Relationship Tips: நீங்கள் விரும்பும் பெண் உங்களை விரும்புகிறாரா இல்லையா..? இப்படி தெரிஞ்சுகோங்க..!
Love Tips: பொதுவெளியில் பெண்கள் எவ்வளவு அதிகாரமிக்கவர்களாக இருந்தாலும், நான்கு சுவருக்குள் தனக்கு பிடித்த ஆண்களிடம் குழந்தை தனமாக நடந்து கொள்வார்கள். ஆண்களிடம் பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பாதவர்களாக இருக்கலாம். ஆனால், ஒரு சில விஷயங்களை வைத்து உங்களை அந்த பெண்ணிற்கு பிடிக்குமா இல்லையா என்பதை கண்டுபிடிக்கலாம். பெண் தன்னை காதலிக்க ஆரம்பித்தாளா, இல்லை வெறும் தோழியா என்பதை கண்டறிய பல ஆண்கள் நாள்தோறும் குழம்பிக்கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த குறிப்புகள் உதவியாக இருக்கும்.
பெண்களின் அன்பு: பெண்களை புரிந்துகொள்வது சாத்தியமில்லை என்று பல ஆண்கள் கூறுகின்றனர். ஒரு பெண்ணோட மனசு ஒரு பெண்ணுக்குதான் தெரியும், பெண்ணோடு மனசு பயங்கர ஆழமானது என்றெல்லாம் பலர் சொல்லி கேள்வி பட்டுள்ளோம். ஆனால், இது முற்றிலும் உண்மை இல்லை. பெண்கள் தாங்கள் விரும்பும் ஆண்களிடம் ஒரு திறந்த புத்தகத்தை போல் இருப்பார்கள். பொதுவெளியில் பெண்கள் எவ்வளவு அதிகாரமிக்கவர்களாக இருந்தாலும், நான்கு சுவருக்குள் தனக்கு பிடித்த ஆண்களிடம் குழந்தை தனமாக நடந்து கொள்வார்கள். ஆண்களிடம் பெண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பாதவர்களாக இருக்கலாம். ஆனால், ஒரு சில விஷயங்களை வைத்து உங்களை அந்த பெண்ணிற்கு பிடிக்குமா இல்லையா என்பதை கண்டுபிடிக்கலாம். பெண் தன்னை காதலிக்க ஆரம்பித்தாளா, இல்லை வெறும் தோழியா என்பதை கண்டறிய பல ஆண்கள் நாள்தோறும் குழம்பிக்கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த குறிப்புகள் உதவியாக இருக்கும்.
ALSO READ: Relationship Tips: 30 வயதுக்கு பிறகு மேரேஜ் செய்வது சரியா? இவ்வளவு ப்ராப்ளம் இருக்கு!
கிடைக்கும் நேரத்தை உங்களுடன் செலவளிப்பார்கள்:
நீங்கள் விரும்பும் பெண் உங்களையும் விரும்புகிறார் என்றால், அவர் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் கிடைக்கும் நேரத்தை உங்களுக்காக செலவு செய்வார்கள். உதாரணத்திற்கு அந்த பெண் அலுவலகத்தில் வேலை செய்யும்போது, அதில் ஒரு நிமிட இடைவேளை கிடைத்தாலும் உங்களுக்கு போன் செய்து பேசுவார்கள். இது நட்பிலும் இருந்தாலும், அதிக முன்னுரிமை கொடுத்தால் அது காதலாக இருக்க அதிக வாய்ப்புண்டு.
கைகளை பிடித்து பேசுவார்கள்:
அந்த பெண் வேண்டுமென்றே உங்கள் அருகில் வருவதற்கு பல சாக்குகளை சொல்லி, உங்களிடம் வந்து நடக்கும்போது அல்லது எந்த இடத்தில் அமர்ந்திருக்கும்போது உங்கள கைகளை பிடித்துகொண்டு உங்கள் தோளில் சாய்ந்துகொண்டால், ஒருவேளை அந்த பெண் உங்களை காதலிக்கிறார் என்று அர்த்தம்.
மற்ற பெண்கள் மீது பொறாமை:
மற்ற பெண்கள் உங்களை பார்த்தாலோ அல்லது மற்ற பெண்களை நீங்கள் பார்த்தாலோ உங்களை விரும்பும் பெண்ணுக்கு பொறாமை மற்றும் கோபம் ஏற்படும். இதனால் அடிக்கடி சொல்லியும், கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.
கண்ணோடு கண் பார்த்து பேசுதல்:
நாம் ஒருவரை நேசிக்கும்போது, அவருடைய கண்களைப் பார்த்து பேசுவோம். அப்போது, அந்த பெண் உங்களை எதிர்கொள்ள முடியாமல் வெட்கப்படுவார். அதன்பிறகு, உங்கள் கண்களை பார்த்து பேச முயற்சி செய்வார். அதுவும் ஒரு வகையான காதலின் அடையாளம்தான். எனவே, இந்த குறிப்புகளை பயன்படுத்தி அந்த பெண் உங்களை காதலிக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்துகொண்டு காதலை வெளிப்படுத்துங்கள்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)