Relationship Tips: திருமணத்திற்கு பிறகு தம்பதி செய்யக்கூடாத சில விஷயங்கள்.. பெரிய ஆபத்தை தந்துவிடும்!
Healthy Relationship: பெண்கள் மன பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், குடும்ப உறவுகளுக்குள் பெண்கள் செய்யும் சில தவறுகளை பெரியளவில் பிரச்சனையை உண்டாக்கிவிடுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், பெண்கள் தங்கள் உறவை வலுவாக வைத்திருக்க, சில விஷயங்களை எப்போதும் கடைபிடிக்க வேண்டும். பெண்கள் எந்த மாதிரியான விஷயங்களை செய்ய கூடாது, பெண்கள் இந்த விஷயங்களை கவனித்துக் கொண்டால், உறவு நீண்ட காலம் நீடிக்கும் என்பதை பற்றியெல்லாம் இங்கே பார்ப்போம்.
தம்பதி செய்யக்கூடாத தவறுகள்: ஒரு குடும்பத்தில் பெண்தான் எல்லாமும். ஒரு ஆண் இல்லாத குடும்பத்தை பெண் எப்படியும் கொண்டு சென்றுவிடுவாள். ஆனால், பெண் இல்லாத குடும்பத்தை ஆண் சமாளிக்க நாள்தோறும் சிரமப்படுவார்கள். பலத்தில் வேண்டுமென்றால் ஒரு ஆண் ஆதிக்கம் செலுத்தலாம், மன பலத்தில் பெண்களை என்றைக்குமே ஆண்களால் அடித்துக்கொள்ளவே முடியாது. அந்த அளவிற்கு ஒரு குடும்பத்தின் ஆணி வேரே பெண்தான். இப்படியான விஷயங்களில் பெண்கள் மன பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், குடும்ப உறவுகளுக்குள் பெண்கள் செய்யும் சில தவறுகளை பெரியளவில் பிரச்சனையை உண்டாக்கிவிடுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், ஆண்களும் தங்கள் உறவை வலுவாக வைத்திருக்க, சில விஷயங்களை எப்போதும் கடைபிடிக்க வேண்டும். திருமணத்திற்கு பிறகு தம்பதி எந்த மாதிரியான விஷயங்களை செய்ய கூடாது, தம்பதி இந்த விஷயங்களை கவனித்துக் கொண்டால், உறவு நீண்ட காலம் நீடிக்கும் என்பதை பற்றியெல்லாம் இங்கே பார்ப்போம்.
ALSO READ: Relationship Advice: தம்பதிக்குள் காதலை குறைக்கும் ஸ்மார்ட்ஃபோன்.. நீங்களும் இந்த தப்பு பண்ணாதீங்க!
சந்தேகம்:
திருமணம் ஆன பிறகு பெரும்பாலான தம்பதி செய்யும் முக்கிய தவறுகளில் ஒன்று சந்தேகம். இதனால் இருவருக்கும் மன அமைதி கெட்டுவிட தொடங்குகிறது. பெரும்பாலான தம்பதிகள் தங்கள் துணையை தேவையில்லாமல் சந்தேகிக்க தொடங்குகிறார்கள். இதனால், விரக்தியடையும் உங்கள் பார்ட்னர் தங்களை அறியாது உங்களிடம் இருந்து விலக தொடங்குகின்றனர். நண்பர்களை பார்ப்பது அல்லது அவர்களிடம் போன் பேசுவது உள்ளிட்ட எதையும் வெளிப்படையாக செய்தால் சண்டைகள் வர தொடங்கும் என்று பயந்து, மறைக்க தொடங்குகிறார்கள். இது மேலும், தம்பதிக்குள் சந்தேகத்தை உண்டாக்கி நாள்தோறும் பிரச்சனையை உண்டாக்குகிறது.
துணைக்கு நேரம் கொடுங்கள்:
திருமணம் ஆன நேரத்தில் பெண்கள் ஆண்களிடமும், ஆண்கள் பெண்களிடமும் காதலை வெளிப்படுத்தி அதிக நேரத்தை கொடுக்கின்றனர். சில காலத்திற்கு பின்னர் அந்த பார்ட்னருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்திவிடுகிறார்கள். உதாரணத்திற்கு, திருமணம் ஆனபோது தம்பதி தங்கள் துணையுடன் தினமும் பேசுவது, நேரம் கழிப்பது, அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிப்பது உள்ளிட்ட விஷயங்களை செய்கின்றனர். சிறிது நாட்கள் கழித்து, நீங்கள் உங்கள் துணைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்து கொள்கின்றனர். அதன் காரணமாக உறவுகளுக்குள் விரிசல்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. எனவே தம்பதி தவறுதலாக கூட இதுபோன்ற தவறுகளை செய்யக்கூடாது.
அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தாதீர்கள்:
கணவர்களிடம் பெண்கள் சில விஷயங்களில் கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், அனைத்திற்கு கணவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாதீர்கள். இது அவர்களது திருமண வாழ்க்கையில் வெறுப்பை உண்டாக்கி விடும். உங்களுக்கு உங்கள் கணவர் செய்வது தவறு என்று தோன்றினால், அவ்வபோது காதலுடனும், கொஞ்சலுடனும், செல்லமாகவும், அழுவதுபோலும் சொல்லுங்கள். இதுபோன்றவை ஆண்கள் மனதை எளிதாக கரைய செய்து, அவர்களை மாற்ற உந்துதல் தரும். நீங்கள் எப்போது கண்டிப்பாக இருந்தால், நீ சொல்வதை சொல், என்னால் இதுதான் பண்ண முடியும் என்று இருந்துவிடுவார்கள். கணவர்களின் மனதிலும் என்ன இருக்கிறது என்று புரிந்து கொண்டு, அவர்களிடம் உட்கார்ந்து பேசுங்கள்.
இதேபோல், கணவர்களும் மனைவிமார்களிடம் ஆதிக்கத்தை செலுத்தாதீர்கள். இது அடித்து துன்புறுத்துதல் செய்யாதீர்கள். இது உங்கள் மனைவி மட்டுமின்றி குழந்தைகளையும் பாதிக்க செய்யும்.
ALSO READ: Relationship Tips: உங்கள் காதலி திடீரென்று பேசுவதை நிறுத்துகிறாரா..? இதுதான் காரணமாக இருக்கும்!
பொருளாதார நிலை:
பல நேரங்களில் பணம் ஒரு குடும்பத்திற்குள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்து விடும். இது கணவன் – மனைவி உறவை விவாகரத்து வரை கொண்டு சென்று விடுகிறது. தம்பதி தங்கள் துணையின் பொருளாதார நிலையைப் புரிந்துகொண்டு பணத்தை செலவிட வேண்டும். அளவுக்கு மீறி சில பொருட்களை உங்கள் பார்ட்னரிடம் கேட்கும்போது, அது பொருளாதார நிலையிலும், உறவுக்குள்ளும் சிக்கலை தந்துவிடுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் உறவில் பணம் தொடர்பான சர்ச்சைகளைத் தவிர்த்து புரிதல்களுடன் குடும்பத்தை நடத்த வேண்டும். இந்த தவறுகளை சரி செய்து கொள்வதன் மூலம் தம்பதிகள் தங்கள் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளலாம்.