5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Relationship Advice: திருமண வாழ்க்கையில் எப்போதும் இந்த தப்பு பண்ணாதீங்க.. உறவை ஒரு நொடியில் முறிக்கும்!

Couples: இருவருக்கு இடையேயான உறவு வலுவாக இருக்க வேண்டுமெனில், காதல் மற்றும் நம்பிக்கை என்ற இந்த இரண்டும் மிகவும் முக்கியம். இது பெரும்பாலான தம்பதிகளுக்கு இடையே இருப்பது கிடையாது. இது இல்லாததால் உறவில் விரிசல்கள் தோன்ற தொடங்கி உறவு முறிந்துவிடும். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் காதலை மேம்படுத்தி, ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருக்க இந்த தவறுகளை எப்போது செய்யாதீர்கள். இவற்றை செய்து சரி செய்து கொள்ளுங்கள்.

Relationship Advice: திருமண வாழ்க்கையில் எப்போதும் இந்த தப்பு பண்ணாதீங்க.. உறவை ஒரு நொடியில் முறிக்கும்!
திருமண வாழ்க்கை
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 03 Aug 2024 14:02 PM

திருமண வாழ்க்கை: காதலிக்க தொடங்கிய தொடக்கத்திலோ அல்லது திருமணமான தொடக்கத்திலோ தம்பதிகள் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள். நாளடைவில் இவர்களின் நெருக்கம் குறைந்து நீண்ட நாட்கள் பேசாமல் இருக்க கூடிய சூழ்நிலை நிலவும். இரு வீட்டார்கள் எவ்வளவோ பேசியும் அந்த உறவு முறிந்தே காணப்படும். இறுதியில் இது விவாகரத்து வரை சென்று இருவரும் பிரிந்து விடுகின்றனர். இருவருக்கு இடையேயான உறவு வலுவாக இருக்க வேண்டுமெனில், காதல் மற்றும் நம்பிக்கை என்ற இந்த இரண்டும் மிகவும் முக்கியம். இது பெரும்பாலான தம்பதிகளுக்கு இடையே இருப்பது கிடையாது. இது இல்லாததால் உறவில் விரிசல்கள் தோன்ற தொடங்கி உறவு முறிந்துவிடும். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் காதலை மேம்படுத்தி, ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருக்க இந்த தவறுகளை எப்போது செய்யாதீர்கள். இவற்றை செய்து சரி செய்து கொள்ளுங்கள்.

ALSO READ: Relationship Tips: காலை ரொமான்ஸ் உங்கள் காதலை அழகாக்கும்.. இதை செய்து பாருங்க..!

ஒருவருக்கொருவர் நேரம் கொடுக்க வேண்டும்:

இந்த நவீன வாழ்க்கையில் கணவன் – மனைவி என தம்பதி இருவரும் வேலைக்கு போனால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற சூழ்நிலை நிலவுகிறது. இப்படியான சூழ்நிலையில் பணத்தையும் தாண்டி, வாழ்க்கை துணையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இருவரும் மகிழ்ச்சி என்ற கடலில் நீந்த முடியும். இப்படியான வாழ்க்கையில் இருவரும் ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிட வேண்டும். நேரம் கொடுக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் காதல் கூடி, தவறான புரிதல் இருந்தால் விலகும்.

புரிதல் இருக்க வேண்டும்:

உங்களுக்குள் இருக்கும் தவறான புரிதலை நீக்க, உங்களுக்குள் இருக்கும் புரிதலை அதிகரிக்க வேண்டும். நீங்கள் உங்கள் துணையுடன் இருந்து விலகி செல்லாமல், அவருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் செயல்படுங்கள். இது உங்கள் துணைக்கு மகிழ்ச்சியை தரும். உங்கள் உணர்வுகள் இதுதான் என்று உங்கள் துணைக்கு தெரியபடுங்கள். அதுவும் உங்கள் உறவை வலுப்படுத்தும். பகலில் என்ன நடந்தது என்பதை, இரவில் உட்கார்ந்து பேசுங்கள்.

மதிக்க வேண்டும்:

உறவுக்குள் ஆணோ, பெண்ணோ பிறரிடத்தில் அல்லது பொதுவெளியில் மரியாதை கொடுக்க வேண்டியது கட்டாயம். இது அவர்களுக்கு மரியாதையை கொடுப்பது மட்டுமின்றி, கௌரவத்தை தரும். அதேபோல், சண்டையின்போது பார்ட்னரை தாக்குவதோ, தகாத வார்த்தைகளால் பேசுவதோ கூடாது. இதனாலும், உங்கள் உறவுக்கு விரிசல் விழ தொடங்கும்.

உங்கள் துணையை நீங்கள் தொடர்ந்து சந்தேகித்தால், அது தவறான புரிதலை அதிகரிக்கும். எனவே, உங்கள் மனதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், உங்கள் துணையிடம் உட்கார்ந்து பேசி கொள்ளுங்கள். சந்தேகமும் உங்கள் உறவை உடைத்துவிடும்.

ALSO READ: Relationship Advice: உங்கள் வாழ்க்கைக்குள் காதல் குறைகிறதா? இந்த டிப்ஸ் உங்களுக்காக..!

பழைய விஷயங்களை மறந்துவிடுங்கள்:

பல நேரங்களில் தம்பதிகள் சில பழைய பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள். இது உங்கள் உறவு முறிவுக்கு காரணமாக இருக்கலாம். இதைத் தவிர்க்க, உங்களுக்கு நடந்த அனைத்து விஷயங்களையும் மறந்துவிட்டு, உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும்.

Latest News