Skin Care: சருமத்திற்கு வாசனை திரவியம் போடும் பழக்கம் இருக்கா..? இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்! - Tamil News | Problems caused by using perfumes directly on our skin: skin care tips in tamil | TV9 Tamil

Skin Care: சருமத்திற்கு வாசனை திரவியம் போடும் பழக்கம் இருக்கா..? இந்த பிரச்சனைகள் ஏற்படலாம்!

Published: 

22 Oct 2024 23:04 PM

lifestyle: வாசனை திரவியம் தொடர்ந்து பயன்படுத்துவது தோலின் பகுதிகளில் பாக்டீரியாக்களை வளர உதவும். மேலும், இது தோல் புற்றுநோயின் அபாயத்தை பெரிதும் அதிகரிக்கும். வாசனை திரவியங்களில் உள்ள ரசாயனங்கள் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் என்று கூறப்படுகிறது.

1 / 6தினந்தோறும்

தினந்தோறும் சில வாசனை திரவியத்தை பயன்படுத்தாமல் வெளியே செல்லமாட்டார்கள். இந்தநிலையில், சருமத்தில் நேரடியாக வாசனை திரவியத்தை பயன்படுத்துவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

2 / 6

வாசனை திரவியத்தில் உள்ள ஆல்கஹால் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, தோலுக்கு வறட்சியை கொடுக்கும். மேலும், வாசனை திரவியத்தில் உள்ள நியூரோடாக்சின்கள் கூட நரம்பு மண்டலத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது.

3 / 6

அதிக உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் வாசனை திரவியத்தை சருமத்தில் நேரடியாக பயன்படுத்துவதை தவிர்க்கலாம். சருமத்தில் வாசனை திரவியத்தை நேரடியாக பயன்படுத்துவோருக்கு தோல் எரிச்சலை ஏற்படுத்தும்.

4 / 6

வாசனை திரவியம் தொடர்ந்து பயன்படுத்துவது தோலின் பகுதிகளில் பாக்டீரியாக்களை வளர உதவும். மேலும், இது தோல் புற்றுநோயின் அபாயத்தை பெரிதும் அதிகரிக்கும். வாசனை திரவியங்களில் உள்ள ரசாயனங்கள் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் என்று கூறப்படுகிறது.

5 / 6

வாசனை திரவியம் சுவாச அமைப்புக்கு சேதத்தை ஏற்படுத்துவதோடு, பலருக்கு ஒவ்வாமை பிரச்சனையை தரலாம். இதன் விளைவாக, சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம்.

6 / 6

நாம் பயன்படுத்தும் பல வாசனை திரவியங்களில் பித்தலேட்டுகள், ஸ்டைரீன், கேலக்சோலைடுகள், கிளைகோல்கள் போன்ற ரசாயனங்கள் உள்ளன. இது அதிகப்படியாக உடலுக்கு நுழையும்போது, இது சுவாச மண்டலத்தை சேதப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!