Food Recipes: ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சிக்கன் வெள்ளை பிரியாணி.. 15 நிமிடத்தில் சூப்பர் டிஸ் தயார்..!
Chicken White Biryani: இந்தியாவில் பிரியாணிக்கு என்று பிரத்யேக ரசிகர் பட்டாளமே உள்ளது. வெஜிடேரியன்கள் வெஜ் பிரியாணியையும், அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி என பல வகை பிரியாணி வகைகளை ருசிப்பார்கள். அந்தவகையில், இன்று ஈஸியாக செய்யக்கூடிய சிக்கன் வெள்ளை பிரியாணி எப்படி செய்யலாம் என்றும் இங்கே தெரிந்து கொள்வோம்.
பிரியாணி என்பது நாட்டின் அனைத்து பகுதி மக்களாலும் விரும்பப்படும் ஒரு உணவாகும். அது வெஸ் பிரியாணி ஆக இருந்தாலும் சரி, அசைவ பிரியாணி ஆக இருந்தாலும் சரி. இந்தியாவில் பிரியாணிக்கு என்று பிரத்யேக ரசிகர் பட்டாளமே உள்ளது. வெஜிடேரியன்கள் வெஜ் பிரியாணியையும், அசைவம் சாப்பிடுபவர்கள் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி என பல வகை பிரியாணி வகைகளை ருசிப்பார்கள். அந்தவகையில், இன்று ஈஸியாக செய்யக்கூடிய சிக்கன் வெள்ளை பிரியாணி எப்படி செய்யலாம் என்றும் இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: Food Recipes: காலை ஸ்நாக்ஸாக சாப்பிட சூப்பர் டிஸ்.. பனீர் சீஸ் கட்லெட் ஈஸியா இப்படி செய்து கொடுங்க!
வெள்ளை பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 20
இஞ்சி பூண்டு – 100 கிராம்
பச்சை மிளகாய் – 6
பட்டை – சிறிதளவு
ஏலக்காய் – சிறிதளவு
கிராம்பு – சிறிதளவு
சோம்பு – சிறிதளவு
சிக்கன் – அரை கிலோ
தயிர் – ஒரு பாக்கெட்
கடலை எண்ணெய் – 4 டீஸ்பூன்
நெய் – குட்டி டப்பா
பிரியாணி மசாலா பொருட்கள்
புதினா
கொத்தமல்லி
ஒரு பெரிய வெங்காயம்
சீரக சம்பா அரிசி – அரை கிலோ
எலுமிச்சை பழம் – 1
ALSO READ: Food Recipes: தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி செய்வது எப்படி..? சூப்பர் ரெசிபி இதோ!
வெள்ளை பிரியாணி செய்யும் முறை:
- முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் 20 சின்ன வெங்காயம் தோல் எடுத்து சேர்த்துக்கொள்ளவும்.
- அதில், 2 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது, 2 பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் என அனைத்திலும் 2 துண்டுகளை போடவும்.
- தொடர்ந்து, அந்த மிக்ஸி ஜாரில் 1 ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- மற்றொரு பாத்திரத்தில் நன்றாக கழுவி எடுத்துக்கொண்ட சிக்கனில் ஒரு டீஸ்பூன் தயிர், தேவையான அளவு உப்பு, மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்திருந்த மசாலாவை சேர்க்கவும்.
- அனைத்தையும் நன்றாக கலந்தபின் சிக்கனை ஒரு மூடி போட்டு நன்றாக மூடிவிட்டு, 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- அதற்குள், கேஸ் அடுப்பை ஆன் செய்து அதில் ஒரு குக்கரை வைத்து 4 டீஸ்பூன் எண்ணெட், 2 ஸ்பூன் நெய் சேர்க்கவும். இவை சூடானதும் அதில், பிரியாணிக்கு போடப்படும் அன்னாசி பூ உள்ளிட்ட மசாலா பொருட்களை சேர்க்கவும்.
- தொடர்ந்து, ஒரு பெரிய வெங்காயத்தை 4 பீஸாக வெட்டி எண்ணெயில் போட்டு வதக்கவும். பிறகு, புதினா மற்றும் கொத்தமல்லியை போட்டு அதுவும் லேசாக வதங்கியபின், ஊற வைத்திருந்த சிக்கனை போடவும்.
- சிக்கன் போட்டு சிறிது நேரத்திற்குபின் அதிலிருந்து தண்ணீர் வெளியேறும். அப்போது, அந்த குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
- தண்ணீர் சிறிது கொதித்ததும் நன்றாக கழுவி ஊற வைத்திருந்த சீரக சம்பா அரிசையை அதில் போடவும்.
- ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் போதுமானதாக இருக்கும். தண்ணீர் அளவு கூடினால் பிரியாணி குழையவும் வாய்ப்பு அதிகம்.
- அரிசி சேர்த்ததும் அதில் பாதியாக வெட்டிய எலுமிச்சை பழ சாறு, 4 பச்சை மிளகாயை சேர்க்கவும். நன்றாக இவற்றை கலக்கிய பின், குக்கர் மூடி போட்டு மூடி வைக்கவும்.
- சரியாக குக்கரில் இரண்டு விசில் வந்ததும், கேஸை ஆப் செய்து வைக்கவும். விசில் அடங்கியதும் பிரியாணியை திறந்து பார்த்தால் சுவையான வெள்ளை பிரியாணி ரெடி.
தயிர் பச்சடி செய்யும் முறை:
வெள்ளை சிக்கன் பிரியாணிக்கு தயிர் பச்சடி காம்போவும் சூப்பராக இருக்கும். அதற்கு முதலில் 4 பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் நன்றாக வெட்டி கொள்ளவும். ஒரு கப்பில் தயிர் எடுத்துக்கொண்டு அதில் வெட்டி வைத்த பெரிய வெங்காயம், பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கினால் தயிர் பச்சடி ரெடி. உங்களுக்கு வெள்ளரி, மாதுளம் பழம் பிடித்தால் அதையும் தயிர் பச்சடியில் சேர்த்து கொள்ளலாம்.
கொங்கு நாட்டு ஸ்டைலில் இன்று வெள்ளை சிக்கன் பிரியாணி எப்படி செய்தோம் என்று பார்த்தோம். இது ரொம்ப ரொம்ப சிம்பிளான ரெசிபி ஆகும். இது கூட, தயிர் பச்சடி, சிக்கன் தொக்கு, சிக்கன் குழம்பு ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.