5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Protein: உடலுக்கு புரதம் ஏன் முக்கியம்? குறைந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வரும்!

Protein Foods: புரத பற்றாக்குறை ஏற்பட்டால், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைய தொடங்கும். இதனால், பருவ மாற்றத்தின்போது உங்களை விரைவாக நோய்வாய்ப்பட செய்யும். அடிக்கடி சளி, காய்ச்சல் மற்றும் பிற நோய்த்தொற்றுகளுக்கு எளிதில் பாதிக்கப்படுவது அதிகரிக்கும்.

Protein: உடலுக்கு புரதம் ஏன் முக்கியம்? குறைந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வரும்!
புரத உணவுகள் (Image: Freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 27 Nov 2024 17:09 PM

புரதம் நம் உடலுக்கு இன்றியமையாத அங்கமாகும். நமது உடல் வளர்ச்சிக்கு புரதம் இன்றியமையாதது. புரதம் உடலில் உள்ள செல்களை உருவாக்குவதிலும், தசைகளை வலுப்படுத்துவதிலும், பல்வேறு உடல் செயல்பாடுகளின் செயல்பாட்டிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய நவீன வாழ்க்கையில் மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பலர் புரதச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படுகின்றனர். புரத குறைபாடு உடலின் பல பிரச்சனைகளை உண்டாக்கும். இது முடி, தோல் மற்றும் உடலின் ஒவ்வொரு பகுதியையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

உடலில் புரதச்சத்து குறைவாக இருந்தால், முடி உதிர்தல், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, சோர்வு மற்றும் சரும பிரச்சனைகளை உண்டாக்கும். அந்தவகையில், உங்கள் தினசரி உணவில் 15 முதல் 30 கிராம் புரதத்தை சேர்த்துக்கொள்ளுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்தவகையில், உடலில் புரதம் குறைபடுவதால் ஏற்படும் அறிகுறிகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: வேர்க்கடலையில் கொட்டிக் கிடக்கும் ஏராளமான நன்மைகள்!

முடி உதிர்தல்:

உங்கள் உடலில் புரதக் குறைபாட்டின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று முடி உதிர்தல் ஆகும். தினசரி புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவும். உடலில் புரதச்சத்து குறையும்போது, ​​முடி வலுவிழந்து உதிர தொடங்கும்.

தசை பலவீனம்:

புரதத்தின் முக்கிய பணிகளில் ஒன்று தசைகளின் வளர்ச்சிக்கும், வலுப்படுத்துவதும் ஆகும். இதுபோன்ற சூழலில் உடலில் புரதம் இல்லாதபோது, ​​தசைகள் வலுவிழந்து உடல் சோர்வடைய தொடங்கும். உடலில் காரணமே இல்லாமல் தசை வலி அல்லது பலவீனம் ஏற்பட்டால், இது புரதக் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.

தோல் பிரச்சனைகள்:

உங்கள் உணவில் புரதம் நிறைந்த உணவுகள் இல்லை என்றால், அது உங்கள் உடலை பாதிக்க செய்யும். இந்த புரதச்சத்து குறைபாடு உங்கள் சருமத்தையும் பாதிக்க செய்யும். உடலில் போதுமான அளவு புரதம் இல்லாதபோது, ​​​​உங்கள் தோல் கருமையாக மாற தொடங்கும். மேலும், புரதம் குறையும்போது உடலில் அரிப்பு மற்றும் வீக்கம் போன்ற தோல் பிரச்சனைகள் ஏற்படலாம். சருமத்தில் கொலாஜன் உற்பத்திக்கு புரதம் இன்றியமையாத ஒன்று. இது இல்லாதபோது சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு, பொலிவு குறைய தொடங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி:

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க புரதம் உதவுகிறது. உடலில் புரத பற்றாக்குறை ஏற்பட்டால், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைய தொடங்கும். இதனால், பருவ மாற்றத்தின்போது உங்களை விரைவாக நோய்வாய்ப்பட செய்யும். அடிக்கடி சளி, காய்ச்சல் மற்றும் பிற நோய்த்தொற்றுகளுக்கு எளிதில் பாதிக்கப்படுவது அதிகரிக்கும். ஏனெனில், உடலில் புரதம் இல்லாதபோது, உங்களது  உடலால் நோயை எதிர்த்துப் போராட தேவையான ஆன்டிபாடிகள் மற்றும் பிற புரதங்களை உற்பத்தி செய்ய முடியாது.

சோர்வு மற்றும் பலவீனம்:

புரதம் இல்லாததால் உடலில் ஆற்றல் பற்றாக்குறை உண்டாகும். இதனால் உங்களுக்கு சோர்வு மற்றும் பலவீனம் ஏற்பட தொடங்கும். நீங்கள் தொடர்ந்து சோர்வாக உணர தொடங்கினால், நீங்கள் போதுமான ஓய்வு எடுத்தாலும், உங்கள் உடலுக்கு போதுமான புரதம் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Food Recipe: சூப்பர் ஃபுட் சண்டே! முட்டை 85, முட்டை பணியாரம் செய்வது எப்படி?

புரதத்திற்காக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்:

சோயாபீன்:

சோயாபீனில் அதிகளவு புரதம் உள்ளது. 100 கிராம் சோயாபீனில் 36 கிராம் புரதம் உள்ளது. இந்த உணவை தினசரி எடுத்து கொள்வதன்மூலம், உங்களுக்கு தேவையாக அளவு புரதம் கிடைக்கும்.

பனீர்:

100 கிராம் பனீரில் சுமார் 18 கிடாம் புரதம் உள்ளது. தினசரி உங்கள் புரத தேவைகளை பூர்த்தி செய்ய பனீர் பெரிதும் உதவி செய்யும். பனீரில் புரதம் மட்டுமில்லாமல் நல்ல அளவு கொழுப்பு மற்றும் பிற சத்துக்களும் உள்ளன.

வேர்க்கடலை:

வேர்க்கடலை உடலுக்கு தேவையான புரதத்தை தரும். 100 கிராம் வேர்க்கடலையில் சுமார் 20 கிராம் புரதம் உள்ளது. புரத குறைபாடு உள்ளவர்கள் தினசரி வேர்க்கடலையை எடுத்துக்கொள்ளலாம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News