Home Care Tips: விரைவில் மழைக்காலம்.. முன்கூட்டியே இதையெல்லாம் செய்வது நல்லது!
Home Tips: இனி வரும் காலங்களில் தொடர் மழையால் வீட்டில் தண்ணீர் ஊற ஆரம்பித்து, சூரிய ஒளி இல்லாததால் ஈரப்பதம் ஆக தொடங்கும். இதன் காரணமாக மரச்சாமான்கள் பூசணம் பிடிக்க தொடங்கும். பழைய வீடுகளில் தண்ணீர் ஊறி வடிய தொடங்கும். இதனுடன் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள், பூச்சிகள் தொல்லை என பல பிரச்சனைகளை மழை காலத்தில் சந்திக்க நேரிடும். எனவே, கனமழை காலம் முழுமையாக தொடங்குவதற்கு முன்பு, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.
மழைக்காலம்: ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதங்களில் கடுமையான வெப்பத்திற்கு பிறகு, தற்போது பருவ மழை காலம் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது. இனி வரும் காலங்களில் தொடர் மழையால் வீட்டில் தண்ணீர் ஊற ஆரம்பித்து, சூரிய ஒளி இல்லாததால் ஈரப்பதம் ஆக தொடங்கும். இதன் காரணமாக மரச்சாமான்கள் பூசணம் பிடிக்க தொடங்கும். பழைய வீடுகளில் தண்ணீர் ஊறி வடிய தொடங்கும். இதனுடன் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள், பூச்சிகள் தொல்லை என பல பிரச்சனைகளை மழை காலத்தில் சந்திக்க நேரிடும். எனவே, கனமழை காலம் முழுமையாக தொடங்குவதற்கு முன்பு, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. இதுபோன்ற சூழ்நிலையில், மழைக்காலத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கவும், எந்த பிரச்சனையும் சந்திக்காமல் இருக்கவும் சில விஷயங்களை குறிப்பாக கவனிக்க வேண்டும்.
ALSO READ: Home Tips: மெத்தை கறை சட்டுனு போகணுமா? எப்போதுமே புதுசு மாதிரி பளபளக்க இதை ட்ரை பண்ணுங்க!
மின் உபகரண பொருட்கள்:
மழைக்காலத்தில் மின்னல் மற்றும் பலத்த காற்று வீசினால் மின்சாரத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, மின் தடை ஏற்பட வாய்ப்பு உண்டு. மழை காலத்தில் மின் சாதனங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மழை காலம் தொடங்குவதற்கு முன், எலக்ட்ரீஷியன் உதவியுடன் வயரிங்கை சரி பார்த்து கொள்வது நல்லது. கம்பிகள் ஈரமாக வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம், ஷார்ட் சர்க்யூட் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு.
காற்றோட்டம்:
மழைக்காலத்தின்போது வீட்டிற்குள் காற்றோட்டம் இல்லையென்றால், ஈரப்பதம் காரணமாக நாற்றம் அடிக்கும். இந்த பிரச்சனைகளிலிருந்து வீட்டை பாதுகாக்க, ஜன்னல் மற்றும் அவ்வப்போது வீட்டின் கதவை திறந்து வைப்பது நல்லது. இது ஈரப்பதம் மற்றும் நாற்ற பிரச்சனையை தடுக்கும்.
மரச்சாமான்களை பாதுகாக்க வேண்டும்:
மழைக்காலத்தில் மரச்சாமான்களை சேதமடைவது வழக்கமான விஷயம். மரச்சாமான்கள் மீது தண்ணீர் பட்டவுடன், அது ஊறி வீங்கும். மேலும், ஈரப்பதம் படுவதால் அதில் பூசணம் பிடிக்கும். மழைக்காலத்தில் மரச்சாமான்களை ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க, வார்னிஷ் பூசுவது நல்லது. இது மரச்சாமான்களை பாதுகாப்பது மட்டுமின்றி, கரையான் தொல்லைகளிலிருந்து காக்கும்.
விரிசல்:
வீட்டில் மேல் பகுதியில் எங்காவது விரிசல் ஏற்பட்டால், மழைநீர் வீட்டிக்குள் கசிந்து தொல்லை தரும். எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு விரிசல்களில் நீர் புகாத பூச்சுகளை பீசி வைத்து கொள்வது நல்லது. இல்லையெனில் வீட்டிற்குள் வைத்திருக்கும் பொருட்களும் சேதமடையக்கூடும்.
ALSO READ: Home Tips: வீட்டில் கண்ணாடி பாத்திரங்கள் இருக்கா? இப்படி சேஃப்டி பண்ணுங்க!
கொசு தொல்லை:
மழை நீர் தேங்குவதால் கொசு, ஈக்கள் வீட்டிற்குள் வருகின்றன. இதனால் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தவிர சில சமயங்களில் பூச்சிகள், தவளைகளும் வீடுகளுக்குள் வர ஆரம்பித்து விடுகின்றன. கொசு மற்றும் பூச்சிகளை விரட்ட கொசு விரட்டிகள், கொசுவர்த்தி சுருள்கள் அல்லது ஸ்ப்ரே போன்றவற்றை வாங்கி வைத்து கொள்வது நல்லது.