Relationship Tips: மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ வேண்டுமா..? இதை பாலோ செய்தால் போதும்! - Tamil News | Relationship Tips how to build a strong and healthy relationship | TV9 Tamil

Relationship Tips: மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ வேண்டுமா..? இதை பாலோ செய்தால் போதும்!

Healthy Relationship: கணவன், மனைவி இடையே விட்டுகொடுத்த செல்வது மிக மிக முக்கியம். இதில், ஈகோ மட்டும் அதிகமானால் கணவன் - மனைவி இடையே பிரிவுதான் ஏற்படும். அன்பும், நம்பிக்கையும் வாழ்க்கை துணைவர்களுக்கிடையிலான உறவின் அடித்தளம் என்றால், கோபம் மற்றொரு வகையான அன்புதான். ஆனால், அந்த கோபம் அதிகரிக்கும் போதுதான் பிரச்சனைகளும் அதிகரிக்க செய்யும். எத்தனை பேர் சமரசம் செய்தும் உங்கள் திருமண வாழ்க்கைக்குள் பிரச்சனைகள் முடிவுக்கு வரவில்லை என்றால், நாங்கள் சொல்லும் இந்த விஷயங்களை பாலோ பண்ணுங்கள்.

Relationship Tips: மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ வேண்டுமா..? இதை பாலோ செய்தால் போதும்!

கோப்பு புகைப்படம்

Published: 

15 Aug 2024 14:01 PM

திருமண உறவு: குடும்பத்திற்குள் ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும். கணவன், மனைவி இடையே விட்டுகொடுத்த செல்வது மிக மிக முக்கியம். இதில், ஈகோ மட்டும் அதிகமானால் கணவன் – மனைவி இடையே பிரிவுதான் ஏற்படும். அன்பும், நம்பிக்கையும் வாழ்க்கை துணைவர்களுக்கிடையிலான உறவின் அடித்தளம் என்றால், கோபம் மற்றொரு வகையான அன்புதான். ஆனால், அந்த கோபம் அதிகரிக்கும் போதுதான் பிரச்சனைகளும் அதிகரிக்க செய்யும். எத்தனை பேர் சமரசம் செய்தும் உங்கள் திருமண வாழ்க்கைக்குள் பிரச்சனைகள் முடிவுக்கு வரவில்லை என்றால், நாங்கள் சொல்லும் இந்த விஷயங்களை பாலோ பண்ணுங்கள். இது உங்கள் திருமண வாழ்க்கையை ஆரோக்கியமாக மாற்றும்.

ALSO READ: Relationship Tips: உங்கள் பார்ட்னரிடம் பொய் சொல்லுங்க.. இந்த விஷயத்துக்கு சொன்னா காதல் மலரும்!

பொறுமை:

உங்கள் மனைவி தொடர்ந்து பேசும்போதும், திட்டும்போதும் சில நேரங்களில் எரிச்சலூட்டும். இந்த விஷயத்தில் கணவர்களும் கோபம் கொள்ளாமல் நிதானமாக செல்வதும், பதில் சொல்வதும் நல்ல பழக்கம். இது இருவருக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொருவரும் கோபம் கொண்டால், பிரச்சனைகள் மேலும் பெரிதாகி உறவை விரிசல் அடைய செய்யும். எனவே முடிந்தவரை மனதையும், பேசுவதையும் அமைதியாக வைத்துக் கொள்வது நல்லது.

கவனியுங்கள்:

நம் பார்ட்னர் சொல்வதை கேட்பதும் ஒரு கலைதான். எனவே, உங்கள் வாழ்க்கை துணைவர்களில் ஒருவர் பேசும்போது, மற்றவர் கேட்க கற்றுக்கொள்ள வேண்டும். இதனால், குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் தவிர்க்கப்படும். இதன்மூலம், காதல் எப்போதும் உங்கள் குடும்பத்தில் இருக்கும்.

பேசுங்கள்:

திருமண வாழ்வில் கணவன் – மனைவிக்கிடையே பேசுதல் என்பது ரொம்ப முக்கியம். அப்போதுதான் அன்பும், உறவும் வலுவடையும். மனதிற்கு இதமான வார்த்தைகளையும் இருவரும் பேசுவதன்மூலம், காதல் அதிகரிப்பத்துடன் அவர்கள் ஏதேனும் மன அழுத்தத்தில் இருந்தால் சரி செய்யும்.

நம்பிக்கை:

திருமண உறவு வலுவாக இருக்க நம்பிக்கை கொடுப்பதும் முக்கியம். எனவே, கணவன் மனைவி இருவரும் பேசும்போதும் நன்பிக்கையை அதிகரிக்கும். மேலும், உங்கள் மனைவியிடம் மிகவும் கண்ணியமாகவும், மரியாதையுடனும் நடந்துகொள்வது உங்கள் மனைவிக்கு உங்கள் மீது பெரியளவிலான நம்பிக்கை அதிகரிக்கும்.

பொருளாதாரம்:

வாழ்க்கை சீராக இயங்க நிதி நிலை நன்றாக இருக்க வேண்டும். பல குடும்பங்களில், மக்கள் கோபப்படுவதற்கு இதுவே காரணம். இரு மனைவிகளும் பணத்தைப் பற்றி ஒருவருக்கொருவர் பேச வேண்டும். இருவரும் வேலை செய்பவர்களாக இருந்தால் நிதி ரீதியாக சில பொறுப்புகளை பகிர்ந்து கொள்வது நல்லது. இது ஒருவரையொருவர் சுமையை குறைத்து மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

ALSO READ: Relationship Advice: கோபமான மனைவியை எப்படி சமாதானப்படுத்துவது? உங்களுக்காக சில டிப்ஸ்!

ஒப்பிடுவதைத் தவிர்க்கவும்:

பெரும்பாலான கணவன் – மனைவிமார்கள் தங்கள் பார்ட்னரை மற்றவர்களுடன் ஒப்பிடுகிறார்கள். இது உறவில் விரிசல்களுக்கு வழிவகுக்கும். திருமண உறவுகளுக்குள் உங்கள் பார்ட்னரை வேறு யாருடனும் ஒப்பிடக்கூடாது. இது நாளடைவில் உங்கள் பாட்னருக்கு மன உளைச்சலை உண்டாக்கி, விவாகரத்து வரை கொண்டு செல்லும்.

இனி திரைப்படங்களுக்கு இடையில் விளம்பரம் தோன்றும் - அமேசான்!
குழந்தைகள் பொய் சொல்ல காரணம் தெரியுமா?
பட்ஜெட்டில் பார்க்கக்கூடிய உலக நாடுகள் என்னென்ன தெரியுமா?
நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!