Banana: வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவது தீங்கு.. இந்த பிரச்சனைகள் உண்டாகும்! - Tamil News | Problems caused by eating too much banana; health tips in tamil | TV9 Tamil

Banana: வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவது தீங்கு.. இந்த பிரச்சனைகள் உண்டாகும்!

Published: 

04 Dec 2024 18:07 PM

Health Tips: வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. தினமும் குறைந்தது ஒரு வாழைப்பழத்தையாவது சாப்பிடும்படி, மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். உடலில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தாலோ அல்லது உடல் பலவீனமாக இருந்தாலோ வாழைப்பழம் தாராளமாக எடுத்து கொள்ளலாம்.

1 / 5எந்த உணவை சாப்பிட்டாலும் அதை சரியான அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. அதேபோன்றுதான் உடலை ஆரோக்கியமான வைத்துக்கொள்ளும் வாழைப்பழத்தை குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்வது நல்லது. அந்தவகையில் வாழைப்பழத்தை அதிகம் சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்வோம்.

எந்த உணவை சாப்பிட்டாலும் அதை சரியான அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. அதேபோன்றுதான் உடலை ஆரோக்கியமான வைத்துக்கொள்ளும் வாழைப்பழத்தை குறிப்பிட்ட அளவு எடுத்துக்கொள்வது நல்லது. அந்தவகையில் வாழைப்பழத்தை அதிகம் சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்வோம்.

2 / 5

வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள பழம் என்றாலும், ஒரு நாளைக்கு 2 முதல் 3 வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல. வாழைப்பழத்தில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலுக்கு தேவையான உடனடி ஆற்றலை கொடுக்கும்.

3 / 5

வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து கொழுப்பை குறைக்க உதவும். இதை அதிகமாக சாப்பிடும்போது உடலில் நார்ச்சத்து அதிகரித்து, எடை இழப்புக்கு பதிலாக எடையை அதிகரிக்க செய்யும். வாழைப்பழத்தில் உள்ள சர்க்கரை வயிற்றில் தொப்பையையும் அதிகரிக்க செய்யும்.

4 / 5

வாழைப்பழத்தில் தேவையான அளவு மாவுச்சத்து உள்ளது. இதை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது மலச்சிக்கல் பிரச்சனையை அதிகரிக்கும். அதேபோல், வாழைப்பழத்தில் உள்ள டானிக் அமிலம் அதிகப்படியான செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 2 வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிடக்கூடாது.

5 / 5

வாழைப்பழத்தில் கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகமாக உள்ளது. தினமும் அதிக வாழைப்பழத்தை சாப்பிடும்போதும் இந்த சர்க்கரை உள்ளடக்கம் இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும். எனவே, சர்க்கரை நோயாளிகள் தினமும் வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்லது கிடையாது.

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?