Rava Coconut Burfi: வெறும் 10 நிமிடத்தில் தித்திப்பான ரவா தேங்காய் பர்பி.. வெறும் 4 பொருள் போதும்.. - Tamil News | | TV9 Tamil

Rava Coconut Burfi: வெறும் 10 நிமிடத்தில் தித்திப்பான ரவா தேங்காய் பர்பி.. வெறும் 4 பொருள் போதும்..

Updated On: 

17 Jul 2024 16:19 PM

தேங்காய் பர்பி அனைவருக்கும் மிகவும் பிடித்த ஸ்வீட். வெறும் 10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஸ்வீட்டும் கூட. இதில் சேர்க்கப்படும் அனைத்து பொருட்களும் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக்கூடியவை. தற்போது, இந்த பதிவில் ரவா தேங்காய் பர்பி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை பார்க்கலாம்.

Rava Coconut Burfi: வெறும் 10 நிமிடத்தில் தித்திப்பான ரவா தேங்காய் பர்பி.. வெறும் 4 பொருள் போதும்..

தேங்காய் பர்பி

Follow Us On

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்வீட் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும்.  இருப்பினும், அந்த ஸ்வீட்டே ஆரோக்கியமானதாக இருந்தால் நல்லது தானே. அப்படிப்பட்ட ஸ்வீட் தான் ரவா தேங்காய் பர்பி. இந்த பர்பியை செய்வது மிக மிக எளிது. சமைக்கவே தெரியாது என்று சொல்பவர்களும் ஈஸியாக செய்யலாம். இதில், சேர்க்கப்படும் அனைத்துப் பொருட்களும் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக்கூடியவை. சுவையாகவும் தித்திப்பாகவும் இருக்கும். சரி வாங்க, ரவா தேங்காய் பர்பி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • ரவை – 1/2 கப்
  • தேங்காய் துருவல் – 1/2 கப்
  • பொட்டுக்கடலை – 1/4 கப்
  • வெல்லம் – 250 கிராம்
  • நெய் – 2 ஸ்பூன்
  • ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்

Also Read: Mathi Fish: நினைவாற்றலை அதிகரிக்கும் மத்தி மீன்.. எத்தனை நாளைக்கு ஒருமுறை சாப்பிடலாம்?

ரவா பர்பி செய்முறை

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ரவை மற்றும் பொட்டுக்கடலை இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

இரண்டையும் லேசாக ஆறவைத்து மிக்ஸி கரடுமுரடாக அரைத்துக் கொள்ளவும். ரொம்ப மென்மையாக அரைக்கக் கூடாது. 

பின்னர், ஒரு கனமான பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள வெல்லம் மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும். இது போன்ற பர்பி செய்முறைக்கு பாகு பதம் மிகவும் இன்றியமைதாததாகும். பாகு பதம் மாறினால், நமக்கு கிடைக்கும் பர்பியின் சுவையும் மாறுபடும் என்பதால், பாகு காய்ச்சுவதில் மிகவும் கவனம் தேவை. 

ஒரு டம்ளரில் சிறிதளவு தண்ணீர் பிடித்து, அதில் கொதிக்கக் கொண்டிருக்கும் பாகை ஒரு சொட்டுவிட்டு, அது கரையாமல் கெட்டியாக இருந்தால் பாகு தயார். 

இப்போது, துருவிய தேங்காய், ரவை மற்றும் பொட்டுக்கடலை பவுடர் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். 2 ஸ்பூன் நெய், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிடவும். 

2 நிமிடத்திற்கு பிறகு கலவை நன்றாக இலகி வரும் அந்த சமயத்தில் அடுப்பை அனைத்துவிடவும். அந்த கலவையை, நெய் தடவிய தட்டில் ஊற்றி சமன் செய்யவும்.

Also Read: அதிகாலையில் எழுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

30 நிமிடங்கள் ஆறவிட்டு, செட் ஆனதும், ஒரு கத்தியை கொண்டு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதில், குழந்தைகளுக்கு ஏற்றார் போல் பல்வேறு வடிவங்களிலும் அதற்கேற்ப வெட்டி கொடுக்கலாம்.

தித்திப்பான சுவையான, ரவா தேங்காய் பர்பி ரெடி! இதை ஃபிரிட்ஜில் வைத்து ஒரு வாரத்திற்கு வைத்திருந்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
Exit mobile version