Health Tips: தூங்கும்போது குறட்டை விடுகிறீர்களா..? இதை செய்தால் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்!
Snoring: குறட்டையானது அருகில் உறங்குபவரை தொந்தரவு செய்வது மட்டுமின்றி பல தீவிர நோய்களின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. குறட்டை என்பது தூக்க இரத்த சோகையின் அறிகுறியாகும். இதய நிபுணர்களின் கூற்றுப்படி, தூக்கத்தின்போது அடிக்கடி மற்றும் சத்தமாக குறட்டை விடுவது மிகவும் ஆபத்தானது. இதை ஒருபோதும் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது. இத்தகைய சூழ்நிலையில், உடனடியாக ஒரு மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டும்.
குறட்டை தொல்லை: நாம் தூக்கத்தில் இருக்கும்போது நம்மை சுற்றி என்ன நடக்கும் என்பது பெரும்பாலானோருக்கு தெரிவது இல்லை. அதில் குறட்டையும் ஒன்று. குறட்டையானது அருகில் உறங்குபவரை தொந்தரவு செய்வது மட்டுமின்றி பல தீவிர நோய்களின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. குறட்டை என்பது தூக்க இரத்த சோகையின் அறிகுறியாகும். இதய நிபுணர்களின் கூற்றுப்படி, தூக்கத்தின்போது அடிக்கடி மற்றும் சத்தமாக குறட்டை விடுவது மிகவும் ஆபத்தானது. இதை ஒருபோதும் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது. இத்தகைய சூழ்நிலையில், உடனடியாக ஒரு மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டும். இந்த குறட்டை பிரச்சனையால் தம்பதியர் விவாகரத்து கூட செய்யும் நிலைமை தள்ளப்படுகிறார்கள். அந்த வகையில் குறட்டை ஏன் ஆபத்தானது, அது எந்த மாதிரியான பிரச்சனையை உண்டாக்கும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ALSO READ: Health Tips: பிரஷர் குக்கரில் இந்த உணவுகளை சமைக்காதீங்க.. உடலுக்கு தீங்கு விளைவிக்கும்!
குறட்டை ஏன் ஏற்படுகிறது..?
குறட்டை பிரச்சனை என்பது எந்த நபருக்கும் வரலாம். ஆழ்ந்த உறக்கத்தின்போது வாயில் உள்ள நாக்கு மற்றும் தொண்டையின் தசைகள் ஓய்வெடுக்க தொடங்கும்போது சிரமம் ஏற்படும். இதுவே குறட்டை என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் தொண்டை திசுக்கள் சுவாசக் குழாயை தொந்தரவு செய்கின்றன. இதன் காரணமாக மூக்கு மற்றும் வாய் அதிர்வுறும். இந்த ஒலி குறட்டையாக வெளிப்படும்.
குறட்டை ஒரு நோயா..?
குறட்டை பிரச்சனையை பொதுவான பிரச்சனையாக கருது அலட்சியப்படுத்தக் கூடாது. மருந்துகளாலும், வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்கள் செய்வதன்மூலம் குறட்டை பிரச்சனையை சரிசெய்யலாம். எனவே, குறட்டை பிரச்சனையை ஒரு நோயாக கருதி சிகிச்சை பெறுவது முக்கியம். மருத்துவரிடம் செல்வதன்மூலம், உங்கள் சுவாசப் பாதை ஏன் தடைபடுகிறது என்பதைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
குறட்டை யார் யாருக்கு ஆபத்து..?
அதிக எடை கொண்டவர்கள், டான்சில்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சைனஸ் பிரச்சனை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள் உள்ளவர்களுக்கு குறட்டை ஆபத்தை ஏற்படுத்தலாம். இந்த பிரச்சனைகளை தொடர்ந்து அதிகரிக்க செய்து, மூளை பக்கவாதத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.
தூக்க இரத்த சோகை:
தூக்கத்தில் ஏற்படும் இரத்த சோகை பிரச்சனை குறட்டைக்கு மிகப்பெரிய காரணமாக கருதப்படுகிறது. தூக்க இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி, தூங்கும்போது சுவாசம் நின்றுவிடுவது போல் உணர்கிறார்கள். இதன் காரணமாக, இரவு நேரத்தில் இவர்கள் அடிக்கடி எழுந்து மூச்சுத் திணற தொடங்குகின்றனர். இது தவிர அதிக தூக்கம், சோர்வு, தொடர் தலைவலி, வாய் வறட்சி, இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள். இதுமாதிரியான பிரச்சனைகளை நீங்களும் சந்தித்தால் உடனடியாக மருத்துவர்களை தொடர்பு கொள்வது நல்லது.
குறட்டை பிரச்சனையை சரி செய்ய என்ன செய்யலாம்..?
உடல் எடையை குறைத்தல், உடற்பயிற்சி செய்தல், பசிக்கும்போது உணவு எடுத்து கொள்ளுதல், கழுத்துக்கு பயிற்சி செய்தல் மூலம் குறட்டை பிரச்சனையை சரி செய்யலாம்.
ALSO READ: Health Tips: உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறதா? இந்த குறைபாடே அதற்கு காரணம்..!
குறட்டையிலிருந்து விடுபட..
அதிக பழங்களை எடுத்து கொள்ளுதல் நல்ல பலனை தரும். இது மட்டுமின்றி வறுத்த உணவுகள், புகைப்பிடித்தல் மற்றும் மதுபானங்களை தவிர்ப்பதன்மூலம் குறட்டை பிரச்சனையை விரைவில் சரி செய்யலாம். இரவில் மஞ்சள் கலந்த பாலை குடிப்பதன்மூலமும், இலவங்கப்பட்டையை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது உள்ளிட்டவற்றை பின்பற்றுவதன்மூலமும் குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.