5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Uric Acid: யூரிக் அமிலம் என்றால் என்ன..? இது ஏன் உடலுக்கு தீங்கு..? முழு விவரம் இங்கே!

Health Tips: பியூரின் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்க செய்கிறது. பொதுவாக நமது சிறுநீரகங்கள் வடிகட்டி, சிறுநீர் மூலம் உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்றும். ஆனால், பியூரின் அளவு அதிகரிக்க தொடங்கும்போது, சிறுநீரகங்கள் சரியாக செயல்பட முடியாமல் போகிறது. இதன் காரணமாக யூரிக் அமிலம் இரத்தத்தில் கலக்க தொடங்குகிறது.

Uric Acid: யூரிக் அமிலம் என்றால் என்ன..? இது ஏன் உடலுக்கு தீங்கு..? முழு விவரம் இங்கே!
யூரிக் அமிலம்
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 04 Nov 2024 16:59 PM

நவீன வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு இல்லாமை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக நம் உடலில் பல நோய்களை தோற்றுவிக்கின்றன. இதற்கு யூரிக் அமில பிரச்சனையும் ஒன்று. நம் உடலில் உள்ள யூரிக் அமிலம் என்பது ஒரு வகையான அழுக்காகும். இது இரத்தத்தில் கலந்து உடலின் பல இடங்களில் வலியை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இந்த வலி மிகவும் தாங்க முடியாத வலியாகவும் உருவெடுக்கிறது. அதுமட்டுமின்றி யூரில் அமிலம் நம் உடலில் அதிகரிக்கும்போது செரிமான அமைப்பும் பாதிக்கப்படும். இப்படியே இதை கவனிக்காமல் விட்டால், சிறுநீரகம் மற்றும் இதய நோய் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

பல சமயங்களில் யூரிக் அமிலம் கால்களில் உள்ள மூட்டுகளை சுற்றி குவிய தொடங்குகிறது. இதன் காரணமாக மூட்டு வலி பிரச்சனையும் ஏற்படுத்துகிறது. யூரிக் அமிலத்தின் பிரச்சனை ஒரு காலத்தில் வயதானவர்களிடமே அதிகம் காணப்பட்டது. ஆனால், இப்போது இது மிகவும் இளம் வயதினரிடமும் காணப்படுகிறது.

ALSO READ: Health Tips: கர்ப்ப காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாதா..? இது குழந்தைக்கு தீங்கு தரும்!

யூரிக் அமில பிரச்சனை என்றால் என்ன..?

பியூரின் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போது இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்க செய்கிறது. பொதுவாக நமது சிறுநீரகங்கள் வடிகட்டி, சிறுநீர் மூலம் உடலில் இருந்து யூரிக் அமிலத்தை வெளியேற்றும். ஆனால், பியூரின் அளவு அதிகரிக்க தொடங்கும்போது, சிறுநீரகங்கள் சரியாக செயல்பட முடியாமல் போகிறது. இதன் காரணமாக யூரிக் அமிலம் இரத்தத்தில் கலக்க தொடங்குகிறது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஆண்களின் உடலில் யூரிக் அமிலம் 4 முதல் 6.5 mg/dL என்ற அளவிலும், பெண்களின் யூரிக் அமிலம் 3.5 முதல் 6 mg/dL என்ற அளவிலும் இருக்க வேண்டும். ஒருவரின் யூரிக் அமிலத்தின் அளவு இயல்பை விட அதிகமாக இருந்தால், அதை உடனடியாக குறைப்பது மிக முக்கியம்.

யூரில் அமிலத்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்:

கீல்வாதம்:

கீல்வாதத்தை ஏற்படுத்த யூரிக் அமிலம் முக்கிய காரணமாக உள்ளது. மூட்டுகள் மற்றும் திசுக்களில் யூரிக் அமிலம் தங்கி வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது. மேலும், இது பெருவிரல் மூட்டுகள், கணுக்கால் மற்றும் முழங்கால் மூட்டுகளை பாதிப்படைய செய்கின்றன. இதுவே கீல்வாதம் என்று அழைக்கிறோம். உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, ​​இந்த நிலை ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக கீல்வாதம் பிரச்சனையும் ஏற்படும்.

சிறுநீரக பிரச்சனை:

சிறுநீரகங்கள் யூரிக் அமிலம் மற்றும் இரத்தத்தில் உள்ள பிற கழிவு பொருட்களை வடிகட்டுகின்றன. அதிக அளவு யூரிக் அமிலம் சிறுநீரக கற்கள் உருவாக வழிவக்கும். இதன் காரணமாக, முதுகு மற்றும் இடுப்பில் வலியும், சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும் மற்றும் சிறுநீரில் இரத்தம் வருதல் போன்ற பிரச்சனையை தரும்.

யூரிக் அமில பிரச்சனையை சரி செய்வது எப்படி..?

ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படும் யூரிக் அமில பிரச்சனையை தடுப்பதற்கான வழிகளில் ஆரோக்கியமான உணவை பின்பற்றுவதே சிறந்தது என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, அதிகப்படியான பியூரின்களை கொண்ட பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். சில வகையான கடல் உணவுகள் மற்றும் மீன்களில் பியூரின்கள் அதிகம். எனவே, இவற்றை தவிர்ப்பது நல்லது.

ஜூஸ் வகை:

பாகற்காய் என்ற பெயரை கேட்டவுடன் சிலருக்கு தானாக முகம் சுருங்கும். பாகற்காய் பெரும்பாலும் சர்க்கரை நோயை குணப்படுத்தும் மருந்தாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இது யூரிக் அமில பிரச்சனைக்கும் சிறந்த தீர்வை தரும். பாகற்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைக்க உதவுகிறது. பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கல்லீரல் செயல்பாட்டை சீராக்க உதவி செய்கிறது.

உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கிறது என்று தோன்றினால் வெள்ளரிக்காய், கேரட் மற்றும் பீட்ரூட் ஆகியவற்றால் செய்யப்பட்ட சாறு குடிக்கலாம். இந்த ஜூஸை குடிப்பதன் மூலம் உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை எளிதில் கட்டுப்படுத்தலாம்.

ALSO READ: Pumpkin Seeds Benefits: தினமும் 2 ஸ்பூன் பூசணி விதைகள் சாப்பிடுங்க.. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு நிச்சயம்!

மஞ்சள் பால்:

உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதைக் குறைக்க வேண்டுமானால், மஞ்சள் கலந்த பால் குடிக்கத் தொடங்குங்கள். ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-பயாடிக் பண்புகள் மஞ்சளில் உள்ளன.இவை உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்றுவதோடு, இரத்த அழுத்தத்தையும் பராமரிக்கிறது. இதை குடிப்பதால் வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் வெளியேறும்.

இஞ்சி டீ:

உங்கள் உடலில் உள்ள யூரிக் அமிலத்தை நீக்க இஞ்சி டீ பெரிதும் உதவும். இஞ்சி டீ செப்டிக், அழற்சி எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பண்புகள் உடலில் யூரிக் அமிலத்தை குறைக்கின்றன. தினமும் குறைந்த அளவு இஞ்சி டீ குடிப்பது மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே, சிறிது இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.

Latest News