Women’s Health: கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையா..? இந்த விதைகள் நல்ல தீர்வை தரும்..!
PCOD Diet Tips: கருப்பை நீர்க்கட்டி பிரச்சனைகளைத் தவிர்க்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை (காய்கறிகள், ஆப்பிள்கள், பேரிக்காய், கொய்யா, ரொட்டி, ஓட்ஸ், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள்) சாப்பிடுங்கள். இவற்றில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை சீராக்கி கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன.
பிசிஓடி பிரச்சனை: இன்றைய காலக்கட்டத்தில் 15 வயது முதல் 25 வயது வரை இருக்கும் இளம் பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. பிசிஓடி என்பது கருப்பைகளுக்கு அசாதாரணமாக ஆண்ட்ரோஜன்களை உற்பத்து செய்யும் ஒரு நிலை. இதன் காரணமாக, கருப்பைகளுக்குள் நீர்க்கட்டிகள் உருவாகிறது. இதனால், திடீர் எடை அதிகரிப்பு மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பிசிஓடி அல்லது பிசிஓஎஸ் நோயால் பாதிக்கப்படும்போது எடை அதிகரிப்பது இயல்பானது. இந்த நேரத்தில், உடலின் சர்க்கரை அளவு மற்றும் கார்டிசோலின் அளவு மாறுகிறது. இதனால் எடை கூடுகிறது. எனவே, இதுபோன்ற சூழ்நிலைகளில், உணவு பழக்கங்களில் ஆரோக்கியமான மாற்றங்களை செய்வது அவசியம். பிசிஓடி அல்லது பிசிஓஎஸ் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும் சில விதைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுவோம்.
சியா விதைகள்:
சியா விதைகளில் 20 சதவீதம் புரதமும், 60 சதவீதம் ஒமேகா 3 அமிலமும் உள்ளன. அவை பெண்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும், இது கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பூசணி விதைகள்:
பூசணி விதைகளில் பீட்டா-சிட்டோஸ்டெரால் நிறைந்துள்ளது. இது உடலில் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. கொலஸ்ட்ரால் அளவும் கட்டுப்படுத்துகிறது.
வெந்தயம்:
கொலஸ்ட்ரால் மற்றும் ஹார்மோன் கட்டுப்பாட்டிற்கு வெந்தயம் நன்றாக வேலை செய்கிறது. இதில் உம்பே சபோனின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இவை வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள ஹார்மோன் சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
சூரியகாந்தி விதைகள்:
சூரியகாந்தி விதைகள் PCOS -ஐ கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் செலினியம் புரோஜெஸ்ட்டிரோன் சுரப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.
ஆளி விதைகள்:
ஆளி விதைகள் உடலில் உள்ள ஆண்ட்ரோஜன்களின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், இது பெண்கள் உடலில் ஹார்மோன்களின் சுரப்பையும் குறைக்கிறது.
கசகசா:
கசகசாவில் உள்ள கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி மற்றும் துத்தநாகம் ஆகியவை உடலில் உள்ள PCOS-ஐ எதிர்த்துப் போராட உதவுகின்றன. ஹார்மோன்களின் அளவையும் ஒழுங்குபடுத்துகிறது.
ALSO READ: On This Day in 2002: டெஸ்ட் வரலாற்றில் 19 வயதில் இரட்டை சதம்.. இங்கிலாந்தை பங்கம் செய்த மிதாலி ராஜ்!
மேலும் சில..
- கருப்பை நீர்க்கட்டி பிரச்சனைகளைத் தவிர்க்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை (காய்கறிகள், ஆப்பிள்கள், பேரிக்காய், கொய்யா, ரொட்டி, ஓட்ஸ், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள்) சாப்பிடுங்கள். இவற்றில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள், உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை சீராக்கி கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
- கருப்பை நீர்க்கட்டியை தவிர்க்க உடல் எடையை கட்டுப்படுத்த வேண்டும். கொழுப்பு அதிகம் உள்ள உணவு வீக்கம் உட்பட பல உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு பதிலாக புரதம் நிறைந்த உணவுகளை (சிறிய மீன், முட்டை, கோழி, பருப்பு) உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன, இது கருப்பை நீர்க்கட்டிகளை உருவாக்குவதை மறைமுகமாக தடுக்கிறது. எனவே ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் (சணல் விதைகள், ஆளிவிதைகள், சியா விதைகள், மீன், கொட்டைகள்) நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.