Relationship Tips: உங்கள் காதலி திடீரென்று பேசுவதை நிறுத்துகிறாரா..? இதுதான் காரணமாக இருக்கும்!
Healthy Relationship: உங்கள் காதலி திடீரென்று உங்களுடன் பேசுவதை நிறுத்தினால், அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளாமல் தவித்து கொண்டு உள்ளீர்களா..? ஏன் என்னிடம் பேசுவதில்லை..? எதற்காக என் மீது கோபம் உனக்கு..? என்று தொடர்ந்து அவரிடம் கேள்வியை கேட்டு, அவரின் கோபத்தை மேலும் அதிகரிக்காதீர்கள். இந்த காரணத்தை என்னவென்று இங்கே எங்களிடம் தெரிந்துகொண்டு உங்களது காதலியை சமாதானம் செய்யுங்கள்.
காதல் வாழ்க்கை: காதலிக்கும் காதலனுக்கும் இடையிலான உறவானது காதல், நம்பிக்கையால் கட்டமைக்கப்பட்டுள்ளது. காதல் உறவோ, திருமண வாழ்க்கையோ இருவருக்குள் நம்பிக்கை இல்லை என்றால் அந்த உறவு நீண்ட காலம் நீடிக்காது. காதலர்களுக்கு நடுவே சண்டை வந்தால் மட்டும், உங்களது காதலி உங்களிடம் பேசாமல் இருக்க மாட்டார். உங்கள் காதலி திடீரென்று உங்களுடன் பேசுவதை நிறுத்துவார். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளாமல் தவித்து கொண்டு உள்ளீர்களா..? ஏன் என்னிடம் பேசுவதில்லை..? எதற்காக என் மீது கோபம் உனக்கு..? என்று தொடர்ந்து அவரிடம் கேள்வியை கேட்டு, அவரின் கோபத்தை மேலும் அதிகரிக்காதீர்கள். இந்த காரணத்தை என்னவென்று இங்கே எங்களிடம் தெரிந்துகொண்டு உங்களது காதலியை சமாதானம் செய்யுங்கள்.
ALSO READ:Relationship Tips: ஹனிமூன் செல்லும்போது இந்த தவறுகள் வேண்டாம்.. மகிழ்ச்சியை கெடுத்துவிடும்!
காதலிக்கும் காதலனுக்கும் இடையிலான சண்டைகள் பெரும்பாலும் பேச்சுவார்த்தைகளால் வருகின்றன. இதில், ஒருவரையொருவர் சமாதானப்படுத்துவதன்மூலம், உங்கள் காதல் மேலும் அதிகரிக்கும். இந்த இருவருக்குமான காதல் உறவு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. நம்பிக்கை இல்லை என்றால் உறவு நீண்ட காலம் நீடிப்பது கடினமாகி, அது பாதியில் முறிந்து போகும் அபாயம் உள்ளது.
பல சமயங்களில் உங்கள் உறவில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக உங்கள் காதல் உறவுக்குள் இடைவெளி அதிகரிக்க தொடங்கும். பல நேரங்களில் பெண்கள் எந்த காரணமும் இல்லாமல் தங்கள் பார்ட்னரிடம் பேசுவதை நிறுத்துவார்கள். அதேசமயம் பையன்களுக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாது.
கோபம்:
உங்கள் காதலி உங்களுடன் பேசாத போதெல்லாம்தான் நீங்கள் அவர்களை கவனிக்க தொடங்குவீர்கள். அதன் காரணமாகவே அவர்கள் உங்களிடம் அடிக்கடி கோபம் கொள்வார்கள்.
முதல் காரணம்:
உங்கள் காதலி உங்களிடம் கேட்டு அதை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால், அவர்கள் பேசுவதை நிறுத்திவிடுவார்கள்.
இரண்டாவது காரணம்:
சண்டைக்கு நடுவே அவளிடம் மரியாதையாகப் பேசினாலோ அல்லது அவர்கள் பேசும்போது அலட்சியமாக நடந்து கொண்டால், அன்றிலிருந்து அவர்கள் உங்களிடம் பேசுவதை நிறுத்திவிடுவார்கள்.
மூன்றாவது காரணம்:
உங்கள் நண்பரிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ ஒன்றாக அமர்ந்து ஜாலியாக பேசும்போது, உங்கள் காதலியை விட்டுகொடுத்து பேசினால், அவர்களுக்கு உங்களிடம் கோபித்து கொள்வார்கள். முடிந்தவரை அவர்களை எப்போதும், யாரிடமும் விட்டுகொடுத்து பேசாதீர்கள்.
இவற்றை சரிசெய்யும் முறை:
உங்கள் காதலி பெரும்பாலும் சண்டைகள் அல்லது கோபமாக இருக்கும்போது, நீங்கள் அவர்களிடம் சென்று சமாதானம் செய்ய வேண்டும் என்றே நினைப்பார்கள். நீங்கள் உங்களது ஈகோவை மறந்து அவர்களிடம் நான் செய்ததுதான் தப்பு என்று சமாதானம் செய்யுங்கள்.
முடிந்தவரை, உங்கள் காதலியுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். அவர் உங்கள் மீது கோபமடைந்தால் தயங்காமல் சமாதானம் செய்யுங்கள். அவரை எங்கையாவது அழைத்துச் சென்று உட்கார வைத்து, பேசி பாருங்கள்.