Relationship Tips: 30 வயதுக்கு பிறகு மேரேஜ் செய்வது சரியா? இவ்வளவு ப்ராப்ளம் இருக்கு!
Marriage: இப்போதெல்லாம் படிப்பு, வேலை, தொழில் போன்ற காரணங்களால் பெண்களும் சரி, ஆண்களும் சரி தாமதமாக திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். இதனால் பெண் மற்றும் ஆணின் வயது 30 வயதை தொட்டுவிடுகிறது. இந்த தலைமுறையில் பெரும்பாலானவர்கள் 29 முதல் 30 வயதில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால், தம்பதிகளுக்கு சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இந்தநிலையில் இந்த செய்தி தொகுப்பில் 30 வயதில் திருமணம் செய்து கொள்வது சரியா தவறா என்பதை பார்ப்போம்.
30 வயதில் திருமணம்: இந்தியாவில் காலப்போக்கில் திருமணம் தொடர்பான விஷயங்கள் நிறையவே மாறத் தொடங்கிவிட்டனர். நம் முந்தைய தலைமுறைகள் காலத்தில் பெண்கள் வயதுக்கு வந்தாலே திருமணம் செய்யும் முறை இருந்து வந்தது. அதுவே குழந்தை திருமணம் என்று அழைக்கப்பட்டது. ஆனால், இப்போது இந்த நடைமுறைகள் எங்கையாவது எப்போதாவதுதான் நடக்கிறது. இப்போதெல்லாம் படிப்பு, வேலை, தொழில் போன்ற காரணங்களால் பெண்களும் சரி, ஆண்களும் சரி தாமதமாக திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். இதனால் பெண் மற்றும் ஆணின் வயது 30 வயதை தொட்டுவிடுகிறது. இந்த தலைமுறையில் பெரும்பாலானவர்கள் 29 முதல் 30 வயதில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால், தம்பதிகளுக்கு சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இந்தநிலையில் இந்த செய்தி தொகுப்பில் 30 வயதில் திருமணம் செய்து கொள்வது சரியா தவறா என்பதை பார்ப்போம்.
30 வயதில் திருமணம் செய்வது சரியா..?
மருத்துவர்களின் கருத்துப்படி, 30 வயதில் திருமணம் செய்வது தவறான முடிவாகும். ஒரு ஜோடி 30 வயதிற்கு பிறகு திருமணம் செய்து கொண்டால், அதிலும் குறிப்பாக பெண்களுக்கு கருவுறுதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றன. இது தவிர, 30 வயதிற்கு பிறகு திருமணம் செய்யும் போது, பெண்கள் கருத்தரிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதோடு, கருச்சிதைவு மற்றும் பிரசவத்தில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். வயதான பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் டவுன் சிண்ட்ரோம் (மன மற்றும் உடல் கோளாறு) மற்றும் பிற உடல் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகம். இதுமட்டுமின்றி ஆண்களுக்கு 30 வயது வரை விந்தணுக்களின் தரமும், விந்தணுக்களின் எண்ணிக்கையும் சிறப்பாக இருக்கும். 30 வயத்திற்கு பிறகு விந்தணுவின் தரம் குறைய தொடங்கும் என்று கூறுகின்றன.
புரிதல் ஏற்படுவது கிடையாது:
பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, 30 வயதை தொடும் போது தங்களது துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் குறைகிறது. குறித்த நேரத்தில் திருமணம் செய்து கொள்ளாததாலும், சில சமயம் குடும்ப உறுப்பினர்களின் அழுத்தத்தாலும், பெண்கள் யோசிக்காமல் திருமணம் செய்து கொள்வதால், பின்னாளில் கணவனுடன் அனுசரித்து செல்வதில் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதனால் இருவருக்குள் ஏற்படும் புரிதல்களும் காணாமல் போய், தினந்தோறும் சண்டைகளில் ஈடுபட்டு கொண்டிருப்பார்கள். காதல் திருமணமாக இருந்தால் பரவாயில்லை, வீட்டில் பார்த்து திருமணம் செய்து கொண்டீர்கள் என்றால் இந்த பிரச்சனைகளை நீங்கள் அடிக்கடி சந்திக்க நேரிடும்.
பாலியல் உடலுறவில் ஆர்வம் குறைவு:
தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள், பெரும்பாலும் வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்வது கிடையாது. தாமதமான திருமணம் காரணமாக உடல் நெருக்கத்தில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால், இருவரில் யாரேனும் ஒருவர் எரிச்சலடைந்து பாலியல் வாழ்க்கைக்குள் பாதிப்பு ஏற்படுகிறது.
ALSO READ: Breakup: பிரேக்அப்பால் வாழ்க்கையில் பிரேக் ஏன்..? இதை செய்து வெளியே வாங்க..!
தம்பதிகள் 26 முதல் 28 வயதில் காதல் அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணம் இரண்டையும் செய்ய வேண்டும் என்றும், 29 முதல் 30 வயதுக்குள் குழந்தை திட்டமிடல் செய்ய வேண்டும். ஏனெனில் இதை விட தாமதமாக வந்தால் எதிர்காலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.