ABC Juice : ஏபிசி ஜூஸை இந்த மருத்துவ பிரச்னைகள் உள்ளவர்கள் குடிக்க கூடாது.. ஏன் தெரியுமா?
Do not drink | ABC ஜூஸ் ஆரோக்கியமான மற்றும் பலபலப்பான சருமத்திற்காக பரிந்துரைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே பலரும் இந்த ஜூஸை தினமும் பருகி வருகின்றனர். இந்த ஜூஸ் மக்களிடம் பிரபலமடைந்த நிலையில், ABC பொடியும் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ABC ஜூஸ் : சமீப காலமாக அதிக புழக்கத்தில் உள்ள வார்த்தை தான் ABC ஜூஸ். இந்த ஜூஸ் ஆரோக்கியமான மற்றும் பலபலப்பான சருமத்திற்காக பரிந்துரைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே பலரும் இந்த ஜூஸை தினமும் பருகி வருகின்றனர். இந்த ஜூஸ் மக்களிடம் பிரபலமடைந்த நிலையில், ABC பொடியும் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜூஸில் பல நன்மைகள் இருந்தாலும் அதே அளவு சில பிரச்னைகளும் உள்ளன. குறிப்பாக சிலர் இந்த ஜூஸை குடித்தால் ஆபத்தில் முடிந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். யார், யார் இந்த ஜூஸை குடிக்கலாம், யார் குடிக்க கூடாது, இந்த ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Breast Feeding: அடேங்கப்பா! தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் இவ்வளவு நன்மைகளா..?
பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் பிரச்னைகள்
ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகிவற்றை கொண்டு தயாரிக்கப்படுவது தான் இந்த ABC ஜூஸ். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஜூஸ் குடிப்பதன் மூலம் உடல் மெலிந்து, சருமம் பலபலப்பாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதில் சில சிக்கல்களும் உள்ளன. அதன்படி, சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் இந்த ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பீட்ரூட்டில் ஆக்சலின் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு காரணமாக அமைகிறது. மேலும் பீட்ரூட்டில் பீட்டைன் உள்ளதால் இது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்கிறது. எனவே சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் ABC ஜூஸ் குடிப்பது பாதுக்காப்பானதாக இருக்கும்.
இதையும் படிங்க : Relationship Advice: திருமண வாழ்க்கையில் எப்போதும் இந்த தப்பு பண்ணாதீங்க.. உறவை ஒரு நொடியில் முறிக்கும்!
யாரெல்லாம் ABC ஜூஸ் குடிக்க கூடாது
ABC ஜூஸில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் அதில் சில ஆபத்துக்களும் உள்ளன. குறிப்பாக சில உடல்சார்ந்த பிரச்னை உள்ளவர்கள் இந்த ஜூஸை குடிப்பதை தவிர்ப்பது சிறந்ததாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதன்படி சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த ஜூஸை குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இந்த உடல் பிரச்னைகள் உள்ளவர்கள் மட்டுமன்றி, தினமும் ABC ஜூஸ் குடிப்பதன் மூலம் உடலில் அதிகப்படியான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு தேங்கி உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.