Periods At Early Age: மிக இளம் வயதில் பெண் குழந்தைகள் வயதுக்கு வர காரணம் என்ன..? பெற்றோர்களே! இவற்றை கவனியுங்கள்..!
Periods: நவீன காலத்தில் பெண் குழந்தைகள் 8 முதல் 12 வயதிற்குள்ளாகவே வயதுக்கு வந்துவிடுகின்றனர். இது பெரும்பாலான பெண்களுக்கு கவலையளிக்கிறது. இவ்வளவு இளம் வயதிலேயே பெண்கள் வயதுக்கு வந்து மாதவிடாய் சுழற்சியை தொடங்குவது ஒரு கவலையான சூழ்நிலையாகும். இதற்கு பெண் குழந்தைகள் மனதளவில் தயாராக இருப்பது மிக மிக முக்கியம். பெண் குழந்தைகள் 12 முதல் 15 வயதுக்குள் வயதுக்கு வரும்போது அந்த சூழ்நிலையை எளிதாக கையாள முடியும். ஆனால், இளம் வயதில் அந்த மாதவிடாய் சுழற்சியை எதிர்கொள்ளும்போது அவர்களால் அதை எப்படி கையாள்வது என்பது தெரியவில்லை.
ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு மாதம் மாதம் மாதவிடாய் நாட்களை சந்திப்பார்கள். இது இயற்கையான ஒரு செயல். இதன்மூலம், பெண்ணுக்கு கருமுட்டை உற்பத்தியாகி, எதிர்காலத்தில் அவரால் தாயாக முடியும். பொதுவாக ஒவ்வொரு பெண்ணுக்கும் வயதுக்கு வருவது என்பது வெவ்வேறு நேரத்தில் தொடங்கும். முன்பு எல்லாம் பெண்கள் 12 முதல் 15 வயதுக்குள்தான் வயதிற்கு வருவார்கள். ஆனால், தற்போதையை காலத்தில் மாறிவரும் வாழ்க்கை முறையால், பெண் குழந்தைகள் மிக இளம் வயதிலேயே வயதுக்கு வந்துவிடுகின்றனர். இது முன்பை விட தற்போது அதிகரித்துள்ளது. இந்தநிலையில், பெண் குழந்தைகள் மிக இளம் வயதிலேயே வயதுக்கு வருவதற்கான காரணங்கள் என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
ALSO READ: Cavity Home Remedy: சொத்தை பற்களால் அவதியா..? இவற்றை செய்து நிவாரணம் பெறுங்கள்!
என்ன காரணம்..?
நவீன காலத்தில் பெண் குழந்தைகள் 8 முதல் 12 வயதிற்குள்ளாகவே வயதுக்கு வந்துவிடுகின்றனர். இது பெரும்பாலான பெண்களுக்கு கவலையளிக்கிறது. இவ்வளவு இளம் வயதிலேயே பெண்கள் வயதுக்கு வந்து மாதவிடாய் சுழற்சியை தொடங்குவது ஒரு கவலையான சூழ்நிலையாகும். இதற்கு பெண் குழந்தைகள் மனதளவில் தயாராக இருப்பது மிக மிக முக்கியம். பெண் குழந்தைகள் 12 முதல் 15 வயதுக்குள் வயதுக்கு வரும்போது அந்த சூழ்நிலையை எளிதாக கையாள முடியும். ஆனால், இளம் வயதில் அந்த மாதவிடாய் சுழற்சியை எதிர்கொள்ளும்போது அவர்களால் அதை எப்படி கையாள்வது என்பது தெரியவில்லை. இவர்கள் மிக விரைவாக வயதுக்கு வருவதற்கு ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, உணவு பழக்கம் காரணமாக அமைகிறது.
உடல் பருமன்:
பெண் குழந்தைகள் மிக இளம் வயதில் வயதுக்கு வருவதற்கு உடல் பருமன் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் சிறுவயதிலேயே உடல் பருமனால் அவதிப்பட்டு வருவதுடன், உடல் பருமனால் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க செய்கிறது. இது அவர்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோனின் அளவை அதிகரிக்க செய்து, பெண்களின் உடலில் பல பெரிய மாற்றங்களை உருவாக்குகிறது. இதன்மூலம், சிறு வயதிலேயே இந்த ஹார்மோனில் விரைவான மாற்றங்கள் ஏற்பட்டு, மிகச்சிறிய வயதிலேயே வயதுக்கு வந்து விடுகின்றன.
துரித உணவுகள்:
கடைகளில் இருந்து வாங்கும் உணவுகளை சாப்பிடுவது இந்த காரணிகளுக்கு பெரும் பங்கு வகிக்கிறது. இப்போதெல்லாம் குழந்தைகள் வெளியில் இருந்து வாங்கும் உணவை அதிகம் சாப்பிட விரும்புகிறார்கள். இந்த உணவுகள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளாக இருக்கின்றன. இது உடல் பருமனை அதிகரிக்க செய்து, இன்சுலில் அளவையும் அதிகரிக்க செய்கிறது. இதன் காரணமாக, பெண் குழந்தைகள் மிக விரைவாக வயதுக்கு வந்துவிடுகின்றனர்.
உடல் உழைப்பு:
இன்றைய காலத்து பெண் குழந்தைகள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதாலும், உடல் வளர்ச்சி விரைவாக நடைபெறுகிறது. சிறு வயதிலேயே சைக்கிள் ஓட்டுதல், நீந்த செல்வதால் பெண்கள் சீக்கிரம் வயது தொடங்குகின்றன. இது ஆரோக்கியமான ஒன்று, பெற்றோர்கள் கவலையடைய தேவையில்லை.
பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்..?
- பெற்றோர்கள் குறிப்பிட்ட வயது முதலே பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு வருதல் பற்றியும் மற்றும் மாதவிடாய் பற்றிய புரிதலை சொல்லி கொடுங்கள். இது புரிதலாக இருக்க வேண்டுமே தவிர எக்காலத்திலும் அழுத்தமாக இருக்க கூடாது.
- பெற்றோர்கள் பெண் குழந்தைகள் உடல் நிலையில் சிறுவயது முதலே அக்கறை செலுத்துங்கள். முடிந்தவரை அவர்கள் உடல் பருமன் பிரச்சனையை சந்திக்க விடாமல் பார்த்து கொள்ளுங்கள்.
- கடைகளில் விற்கப்படும் துரித மற்றும் பதப்படுத்த உணவுகளுக்கு பதிலாக வீட்டில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவை உண்ணும்படி பழக்கத்தை ஏற்படுத்தி கொடுங்கள்.
- நீங்கள் உங்கள் பெண் குழந்தைகள் மீது அக்கறையை செலுத்த வேண்டும் என்றாலோ, தேவைப்பட்டாலோ குழந்தையை மருத்துவரிடம் அழைத்து சென்று மாதவிடாய் பற்றிய ஆலோசனை வழங்கி உதவி செய்யுங்கள்.
- நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவை இளம் வயது முதல் பெண் குழந்தைகளுக்கு கொடுத்து பழகுங்கள்.