5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Relationship Advice: தம்பதிக்குள் காதலை குறைக்கும் ஸ்மார்ட்ஃபோன்.. நீங்களும் இந்த தப்பு பண்ணாதீங்க!

Relationship Tips: ஸ்மார்ட்ஃபோன்கள் கரையான்களை போல நம் உறவுமுறைகளுக்கு புகுந்து அழித்து வருகிறது. இதனால்தான் உறவுகளுக்குள் தூரம் அதிகரித்து, பேசுதலும் குறைகிறது. இது திருமண வாழ்க்கையும் பாதிக்காமல் இல்லை. போன் நம் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டதால், நம் நெருக்கமுடையவர்கள் தூரம் சென்று விடுவார்கள். ஸ்மார்ட்ஃபோனால் உறவுகளுக்குள் ஏற்படும் பிரிவு குறித்து இங்கே பார்ப்போம்.

Relationship Advice: தம்பதிக்குள் காதலை குறைக்கும் ஸ்மார்ட்ஃபோன்.. நீங்களும் இந்த தப்பு பண்ணாதீங்க!
கோப்பு புகைப்படம்
mukesh-kannan
Mukesh Kannan | Published: 07 Aug 2024 17:22 PM

ஸ்மார்ட்ஃபோன்கள்: திருமண வாழ்க்கைக்குள் புரிதல் என்பது மிக மிக முக்கியம். நீங்கள் உங்களுக்குள் எவ்வளவு தூரம் பேசி பழகுகிறீர்களா, அது அவர்களுக்கு நம்பிக்கையும், காதலையும் கொடுக்கும். குடும்பங்களுக்குள் கடைசியாக நீங்கள் எப்போது அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட செய்தீர்கள். எப்போது ஜாலியாக பேசினீர்கள் என்றால் நிறைய பேருக்கு ஞாபகம் இருக்காது. அந்த அளவிற்கு ஸ்மார்ட்ஃபோன்கள் கரையான்களை போல நம் உறவுமுறைகளுக்கு புகுந்து அழித்து வருகிறது. இதனால்தான் உறவுகளுக்குள் தூரம் அதிகரித்து, பேசுதலும் குறைகிறது. இது திருமண வாழ்க்கையும் பாதிக்காமல் இல்லை. போன் நம் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டதால், நம் நெருக்கமுடையவர்கள் தூரம் சென்று விடுவார்கள். ஸ்மார்ட்ஃபோனால் உறவுகளுக்குள் ஏற்படும் பிரிவு குறித்து இங்கே பார்ப்போம்.

ALSO READ: Healthy Sleep Habits: தூக்கம் உடலில் இதையெல்லாம் சரி செய்யும்.. இவ்வளவு நேரம் தூங்குங்க!

சாபக்கேடான சமூக ஊடகங்கள்:

நாம் பெரும்பால நேரங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிடாம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கழித்து வருகிறோம். மேலும், தற்போது அதிகரித்து வரும் ரீல்ஸ் மோகம் காரணமாக, தங்களது வீட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதை கண்டுகொள்வது இல்லை. நிறைய நேரங்கள் வெறும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களுக்காக நாம் செய்யும் செயல்கள், நம் பார்ட்னர் நம் மீது வெறுப்படைய செய்துவிடுகிறது.

போனை குறைவாக பயன்படுத்துங்கள்:

நாம் நம் நண்பர்கள், குடும்பத்தினருடன் இருக்கும்போதெல்லாம், நம் ஸ்மார்ட்ஃபோனை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இதேதான் நமக்கு நெருக்கமானவர்களிடம் தொடர்கிறது. நம் துணை எப்படி உணருவார் என்பதை பற்றி சிந்திக்காமல், ஸ்மார்ட்போன் பயன்படுத்தி பிஸியாக இருக்கிறோம். இதனால் நம் பார்ட்னர் தனிமை உணர்ந்து, தேவையில்லாத மனக்கசப்பை உண்டாக்க செய்யும். இது திருமண உறவுக்குள் தூரத்தை அதிகரிக்க செய்யும்.

இடைவெளி:

தொலைபேசி நம் கைகளில் இருக்கும்போது, நம் துணைக்கு பெரும்பாலும் நேரம் கொடுப்பதில்லை. உதாரணத்திற்கு, சாலையில் செல்லும்போது கூட போனை தான் பயன்படுத்திகிறோமே தவிர, பார்ட்னர் கைகளை பிடித்து நடப்பதை குறைத்துகொண்டோம். இது உங்களுக்கு மட்டுமின்றி, உங்கள் காதலுக்குள்ளும் தூரத்தை அதிகரிக்கிறது. கடைசியில் உறவு முறிவின் விளிம்பை அடையும் நேரத்தை தந்து விடுகிறது.

தவறான புரிதல்கள்:

நீங்கள் பெரும்பாலான நேரம் ஸ்மார்ட் போனில் கழிக்கும்போது, அது உங்கள் பார்ட்னருக்கு சந்தேகத்தை கொடுக்கலாம். நீங்கள் என்ன செய்கிறீர்கள், யாரிடம் அதிக நேரம் பேசுகிறீர்கள் என்று ஆராய ஆரம்பித்தால் சந்தேகம் அதிகரித்து, காதல் குறைய ஆரம்பிக்கும்.

ALSO READ: Fennel Seeds: சோம்பில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கா..? தினமும் இப்படி எடுத்துக்கோங்க!

நெருக்கம் குறையும்:

ஸ்மார்ட்போன்கள் இல்லாத காலக்கட்டத்தில், ம்பதிகள் ஒன்றாக வெளியே செல்வார்கள். அவர்கள் பல மணிநேரம் பேசுவார்கள், ஒன்றாக தரமான நேரத்தை செலவிடுவார்கள். ஸ்மார்ட்போன்கள் வந்தபிறகு, அதற்கு அதிக நேரம் ஒதுக்கி எல்லாவற்றுக்கும் கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இதனால் உறவுகள் பலவீனமாகி வருகின்றன.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News