5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Christmas: ஓவன் இல்லாமல் கிறிஸ்துமஸ் பிளம் கேக்.. சிம்பிள் ரெசிபி!

How to Make a Marble Cake: கேக் இல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகை முழுமை பெறாது. கிறிஸ்துமஸ் பண்டிகை ஒட்டி சந்தையில் பல்விதமான கேக்குகள் விற்கப்பட்டாலும் பிளம் கேக்கிற்கு மக்கள் மத்தியில் ‌தனி இடம் உண்டு. இந்த பிளம் கேக்கை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Christmas: ஓவன் இல்லாமல் கிறிஸ்துமஸ் பிளம் கேக்.. சிம்பிள் ரெசிபி!
பிளம் கேக் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 03 Dec 2024 20:02 PM

கிறிஸ்துமஸ் வந்து விட்டாலே பல வகையான கேக்குகள் கடையில் வாங்கி உற்றார் உறவினர்களுக்கு கொடுப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிளம் கேக் அதிக அளவில் வாங்கப்படும். வெளியில் வாங்கும் கேக் தரம் பற்றி அனைவருக்கும் சந்தேகம் இருக்கும். எனவே இந்த முறை எளிய முறையில் வீட்டிலேயே பிளம் கேக் செய்து உங்கள் அன்பானவர்களுடன் பகிருங்கள்.

தேவையான பொருட்கள்:

1/2 கப் தண்ணீர், 1 கப் சர்க்கரை, உலர் பழங்கள் (பாதாம், திராட்சை, முந்திரி, துத்தி பழம், செர்ரி, வால்நட்), 100 கிராம் வெண்ணெய், 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ், 1 கப் மைதா, 2 முட்டை, 4 ஏலக்காய், 4 கிராம்பு, 2 இலவங்கப்பட்டை தூள், 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1/4 டுட்டி ஃப்ரூட்டி, (1 கப் = 250 மிலி)

செய்யும் முறை:

ஒரு மிக்சிங் பவுலில் கால் கப் அளவில் டுட்டி ஃப்ரூட்டி, கால் கப் அளவில் கருப்பு உலர் திராட்சை, இரண்டு டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் உலர் திராட்சை, பொடியாக நறுக்கிய வால்ட் நெட் சிறிதளவு, கால் கப் நறுக்கிய முந்திரி, கால் கப் அளவு நறுக்கிய பாதாம், கால் கப் நறுக்கிய செர்ரி, சிறு துண்டுகளாக வெட்டிய மூன்று பேரிச்சம் பழங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பவுலில் எடுத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Also Read: Christmas: வந்துவிட்டது கிறிஸ்துமஸ்! இம்முறை சுவையான வாழைப்பழ கேக் வீட்டிலேயே செய்யுங்கள்…

பின்பு ஒரு கடாயில் கால் கப் அளவு சர்க்கரை சேர்க்க வேண்டும். மிதமான தீயில் அதுவாக உருகும் வரை சர்க்கரையை சூடாக்க வேண்டும். சர்க்கரை நன்றாக உருகி தேன் நிறத்திற்கு மாற வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு அரைக்கப் அளவில் நன்றாக கொதித்த நிலையில் இருக்கும் தண்ணீரை உருகிய சர்க்கரையில் சேர்க்க வேண்டும். பிறகு மீண்டும் அடுப்பை பற்ற வைத்து நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் கலவையை இந்த சர்க்கரை கரைசலில் சேர்க்க வேண்டும். மிதமான தீயில் இதை 8 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். எட்டு நிமிடங்கள் வெந்ததற்குப் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ஆற வைக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாடியில் முக்கால் கப் அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 4 கிராம்பு, 4 ஏலக்காய், 2 இரண்டு பட்டை ஆகிவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதை நன்றாக பொடியாக்கி கொள்ள வேண்டும்.

அடுத்து வேறொரு மிக்சிங் பவுலில் 100 கிராம் அளவு வெண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வெண்ணையை நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு பொடியாக்கி வைத்திருக்கும் சர்க்கரையை இந்த வெண்ணையில் சேர்க்க வேண்டும். சர்க்கரை பொடி மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டும் நன்றாக கலக்கும் படி அடித்துக் கொள்ள வேண்டும். இது ஒரு கிரீம் நிலையை எட்டியவுடன் இதனுடன் இரண்டு முட்டையை சேர்க்க வேண்டும். பின்பு இதையும் நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் ஒரு டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடிக்க வேண்டும்.

பிறகு ஆற வைத்திருக்கும் உலர் பழங்களின் கலவையை இதில் சேர்க்க வேண்டும். பின்பு அனைத்தையும் ஒன்றாக கலந்து விட வேண்டும். ஒரு கப் அளவில் மைதா மாவு, ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர், அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா ஆகியவற்றை நன்றாக சலித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை ஒரே திசையில் கலந்து விட வேண்டும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் என்னை தடவிக் கொண்டு அதன் மேல் பட்டர் சீட் வைக்க வேண்டும். இப்பொழுது இதில் தயார் செய்து வைத்திருக்கும் கேக் மாவினை சேர்க்க வேண்டும்.

Also Read: கிறிஸ்துமஸ் மார்பிள் கேக் வீட்டிலேயே செய்யலாம்… இதோ ரெசிபி!

பின்னர் அகலமான அடிகனமான கடாய் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கடாய்க்குள் தண்ணீர் ஊற்றி ஒரு வளையம் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் கேக் மாவு உள்ள கிண்ணத்தை எடுத்து கடாய்க்குள் வைத்திருக்கும் வளையத்தின் மீது வைக்க வேண்டும். மிதமான தீயில் இதை ஒரு மணி நேரம் வேக வைக்க வேண்டும். பிறகு கேக்கை நன்றாக ஆற வைத்தால் ருசியான பிளம் கேக் தயார்.

Latest News