள்ளலாம். மீண்டும் ஒரு செக் போஸ்ட் இருக்கும் அங்கும் அனுமதி பெற்று உள்ளே சென்றால் கேரள எல்லை ஆரம்பம் ஆகும். அங்கு மீண்டும் ஒரு செக் போஸ்ட் இருக்கும், அதிலும் அனுமதி பெற்று கொண்டு காட்டு பகுதிகளுக்கு நுழையலாம்.
பரம்பிக்குளம் புலிகள் காப்பகம்:
பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்குள் சென்றவுடன் உங்களுக்கு என்ன மாதிரியான பேக்கேஜ் வேண்டுமோ, அதை தேர்வு செய்து டிக்கெட் எடுத்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு காட்டுக்குள் சவாரி, மலையேற்றம் என்றால் அதற்கு ஏற்றாற்போலும், இரவில் தங்குதல், படகு சவாரி உள்ளிட்டவைகளுக்கு ஏற்றாற்போல் கட்டணம் அங்கு இருக்கும்.
பரம்பிக்குளத்தில் தங்குபவர்கள் மதிய சாப்பாடு, அறை உள்ளிட்ட வசதிகளை வனத்துறை தேவையாக கட்டணத்தை பெற்றுகொண்டு ஏற்படுத்தி கொடுக்கும். இதில், ஜங்கிள் சவாரி, மூங்கில் படகு சவாரி என சவாரிகள் முடிந்தது இரவு 9 மணிக்கு இரவு உணவு கொடுப்பார்கள்.
ஜங்கிள் சவாரி:
உங்களுக்கு அதிர்ஷடம் இருந்தால் ஜங்கிள் சவாரி செய்யும்போது சிங்கவால் மக்காக் , இந்திய கவுர் , நீலகிரி தஹ்ர் , இந்திய யானை , வங்கப்புலி , இந்திய சிறுத்தை , காட்டுப்பன்றி , டோல் , சாம்பார் , பானெட் மக்காக் , நீலகிரி லாங்கூர் , சோம்பல் கரடி , நீலகிரி மார்டன் , சிறிய திருவாங்கூர் ஃபிரெல் உள்ளிட்ட விலங்குகளை கண்டுகளிக்கலாம்.
ALSO READ: Goa Tour: குறைந்த செலவில் கோவா சுற்றுலா.. இதோ தெளிவான டூர் விவரம்!
பரம்பிக்குளம் இயற்கை பூங்காவை முழுமையாக சுற்றி பார்க்க இரண்டு நாள் பயணத்தில் ஒரு இரவுடன் தங்க இருவருக்கு கிட்டத்தட்ட ரூ. 15,000 என்று கூறப்படுகிறது. சீசனுக்கு ஏற்றாற்போல் விலை மாற்றமும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அங்கு சென்று நீங்கள் விசாரித்து கொள்வது நல்லது. இந்த பேக்கேஜில், தங்குமிடம், உணவு, சவாரி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வனத்துறை சார்பில் அமைத்து தரப்படும். புலிகளை எளிதாகப் பார்க்கலாம். உங்கள் ஓட்டுநர் வழிகாட்டியுடன் தனியார் வாகனத்தில் பயணம் செய்து பரம்பிக்குளம் இயற்கை பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தைப் குடும்பத்துடன் பார்வையிடலாம்.