Menstrual Cramps: மாதவிடாய் வலியிலிருந்து விடுபட இதுவே சிறந்த வழி.. 5 நிமிடத்தில் நிவாரணம் கிடைக்கும்!
Periods Pain Home Remedies: மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைக்க, வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். இவை இயற்கையான முறையில் வலியை குறைக்க பெரிதும் உதவி செய்யும்.
மாதவிடாய் காலத்தில் பெண்களின் பிறப்புறுப்புகளில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படும். இந்த மாதவிடாய் ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு 30 நாட்களுக்கு ஒருமுறை நிகழும் நிகழ்வாகும். மாதவிடாய் நேரத்தின்போது, பெரும்பாலான பெண்கள் அடிவயிற்றில் வலியை உணர்வார்கள். இது பீரியட்ஸ் கிராப்ஸ் என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் இந்த வலி மிகவும், அதிகப்படியான வலியை தரும். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பெண்கள் வலியால் துடிப்பார்கள். அதன்படி, ஒவ்வொரு மாதத்தின்போது மாதவிடாய் காலத்தில் பல பெண்கள் வலியால் அவதிப்படுகிறார்கள்.
ALSO READ: தேன் மற்றும் மிளகு சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
மாதவிடாய் நேரத்தில் வலி ஏன் ஏற்படுகிறது..?
மாதவிடாய் நேரத்தில் சில பெண்களுக்கு இடுப்பு, தொடைகள் மற்றும் வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இது ஏன் ஏற்படுகிறது என்றால், மாதவிடாய் காலங்களில் பெண்களின் கருப்பை வேகமாக சுருங்க ஆரம்பிக்கும். இதன் காரணமாக, கருப்பையின் உள்புறத்தில் இருக்கும் இரத்த தமனிகள் சுருக்கப்பட்டு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனின் விநியோகம் தடைப்படும். அப்போது, திசுக்கள் வலியை ஏற்படுத்தும் இரசாயனங்களை வெளியிட தொடங்கும். இதுவே, வலியை உண்டாக்கும்.
அதேபோல், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இரைப்பை பிரச்சனைகள் அடிக்கடி உண்டாகும். இதன் காரணமாகவும் வயிற்று வலி பிரச்சனை ஏற்படும்.
மாதவிடாய் காலத்தில் வலி எவ்வளவு நேரம் இருக்கும்..?
மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு ஏற்பட தொடங்கும்போதே, வலியும் அதனுடன் தொடங்கும். சில பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பே, வலி தொடங்கிவிடும். இந்த வலி அடுத்த 48 முதல் 72 மணி வரை நீடிக்கும். சில பெண்களுக்கு இந்த நேரத்தை தாண்டியும் வலியை உணரலாம்.
ALSO READ: Diabetes: சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? வராமல் தடுப்பது எப்படி..?
மாதவிடாய் வலியை உடனடியாக குறைப்பது எப்படி..?
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைக்க, வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். இவை இயற்கையான முறையில் வலியை குறைக்க பெரிதும் உதவி செய்யும்.
- அரை டீஸ்பூன் சீரகத்தூள், அரை டீஸ்பூன் கல் உப்பு மற்றும் ஒரு கப் சாதத்தை வெதுவெதுப்பான நீரில் கரைத்து கொள்ளவும். தண்ணீரை வடிக்கட்டியபின், இதனுடன் நெய் கலந்து சாப்பிடலாம். இது மாதவிடாய் காலத்தில் நீங்கள் வலியால் அவதிப்படும்போது, வலியை குறைக்க உதவி செய்யும். அதேபோல், மாதவிடாய் வருவதற்கு முன்பு காலையில் இவ்வாறு நீங்கள் சாப்பிடலாம். இது பீரியட்ஸ் வரும்போது வலி ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும்.
- மாதவிடாய் நேரத்தில் பிடிப்புகள் ஏற்பட்டால், ஒரு சூடான வாட்டர் பாட்டில், ஹாட் பேக் போன்றவற்றை வயிற்றில் அல்லது கீழ் முதுகின் கீழ் வைப்பதன்மூலம் தசைப்பிடிப்புகளில் இருந்து நிவாரணம் தரும்.
- சுடுதண்ணீரில் குளிப்பது மாதவிடாய் நேரத்தில் வலி மற்றும் தசைப்பிடிப்புகளை குறைக்க உதவும்.
- புதினா, லாவெண்டர், இஞ்சி அல்லது சோம்பு போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை தேநீர் குடிப்பது வலியிலிருந்து நிவாரணத்தை தரும்.
- பொடி பொடியான நறுக்கிய இஞ்சியை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடித்து வந்தால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
- சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை வீக்கத்தை குறைக்கவும், வலியிலிருந்து நிவாரணம் பெறவும் உதவி செய்யும்.
- பப்பாளி சாப்பிடுவது மாதவிடாய் காலத்தில் இரத்தை ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, வலியை குறைக்க உதவி செய்யும்.
- மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி, இயற்கை வலி நிவாரணியாக செயல்படுகிறது. இந்தநிலையில், மாதவிடாய் காலத்தில் துளசியில் உள்ள காஃபிக் அமிலம் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. மாதவிடாய் வலியில் இருந்து நிவாரணம் பெற 7-8 துளசி இலைகளை அரை கப் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
- மாதவிடாய் வருவதற்கு 5 நாட்களுக்கு முன், தினமும் மஞ்சள் கலந்த பாலை குடித்து வந்தால், வலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும், இதை தினந்தோறும் உட்கொள்வதன்மூலம் பல நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)