5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Quick Chicken Recipes: வீட்டிலேயே கேஎப்சி, சிக்கன் நக்கட்ஸ் செய்வது எப்படி? எளிதான செய்முறை இதோ!

Food Recipes: கேஎப்சி அதாவது Kentucky Fried Chicken என்று அழைக்கப்படும் வறுத்த கோழி துண்டுகள் தனித்துவமான சுவைக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த சுவையின் ரகசியம் என்ன தெரியும். இதன் சுவையை போன்று ரகசிய செய்முறையை போலவே மிகவும் பிரபலம். அந்தவகையில், இன்று சிக்கன் கொண்டு கேஎப்சி மற்றும் சிக்கன் நக்கட்ஸ் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

Quick Chicken Recipes: வீட்டிலேயே கேஎப்சி, சிக்கன் நக்கட்ஸ் செய்வது எப்படி? எளிதான செய்முறை இதோ!
கேஎப்சி, சிக்கன் நக்கட்ஸ் (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 09 Oct 2024 13:30 PM

சிக்கன் என்றால் இப்போது பலருக்கும் உயிராகிவிட்டது. பலர் தினமும் சிக்கன் இல்லாமல் தங்கள் தினசரி வாழ்க்கையை கடப்பது கிடையாது. சிக்கன் கொண்டு எவ்வளவோ ரெசிபிகளை செய்யலாம். பெப்பர் சிக்கன், சில்லி சிக்கன், சிக்கன் 65, சிக்கன் கிரேவி உள்ளிட்ட பலவகையான ரெசிபிகளை செய்து சாப்பிடுகிறோம். இதுபோன்றுதான் கேஎப்சி சிக்கனும் சிக்கன் மூலம் செய்து சுவைக்கிறோம். கேஎப்சி அதாவது Kentucky Fried Chicken என்று அழைக்கப்படும் வறுத்த கோழி துண்டுகள் தனித்துவமான சுவைக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த சுவையின் ரகசியம் என்ன தெரியும். இதன் சுவையை போன்று ரகசிய செய்முறையை போலவே மிகவும் பிரபலம். அந்தவகையில், இன்று சிக்கன் கொண்டு கேஎப்சி மற்றும் சிக்கன் நக்கட்ஸ் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

ALSO READ: Food Recipes: பேரிச்சம்பழ அல்வா செய்வது எப்படி..? எளியாத செய்யக்கூடிய சூப்பர் ரெசிபி!

கேஎப்சி சிக்கன் செய்ய தேவையாக பொருட்கள்:

  • சிக்கன் லெக் பீஸ் அல்லது விங்ஸ்  – 4
  • மைதா – 100 கிராம்
  • மிளகுத்தூள் – சிறிதளவு
  • மிளகாய்த்தூள் – சிறிதளவு
  • உப்பு – சிறிதளவு
  • பூண்டு பேஸ்ட் – சிறிதளவு
  • தயிர் – தேவையான அளவு
  • கார்ன் மீல்ஸ் – 100 கிராம்
  • முட்டை – 1

கேஎப்சி சிக்கன் செய்வது எப்படி..?

  • முதலில் கடைகளில் இருந்து வாங்கிய சிக்கன் லெக் பீஸ் அல்லது விங்ஸை சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி எடுத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மோர் போன்ற பதத்தில் எடுத்து கொள்ளவும்.  அந்த மோர் கலவையில் இப்போது மைதாவினை சேர்த்து அதனுடன் பூண்டு பேஸ்ட் தேவையான அளவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கரைத்துக்கொள்ளவும்.
  • இதில் கழுவி எடுத்து வைத்திருந்த சிக்கனை போட்டு அதனை அப்படியே 2 மணிநேரம் பிரிட்ஜ் அல்லது மூடி போட்டு மாரினேட் செய்து கொள்ளவும்.
  • அதன்பின், ஒரு தட்டில் ஒரு கப் மைதா, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் மற்றும் கடையில் வாங்கிய கார்ன் மீல்ஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  • இப்போது ஒரு சிறிய பாத்திரத்தில் 2  முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி எடுத்து கொள்ளவும்.
  • அதன்பிறகு, மாரினேட் சிக்கனை இந்த முட்டையில் நனைத்து கலந்து வைத்த மைதா மாவு கலவையில் உருட்டி, பிரட்டி மீண்டும் முட்டை கலவையில் நனைத்து அதனை வேறொரு தட்டில் வரிசையாக வைக்கவும்.
  • இவ்வாறாக, நீங்கள் ஒவ்வொரு சிக்கனையும் மேலே குறிப்பிட்டுள்ள வகையில் தயார் செய்து வைக்கவும்.
  • பிறகு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தயார் செய்த சிக்கனை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான கேஎப்சி சிக்கன் தயார்.

சிக்கன் நக்கட்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:

  • எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
  • மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • முட்டை -1
  • மைதா மாவு – 4 டீஸ்பூன்
  • பிரட் தூள் – 10 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • பொரிப்பதற்கு எண்ணெய் – தேவையான அளவு

ALSO READ: Protein Powder: கடைகளில் வாங்கினால் அதிக செலவா? வீட்டிலேயே புரோட்டீன் பவுடரை செய்வது எப்படி..? செய்முறை இங்கே!

சிக்கன் நக்கட்ஸ் செய்வது எப்படி..?

  • கடைகளில் வாங்கிய சிக்கனை நன்றாக கழுவி சிறிது உப்பு, மஞ்சள் தூளை சேர்த்து கலக்கிய பின் நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும்.
  •  கழுவிய சிக்கனை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிக்கன் மீது மிளகுத்தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 1/2  மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • கேஎப்சி சிக்கனுக்கு செய்ததுபோல் முட்டையை உடைத்து ஒரு சிறிய பாத்திரத்தில் கலக்கி வைக்கவும்.
  • மைதா மாவுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். தொடர்ந்து, பிரட் தூளை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  • இப்போது ஊறிய சிக்கன் துண்டுகளை மைதா மாவில் உருட்டி, பிரட்டிய பிறகு முட்டையில் டிப் பண்ணி பிரட் தூளில் மீண்டும் பிரட்டி எடுத்து கொள்ளவும்.
  • கேஸை ஆன் செய்து அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை கடாயின் அளவுக்கு ஏற்ப போடவும். சிக்கன் ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். அதேபோல், மீண்டும் மீண்டும் செய்யவும்.
  • மீதமுள்ள அனைத்து சிக்கன் துண்டுகளையும் இதே போன்று பொரித்து டிஸ்யூ பேப்பரில் வைக்கவும்.
  • இப்போது சுவையான சிக்கன் நக்கட்ஸ் ரெடி. பொரிக்கப்பட்ட சிக்கன் நக்கட்ஸ்சுடன் தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறினால், உங்கள் குடும்பத்தார் ருசித்து சுவைப்பார்கள்.

Latest News