IQ Test : எந்த ஷூவுக்கு ஜோடி இல்லை.. 6 நொடிக்குள் கண்டிபிடிக்க முடியுமா? - Tamil News | picture puzzle iq test find which boot does not have a pair in tamil | TV9 Tamil

IQ Test : எந்த ஷூவுக்கு ஜோடி இல்லை.. 6 நொடிக்குள் கண்டிபிடிக்க முடியுமா?

Updated On: 

17 Jul 2024 08:21 AM

உங்களுடைய நுண்ணறிவு மற்றும் கூர்ந்து கவனிக்கும் திறன்களை பரிசோதிக்கலாம் வாங்க. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஜோடி இல்லாத பூட்ஸை மட்டும் 6 வினாடிகளில் கண்டிபிடுங்க பார்க்கலாம். அப்படி 6 வினாடிக்குள் நீங்க அதை கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு உண்மையிலேயே IQ லெவல் அதிகம் இருக்கிறது என்று அர்த்தம்.

IQ Test : எந்த ஷூவுக்கு ஜோடி இல்லை.. 6 நொடிக்குள் கண்டிபிடிக்க முடியுமா?

மாதிரி புகைப்படம்

Follow Us On

படப் புதிர்கள், நமது அறிவாற்றல் மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன்களை சோதிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு படத்தை கொடுத்து அதில் உள்ள தவறை கண்டுபிடிப்பது, படத்தில் மறைந்திருக்கும் அல்லது வேறுபட்ட பொருளை கண்டுபிடிப்பது என பல சவால்கள் விடப்படும். அதை ஏற்று நாமும் கண்டுபிடிக்க முயற்சி செய்வோம். அப்போது நாம் நிறைய சிந்திக்க வேண்டிய இருக்கும் மற்றும் முழு கவனமும் ஒன்றன் மீது திரும்பும். இது மாதிரியான விளையாட்டுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால், நமது புத்தி கூர்மையாகும், நினைவாற்றல் அதிகரிக்கும், மூளையின் இரண்டு பக்கங்களுக்கும் தூண்டப்படும். அதுமட்டுமல்லாமல், ஒரு சிக்கலை தீர்க்க விரைவாக சிந்திக்க மனதை பயிற்றுவிக்கவும் உதவும். 

Also Read: அதிகாலையில் எழுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

தற்போது, அதுமாதிரியான ஒரு படப் புதிர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது, ஒரு படத்தில் 11 பூட்ஸ்களை கொடுத்து அதில் எந்த பூட்ஸுக்கு ஜோடி இல்லை என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் 6 வினாடிகளுக்குள். உங்களுக்கு உண்மையிலேயே புத்தி கூர்மை அதிகமாக இருக்கிறது என்றால் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

முதலில் படத்தை நன்றாக உற்று கவனியுங்கள். இப்போது நீங்கள் எங்கிருந்து எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்திருப்பீர்கள் அல்லவா? ஆனால், புத்தி கூர்மை உள்ளவர்கள் உண்மையில் வித்தியாசமாக சிந்தித்து இருப்பீர்கள். அந்த விடையை 6 விநாடிகளுக்குள் கண்டும் பிடித்திருப்பீர்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்! இல்லை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்று மண்டையை போட்டு குழப்பிக் கொண்டிருக்கீர்களா? இதோ விடையை பார்க்கலாம் வாங்க.

Also Read: போதைப்பொருள்.. பிரபல நடிகையின் சகோதரர் அதிரடியாக கைது.. என்ன நடந்தது?

ரொம்பவே சிம்பிள்.. வித்தியாசத்தை கண்டுபிடிக்க நீங்க முதலில் அதில் உள்ள பூட்ஸ்களின் எண்ணிக்கையை தெரிந்துக் கொள்ள வேண்டும். பிறகு, அதில் உள்ள ஹார்ட் மற்றும் ரைவுண்ட் டிஷனை பார்க்க வேண்டும். அதை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு பூட்ஸிற்கும் ஜோடியை சேர்த்துங்கள். அப்படி சேர்க்கும் போது 3 ஹார்ட் டிஷனை கொண்ட பூட்ஸ் ஜோடிகளும், 2 ரைவுண்ட் டிஷனை கொண்ட பூட்ஸ் ஜோடிகளும் இருக்கும். அதுபோக மீதி ஒரே ஒரு ரைவுண்ட் டிஷன் உள்ள பூட் மட்டும் ஜோடி இல்லாமல் எஞ்சியிருக்கும். அதுதான் விடை. கண்டுபிடித்து வீட்டீர்களா?

இந்தப் படப் புதிர், உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் பகிர்ந்து சேலஞ்ச் செய்யவும்.

உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
Exit mobile version