5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ragi Puttu: ஹெல்த்தியான ராகி புட்டு இப்டி செஞ்சு பாருங்க கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..

ராகி நமது உடலுக்கு எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகளை வழக்கக்கூடியது. இதை பயன்படுத்தி பலவிதமான ரெசிபிகளை செய்ய முடியும். அந்தவகையில், ராகி மாவை வைத்து ஆரோக்கியமான சுவையான ராகி புட்டு தான் செய்யப் போகிறோம். இது ஆவியில் வேக வைப்பதால் மிகவும் ஆரோக்கியமானது. குழந்தைகளுக்கு வாரத்திற்கு இரண்டு முறை செய்துக் கொடுத்தால், எலும்புகள் வலுபெறும். தற்போது, ராகி புட்டு எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.

Ragi Puttu: ஹெல்த்தியான ராகி புட்டு இப்டி செஞ்சு பாருங்க கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
ராகி புட்டு
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 27 Jul 2024 01:56 AM

குழந்தைகளுக்கு கடையில் நொறுக்கு தீனிகளை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் தானியங்களை வைத்து ஸ்நாக்ஸ் செய்துக் கொடுக்கலாம். அந்தவகையில், தானியங்களில் ஒன்றான ராகி நமது உடலுக்கு எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகளை வழக்கக்கூடியது. இதை பயன்படுத்தி பலவிதமான ரெசிபிகளை செய்ய முடியும். அதனடிப்படையில், தற்போது ராகி மாவை வைத்து ஆரோக்கியமான சுவையான ராகி புட்டு தான் செய்யப் போகிறோம். இது ஆவியில் வேக வைப்பதால் மிகவும் ஆரோக்கியமானது. குழந்தைகளுக்கு வாரத்திற்கு இரண்டு முறை செய்துக் கொடுத்தால், எலும்புகள் வலுபெறும். மேலும், இந்த புட்டு செய்வதற்கு பபுட்டு புனல் தேவையில்லை, வெறும் இட்லி பாத்திரம் இருந்தாலே போதுமானது. தற்போது, ராகி புட்டு எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.

Also Read: Badam Pisin Payasam: வெறும் 10 நிமிடத்தில் தித்திப்பான பாதாம் பிசின் பாயசம் ரெடி..! குழந்தைகளுக்கு செஞ்சிக்கொடுங்க..

 

தேவையான பொருட்கள்:

  • ராகி மாவு – 2 கப்
  • துருவிய தேங்காய் – 1/4 கப்
  • நாட்டுச் சர்க்கரை – 5 ஸ்பூன்
  • ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன்
  • நெய் – 2 ஸ்பூன்
  • உப்பு – 1/4 ஸ்பூன்

ராகி புட்டு செய்முறை:

முதலில் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து, அதில் எடுத்து வைத்துள்ள ராகி மாவை மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். 2 நிமிடங்கள் வறுத்தால் போதுமானது.

பிறகு, வறுத்த மாவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும், அதை லேசாக ஆற வைக்கவும். இப்போது, அத்துடன் உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீரை தெளித்து மாவை நன்றாக பிசைந்துக் கொள்ளவும். அதிகமாக தண்ணீர் சேர்க்கக்கூடாது மறந்துவிடாதீர்கள். மாவு ஓரளவிற்கு ஈரப்பதமாகவும், உதிரியாகவும் இருக்க வேண்டும். கட்டிகள் இல்லாமல் பிசைந்துக் கொள்ளுங்கள்.

ஒரு இட்லி பாத்திரத்தில் 3-4 டம்ளர் தண்ணீர் சேர்த்து, உங்களுடையது இரண்டு அடுக்கு பாத்திரமாக இருந்தால் கீழ் அடுக்கு தட்டை மட்டும் வைத்து, அதன் மேல் இட்லி துணியை லேசாக தண்ணீரில் நனைத்து அதன் மீது போட்டுக் கொள்ளவும்.

இப்போது, கலந்து வைத்துள்ள ராகி மாவை கைகளில் அள்ளி அந்த தட்டின் மீது தூவி விடவும். அழுத்தவோ அல்லது பேக் செய்யவோ கூடாது. அனைத்து மாவையும் தூவி மூடியை போட்டு மூடிவிடுங்கள்.

Also Read: Super Star Rajinikanth: தன்னுடைய பேரனுக்காக சூப்பர் ஸ்டார் செய்த செயல்.. இணையத்தில் வைரலான புகைப்படம்..!

இதை 15-20 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். 20 நிமிடங்களிலேயே ராகி வெந்துவிடும், ராகி வாசனை வீசும், அந்த சமயத்தில் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

வேக வைத்த ராகி மாவை மீண்டும் ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி, மாவு கட்டிகள் இருந்தால் அதை உடைத்துவிட்டு, 5 நிமிங்கள் ஆறவிடவும். பிறகு, அதில் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் பொடி மற்றும் 2 ஸ்பூன் நெய்விட்டு நன்றாக கலந்துவிடுங்கள்.

அவ்வளவு தான்! ஆரோக்கியமான ராகி புட்டு தயார். இந்த ரெசிபி பிடித்திருந்தால், நீங்களும் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

Latest News