Estrogen Hormone: ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்கும் ஈஸ்ட்ரோஜன்.. இவ்வளவு பிரச்சனையை தருமா?
Estrogen's Effects: ஆண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்க உடல் பருமன், முதுமை, மருந்துகள், பாலியல் ஹார்மோன் சமநிலையின்மை போன்றவைகள் காரணமாக இருக்கலாம். ஆண்களுக்கு அதிகளவு ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியாகும்போது கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, டெஸ்டிகுலர் புற்றுநோய், கட்டிகள் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.
இரத்தத்தில் உள்ள இரசாயனங்களே ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகிறது. இவைதான் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளின் வேலை மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதில் உதவி செய்கிறது. அந்தவகையில், டெஸ்டோஸ்டிரோன் ஆண்களுக்கு அதிகமாகவும், ஈஸ்ட்ரோஜன் பெண்களுக்கு அதிகமாகவும் இருக்கும். ஈஸ்ட்ரோஜன் பெண் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது,. ஏனெனில் இந்த ஹார்மோனின் அளவு அவர்களின் உடலில் மிக அதிகமாக உள்ளது. ஆனால் இது ஆண்களுக்கு அதிகமாக அதிகரிக்க ஆரம்பிக்கும் போது சில பிரச்சனைகளை உண்டாக்கும். அந்தவகையில், ஆண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் உண்டாகும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ஆண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும்போது தொப்பை கொழுப்பு, மார்பக வளர்ச்சி, அசாதாரண வளர்ச்சி (கின்கோமாஸ்டியா), டெஸ்டிகுலர் சுருக்கம், பாலியல் செயலிழப்பு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட மாற்றங்கள் நிகழும். மேலும், கருவுறாமை மற்றும் மலட்டுத்தன்மை போன்ற மிகப்பெரிய பிரச்சனைகளையும் உண்டாக்கும். அதிக ஈஸ்ட்ரோஜன் ஆண்களுக்கு பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, அறிகுறிகளை அறிந்து கொள்வதும், தேவைப்பட்டால் உங்கள் அளவைக் குறைக்க முயற்சி எடுப்பதும் முக்கியம்.
ALSO READ: Agoraphobia: கூட்டத்திற்கு செல்ல பயமா..? தனிமை பிடிக்கிறதா..? இந்த பிரச்சனைதான் காரணம்!
மார்பக வளர்ச்சி:
குறிப்பிட்ட ஆண்களுக்கு பெண்களை போன்று பெரிய மார்பகங்கள் இருக்கும். இதற்கு ஈஸ்ட்ரோஜன் அளவு ஒரு காரணம். ஆண்களுக்கு அதிக ஈஸ்ட்ரோஜன் அளவு இருந்தால், மார்பக திசுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
கருவுறாமை:
அதிக ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். இந்த ஹார்மோனின் அதிகரிப்பு விந்தணுக்களின் தரம் மற்றும் உற்பத்தியைத் தடுக்கிறது. இதன் காரணமாக, குழந்தையை உண்டாக்கும் சக்தியை இழக்க செய்யும்.
வீக்கம்:
அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் உடலில் திரவநீரை தக்க வைக்கும். இதன் காரணமாக, காரணமே இல்லாமல் உங்களுக்கு அடிக்கடி கை மற்றும் கால் போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படலாம். சில சமயங்களில் வலியும் ஏற்படலாம்.
மன ஆரோக்கியம் கெடும்:
அளவுக்கு அதிகமாக ஈஸ்ட்ரோஜன் மூளையில் உள்ள நரம்பியக்கடத்தி செயல்பாட்டை பாதிக்கலாம். நரம்பியக்கடத்திகளின் வேலை மன ஆரோக்கியத்தை ஒழுங்குபடுத்துவதாகும். இதனால், மனநிலையில் மாற்றங்கள், எரிச்சல் மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
கொழுப்பு சேரும்:
ஆண்களின் அதிக ஈஸ்ட்ரோஜன் அளவு கொழுப்பை அதிகரிக்க செய்யும். இதன் காரணமாக, ஆண்களின் இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் கொழுப்பு அதிகரிக்க தொடங்கும். பொதுவாக திருமணம் ஆன பெண்களுக்கு இந்த பகுதிகளில் கொழுப்பு அதிகமாக இருப்பதற்கு இதுவே காரணம்.
விறைப்பு குறைபாடு:
ஆண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருக்கும்போது விறைப்பு குறைபாடு ஏற்படும். இதற்கு குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவுகள், இரத்த ஓட்டம் இல்லாமை, உளவியல் பிரச்சனைகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சோர்வு:
ஆண்களுக்கு அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் பொதுவான அறிகுறிகளில் ஒன்று சோர்வு ஆகும். இது தூக்கத்தை கெடுப்பது மட்டுமின்றி, இரத்த சோகை உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால், எப்போதும் சோர்வாக காட்சியளிப்பீர்கள்.
ஆண்களுக்கு ஈஸ்ட்ரோஜனின் முக்கியத்துவம்:
ஈஸ்ட்ரோஜன் உடலில் வளர்சிதை மாற்றம், பாலியல் செயல்பாடு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் உள்பட ஆண்களின் அத்தியாவசிய செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த உதவி செய்கிறது. மேலும், இது ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு உதவி செய்கிறது. அந்தவகையில், ஆண்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறிய அளவு ஈஸ்ட்ரோஜன் அவசியம்.
ALSO READ: Winter Season: குளிர்காலத்தில் அதிகமாக தூங்குவது ஏன்..? இந்த இயற்கை மாற்றங்களே காரணம்!
ஆண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்க உடல் பருமன், முதுமை, மருந்துகள், பாலியல் ஹார்மோன் சமநிலையின்மை போன்றவைகள் காரணமாக இருக்கலாம். ஆண்களுக்கு அதிகளவு ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியாகும்போது கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு, டெஸ்டிகுலர் புற்றுநோய், கட்டிகள் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.
வயதும் ஒரு காரணம்:
ஆண்களுக்கு வயதாகும்போது, டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்து, ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கிறது. இது பாலியல் ஹார்மோன்களின் சமநிலையின்மையை கெடுத்து அதிக ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)