World Elephant Day 2024: உலக யானைகள் தினம் இன்று ஏன் கொண்டாடப்படுகிறது..? பிரதமர் மோடி அளித்த உறுதி!
Elephant: யானைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க உலகளவில் உள்ள மக்களையும், அமைப்புகளையும் ஒன்றிணைப்பதே உலக யானை தினத்தின் நோக்கமாகும். 2011ம் ஆண்டு யானை மறு அறிமுகம் அறக்கட்டளை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களான பாட்ரிசியா சிம்ஸ் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகியோர் உலக யானைகள் தினத்தை கொண்டாட முடிவு செய்தனர். அதன்பிறகு, முதல் முறையாக சர்வதேச யானைகள் தினம் 12 ஆகஸ்ட் 2012 அன்று முதல் கொண்டாடப்பட்டது.
உலக யானைகள் தினம்: யானைகள் காடுகளின் பொறியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றன. யானைகள் தங்கள் விருப்பப்படி காட்டின் வடிவத்தை ஆக்கவும், அழிக்கவும் முடியும். உலகத்தில் ஏற்படும் அதிநவீன வளர்ச்சி காரணமாக, யானைகள் அதிகளவில் அழிந்துவருகின்றன. எனவே, யானைகளை பாதுகாப்பதற்காக கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி முதல் உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இது உலக முழுவதும் உள்ள யானைகளின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சர்வதேச வருடாந்திர நிகழ்வாகும். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி உலக யானைகள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தியாவில் நாடு முழுவதும் 27 ஆயிரம் யானைகள் இருப்பதாக மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி எக்ஸ் பதிவு:
World Elephant Day is an occasion to appreciate the wide range of community efforts to protect elephants. At the same time, we reaffirm our commitment to doing everything possible to ensure elephants get a conducive habitat where they can thrive. For us in India, the elephant is… pic.twitter.com/yAW5riOrT1
— Narendra Modi (@narendramodi) August 12, 2024
யானைகளை பாதுகாப்பதற்கான சமூக முயற்சிகளை பாராட்டுவதற்கு உலக யானை தினம் ஒரு சந்தர்ப்பம் என்று பிரதமர் மோடி சமூக வலைதளமாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ உலக யானைகள் தினம் யானைகளைப் பாதுகாப்பதற்கான பரந்த அளவிலான சமூக முயற்சிகளைப் பாராட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகும். அதே நேரத்தில், யானைகள் செழித்து வளரக்கூடிய வசதியான வாழ்விடத்தைப் பெறுவதை உறுதிசெய்ய முடிந்த அனைத்தையும் செய்வோம் என்ற எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை, யானை நம் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில வருடங்களாக யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.” என குறிப்பிட்டுள்ளார்.
உலக யானைகள் தினத்தின் வரலாறு:
யானைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க உலகளவில் உள்ள மக்களையும், அமைப்புகளையும் ஒன்றிணைப்பதே உலக யானை தினத்தின் நோக்கமாகும். 2011ம் ஆண்டு யானை மறு அறிமுகம் அறக்கட்டளை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களான பாட்ரிசியா சிம்ஸ் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகியோர் உலக யானைகள் தினத்தை கொண்டாட முடிவு செய்தனர். அதன்பிறகு, முதல் முறையாக சர்வதேச யானைகள் தினம் 12 ஆகஸ்ட் 2012 அன்று முதல் கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதும் மூன்று வகையான யானைகள் உள்ளன. அவை:
- ஆப்பிரிக்க சவன்னா யானை
- ஆப்பிரிக்க வன யானை
- ஆசிய யானை