5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Raw Milk Side Effects: பசும்பாலை ஏன் பச்சையாக குடிக்கக்கூடாது? இவ்வளவு பக்க விளைவுகள் ஏற்படுமா?

Health Tips: பால் எப்போதும் சூடு செய்து எடுத்துக்கொள்வது மிக முக்கியம். ஒரு சிலர் பாலை பச்சையாக சாப்பிடுவது நன்மை என்றும், பச்சை பால் மிகவும் ஆரோக்கியமானது என்று நினைக்கிறார்கள். பச்சைப்பால் ஒரு வகையில் நன்மைகளை தந்தாலும், பவ வகைகளில் தீங்கு விளைவிக்கும்.

Raw Milk Side Effects: பசும்பாலை ஏன் பச்சையாக குடிக்கக்கூடாது? இவ்வளவு பக்க விளைவுகள் ஏற்படுமா?
பசும்பால் (Image: GETTY)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 12 Nov 2024 21:56 PM

உடல் ஆரோக்கியமான இருக்க பால் மற்றும் முட்டைகளை தினமும் உட்கொள்வது அவசியம். பால் மற்றும் முட்டை உடலுக்கு தேவையாக பல வகையான ஊட்டச்சத்துக்களை தரும். பால் மற்றும் முட்டை உடலுக்கு கால்சியத்தை வழங்குவதோடு, எலும்புகளை வலுப்படுத்தி உடலுக்கு ஆற்றலையும் தருகிறது. ஒவ்வொரு பெற்றொரும் தங்கள் குழந்தைகளுக்கு தினமும் முட்டை கொடுக்க முடியாவிட்டாலும் பால் கொடுக்கிறார்கள். முட்டை அளவிற்கு பாலிலும் கால்சியம் அதிகமாக உள்ளது. இது குழந்தைகளில் எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாக வைக்க உதவி செய்யும்.

பால் எப்போதும் சூடு செய்து எடுத்துக்கொள்வது மிக முக்கியம். ஒரு சிலர் பாலை பச்சையாக சாப்பிடுவது நன்மை என்றும், பச்சை பால் மிகவும் ஆரோக்கியமானது என்று நினைக்கிறார்கள். பச்சைப்பால் ஒரு வகையில் நன்மைகளை தந்தாலும், பவ வகைகளில் தீங்கு விளைவிக்கும். பச்சை பாலில் ஆற்றல், புரதம், கார்போஹைட்ரேட், சர்க்கரை, கால்சியம், பொட்டாசியம், கொழுப்பு அமிலங்கள், கொலஸ்ட்ரால், சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதே நேரத்தில், பசுக்கள், எருமைகள் அல்லது ஆடுகளின் மூலப்பாலில் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் அல்லது பாக்டீரியாக்கள் உள்ளது. இவை உடலில் நேரடியாக சென்று ஆபத்தை விளைவிக்கும்.

ALSO READ: Monsoon Prevention: மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க வேண்டுமா..? இதை பின்பற்றினால் போதுமானது!

பச்சை பால் நேரடியாக குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

சருமத்தை பொலிவாக்கும்:

பச்சை பால் சருமத்திற்கு மிகவும் நல்லது. பால் பல ஆண்டுகளாகவே முக பொலிவுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, பச்சை பாலில் ரெட்டினோல் என்ற உறுப்பு உல்ளது. இது நிறத்தை பராமரிக்க உதவி செய்யும். மேலும், பசும்பால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவற்றை நீக்கி, பளபளப்பான சருமத்தை தரும்.

ஒவ்வாமை:

தினமும் பச்சைப்பால் உட்கொள்பவர்களுக்கு தோல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதாவது, பச்சைப் பால் உட்கொள்வதால் தோல் ஒவ்வாமை ஏற்படாது. எனவே, பச்சை பால் நோய்த்தொற்றுகளை நீக்கி, ஆஸ்துமா போன்ற நோய்களை தடுக்கும்.

செரிமானம்:

பச்சை பாலில் வயிர்று பிரச்சனைகளை தடுக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. இது செரிமானத்தை ஆரோக்கியமான வைக்க உதவி செய்யும். வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பச்சைப்பால் சிறந்த தீர்வை தரும்.

எலும்பு ஆரோக்கியம்:

சூடுப்படுத்திய பாலை விட பச்சை பாலில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில், அதிக கால்சியம் உள்ளது. எனவே பச்சை பால் எலும்புகளுக்கு வலிமை அளிக்கும்.

பச்சை பால் நேரடியாக எடுத்துக்கொள்வதால் ஏற்படும் தீமைகள்:

பால் நம் உடலில் பல வகைகளில் நன்மை தரும். ஆனால், இந்த பாலை சூடு செய்யாமல் நேரடியாகவோ அல்லது பச்சையாகவோ எடுத்துக்கொள்வது பல உடல்நல பிரச்சனைகளை தரும். பச்சையாக பசுவில் பால் குடிப்பது மூட்டுவலி, வயிற்றுப்போக்கு அல்லது நீரிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கும்.

கர்ப்ப காலம்:

பச்சை பால் கர்ப்ப காலத்தி பெண்கள் நேரடியாக குடிப்பது நல்லதல்ல. பச்சை பாலில்லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் பாக்டீரியா உள்ளது, இது லிஸ்டீரியோசிஸ் எனப்படும் தொற்றுநோயை ஏற்படுத்துகிறது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் ஆபத்தானது. பச்சைப் பால் உட்கொள்வது கருச்சிதைவு, முன்கூட்டிய பிரசவம், குழந்தை அல்லது தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

பறவை காய்ச்சல்:

பச்சை பாலில் பல தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. அதில் முக்கியமான பாக்டீரியா HPAI A (H5N1) ஆகும். இந்த பாக்டீரியா பறவை காய்ச்சலை உண்டாக்கும். எனவே, பாலை காய்ச்சியோ, பால் டீ அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பிற பொருட்களைக் குடிக்கும்போது பாதுகாப்பாக இருக்கலாம்.

ALSO READ: Periods Health: மாதவிடாயின்போது அதிக இரத்தப்போக்கு! இரத்த சோகை அபாயத்தைக் குறைக்க என்ன சாப்பிடலாம்?

அமில அளவு அதிகரிக்கும்:

சூடு செய்வதற்கு முன் பச்சை பாலை உட்கொள்வது உடலில் அமிலத்தின் அளவை அதிகரிக்க செய்யும். இது வயிற்றில் நோய்கள் அல்லது பிரச்சனைகளை உண்டாக்கும். அதேபோல், பச்சை பால் குடிப்பதால் வயிற்று வலி அல்லது அமிலத்தன்மை பிரச்சனைகள் ஏற்படலாம். உடலில் அமில அளவு எப்போதும் குறைவாகவே இருக்க வேண்டியது மிக முக்கியம். எனவே, சூடு செய்யாமல் பச்சையாக பாலை எடுத்துக்கொள்வது நல்லது கிடையாது.

Latest News