5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Monsoon Prevention: மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் பயந்து ஓடணுமா? இந்த கஷாயத்தை ட்ரை பண்ணுங்க!

Kashayam Recipe: மழைக்காலத்தில் சளி, இருமல் மற்றும் தொற்றுநோய் பிரச்சனைகள் தவிர்க்க, வீட்டிலேயே துளசி கஷாயம் தயாரித்து குடிக்கலாம். இந்த துளசி கஷாயம் பருவகால நோய்களை தடுப்பது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் பலப்படுத்தும். அதன்படி, துளசி கஷாயம் எளிய முறையில் எப்படி செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

Monsoon Prevention: மழைக்காலத்தில் சளி, காய்ச்சல் பயந்து ஓடணுமா? இந்த கஷாயத்தை ட்ரை பண்ணுங்க!
கஷாயம் (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 07 Nov 2024 21:18 PM

வானிலை குளிர்ச்சியாக மாற தொடங்கியதும் சிலருக்கு சளி, இருமல் அல்லது காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வர தொடங்கும். மழைக்காலம் தொடங்கியதும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்கும். இதனால், இத்தகைய பிரச்சனைகள் நம்மை நோக்கி படையெடுக்கும். மழைக்காலத்தில் சளி, இருமல் மற்றும் தொற்றுநோய் பிரச்சனைகள் தவிர்க்க, வீட்டிலேயே துளசி கஷாயம் தயாரித்து குடிக்கலாம். இந்த துளசி கஷாயம் பருவகால நோய்களை தடுப்பது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் பலப்படுத்தும். அதன்படி, துளசி கஷாயம் எளிய முறையில் எப்படி செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Food Recipe: இட்லி, தோசை போர் அடித்துவிட்டதா..? சுவையான கார பணியாரம் செய்து சாப்பிடுங்க..!

துளசி கஷாயம்

துளசி கஷாயம் செய்ய தேவையான பொருட்கள்:

துளசி இலைகள் – 10 முதல் 15
இஞ்சி – சிறு துண்டு
கருப்பு மிளகு – 5
கிராம்பு – 3
இலவங்கப்பட்டை – சிறு துண்டு
தண்ணீர் – 3 கப்
தேன் – சிறிதளவு

துளசி கஷாயம் செய்வது எப்படி..?

  • முதலில் கேஸ் அடுப்பை ஆன் செய்து ஒரு டீ பாத்திரத்தை வைக்கவும். அதில், மூன்று கப் அளவிலான தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் நன்றாக கொதித்தவுடன், எடுத்துவைத்துள்ள 10 முதல் 15 அளவிலான துளசி இலைகளை போடவும்.
  • இதை தொடர்ந்து, 5 முதல் 7 நிமிடங்கள் மிதமான தீயில் மூடி போட்டு கொதிக்க விடவும். ரெடியாக எடுத்து வைத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்க்கவும். தேன் மட்டும் சேர்க்காமல் தனியாக எடுத்து வையுங்கள்.
  • சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் கொதித்தவுடன் தண்ணீர் பாதியாக குறையும். இப்போது தீயை ஆப் செய்யவும்.
  • இப்போது, ஒரு டம்பளரில் காய்ச்சிய டீயை வடிகட்டி ஊற்றி, தேன் சேர்த்து குடித்தால் சூப்பரான துளசி கஷாயம் ரெடி.

மிளகு கஷாயம்:

மிளகு கஷாயம் செய்ய தேவையான பொருட்கள்:

  • இஞ்சி – 1/4 இன்ச்
  • வெல்லம் – தேவையான அளவு
  • மிளகு – 10
  • சீரகம் – 1/4 ஸ்பூன்
  • திப்பிலி – 1/4 இன்ச்

மிளகு கஷாயம் செய்வது எப்படி?

  • முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களை மிக்ஸி அல்லது இஞ்சி இடிக்கும் கல்லில் நன்றாக தட்டி கொள்ளவும் (மிக்ஸி என்றால் ஒரு அரை போதும்)
  • இப்போது அடுப்பை ஆன் செய்து ஒரு பாத்திரத்தை வைக்கவும். அதில், 2 முதல் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
  • தட்டி வைத்து மசாலா பொருட்கள் அனைத்தையும் போட்டு ஒரு கிளறு கிளறவும்.
  • தண்ணீர் 10 நிமிடங்கள் நன்றாக கொதித்தபின், தண்ணீர் நன்றாக சுண்டும் வரை காத்திருக்கவும்.
  • ஒரு டம்பளரில் வடிக்கட்டி தேவையான அளவு வெல்லம் சேர்த்து குடித்தால், காரசாரமான மிளகு கஷாயம் அல்லது டீ ரெடி

ALSO READ: Food Recipe: கீரை கொண்டு சாம்பார், தயிர் குழம்பு… வித்தியாசமான முறையில் இப்படி செய்து அசத்துங்க!

துளசி கஷாயம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

  • துளசி கஷாயம் குடிப்பதன்மூலம், உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். இது நோய் மற்றும் தொற்றுநோய்களை ஏற்படாதவாறு அபாயத்தை குறைக்கும்.
  • நீண்ட காலமாக சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவோருக்கு சிறந்த மருந்தாக இருக்கும்.
  • வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் நீக்கும்.
  • துளசியில் உள்ள ஆன்டி – வைரல் பண்புகள் சிறு சிறு நோய்களையும் குணப்படுத்தும், மன அழுத்தத்தையும் குறைக்கும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News