Skipping Breakfast: காலை உணவை ஒரு மாதம் தவிர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா? இங்கே தெரிஞ்சுகோங்க!
Breakfast: இன்றைய பிஸியான வாழ்க்கையில் நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று காலை உணவு. ஆனால், வாழ்க்கை சுழற்சி காரணமாக பலரும் காலை உணவை தவிர்க்கிறார்கள். இந்த பழக்கம் நீண்ட நாட்கள் தொடரும்போது, உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். படிப்படியாக நமது உடல் பல்வேறு நோய்களை ஏற்றுக்கொள்ள தொடங்கிறது என்று அர்த்தம்.
காலை நன்றாக தொடங்கினால், அன்றைய நாள் முழுவதும் நமக்கு நன்றாகவே அமையும் என்பது ஐதீகம். இன்றைய பிஸியான வாழ்க்கையில் நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று காலை உணவு. ஆனால், வாழ்க்கை சுழற்சி காரணமாக பலரும் காலை உணவை தவிர்க்கிறார்கள். இந்த பழக்கம் நீண்ட நாட்கள் தொடரும்போது, உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். படிப்படியாக நமது உடல் பல்வேறு நோய்களை ஏற்றுக்கொள்ள தொடங்கிறது என்று அர்த்தம். காகையில் காலை உணவை உட்கொள்வது உங்கள் உடலுக்கு குளுக்கோஸை தருகிறது. இது உடலில் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது.
அதேசமயம், காலை உணவை நீண்ட நேரம் தவிர்ப்பது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். இது டைப் 2 சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்க செய்யும். அந்தவகையில், இன்று ஒரு மாதம் தொடர்ந்து காலை உணவை தவிர்ப்பது நமது ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிப்பை தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Quick Chicken Recipes: வீட்டிலேயே கேஎப்சி, சிக்கன் நக்கட்ஸ் செய்வது எப்படி? எளிதான செய்முறை இதோ!
விரக்தி:
காலை உணவை தவிர்ப்பது நம் உடலில் உள்ள நரம்பியக்கடத்தி செரோடோனின் நம் மனநிலையை பெரிய அளவில் பாதிக்கிறது. ஒரு மாதம் தொடர்ந்து காலை உணவை சாப்பிடாமல் இருந்தால், செரோடோனின் அளவு பாதிக்கப்படும். இதன் காரணமாக, எரிச்சல், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற அறிகுறிகளும் அதிகரிக்கின்றன.
ஊட்டச்சத்து குறைபாடு:
காலை உணவு உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது என்பது அனைவருக்கும் தெரியும். தெரிந்தும் பலர் உணவு குறித்த விஷயங்களில் மிகவும் கவனக்குறையாக இருக்கின்றனர். காலை உணவை காலை வேளையில் எடுத்துக் கொள்ளாவிட்டால், நம் உடலில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் போகும். இது பல நோய்களை உடலில் உண்டாக்க செய்யும்.
எடை அதிகரிப்பு:
காலை உணவைத் தவிர்ப்பது உடல் எடையைக் குறைப்பதை விட ஆரோக்கியமற்ற எடையை அதிகரிக்க செய்யும் என்பதே உண்மை. காலை உணவு இல்லாத நிலையில், மதிய உணவில் அதிகமாக சாப்பிடுவோம். இதனால் எடை கூடும். மேலும், பகலில் அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த பொருட்களை சாப்பிடுவதற்கான அதிக நாட்டம் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவும் உங்கள் உடல் எடையை அதிகரிக்கும்.
ALSO READ: Benefits of Hibiscus: மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும் மகத்துவம்.. செம்பருத்தியின் அற்புத பலன்கள்..!
வளர்சிதை மாற்ற நோய்க்குறி:
காலை உணவைத் தவிர்ப்பது வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் அபாயத்தை அதிகரிக்க செய்யும். இதன் காரணமாக இது இதய நோய், பக்கவாதம் மற்றும் வகை 2 நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்க செய்கிறது.
இதய நோய் அபாயம்:
காலை உணவை சாப்பிடாதவர்களுக்கு மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க காலை உணவை மறக்காமல் எடுத்துகொள்வது நல்லது.
வகை 2 நீரிழிவு:
காலை உணவைத் தவிர்ப்பது வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்க செய்கிறது. அதாவது, காலை உணவைத் தவிர்ப்பது உடலில் உள்ள இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்காது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
நொறுக்குத் தீனியின் மீதான ஏக்கம் அதிகரிக்கும்:
காலை உணவை உட்கொள்ளாதது, நொறுக்குத் தீனியின் மீதான ஆசையை அதிகரிக்கும். எனவே, உங்களுக்கு காலை உணவு எடுத்துகொள்ள விருப்பம் இல்லையெனில், கஞ்சி, முளைக்கட்டிய பயிர்கள், பழங்கள், சுண்டல் போன்ற ஆரோக்கியமான மற்றும் லேசான காலை உணவை உட்கொள்வது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி பலவீனப்படுத்தும்:
காலை உணவு இல்லாததால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், இதனால் எளிதில் நோய்களுக்கு ஆளாகலாம். நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பல வகையான தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)